அலுமினியம் ஒற்றைகுளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் ஒற்றைக்குளோரைடு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
குளோரிடோவலுமினியம்[1] | |
வேறு பெயர்கள்
அலுமினியம்(I)குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13595-81-8 | |
ChEBI | CHEBI:30131 |
ChemSpider | 4514257 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5359282 |
| |
பண்புகள் | |
AlCl | |
வாய்ப்பாட்டு எடை | 62.43 g·mol−1 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-51.46 கிஜூ மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
227.95 J கி−1 மோல்−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | அலுமினியம் ஒற்றைபுளோரைடு காலியம் ஒற்றைபுளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அலுமினியம் ஒற்றைக்குளோரைடு (Aluminium monochloride, அலுமினியம் மோனோகுளோரைடு) என்பது AlCl என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒர் உலோக ஆலைடு ஆகும். செறிவு மிகுந்த அலுமினியத்தின் உலோகக் கலவையிலிருந்து அலுமினியத்தை உருக்கிப் பிரித்தெடுக்கும் அல்கன் செயல்முறையின் ஒரு படிநிலையில் அலுமினியம் ஒற்றைகுளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. செறிவு மிகுந்த உலோகக் கலவையுடன் அலுமினியம் முக்குளோரைடைக் கலந்து சுமார் 1300°செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது அலுமினியம் ஒற்றைகுளோரைடு வாயு கிடைக்கிறது[2]
- 2[Al]{alloy} + AlCl3{gas} -> 3AlCl{gas}
பின்னர் 900°செ வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டால் இது விகிதச் சமமற்று அலுமினியம் உருகல் மற்றும் அலுமினியம் முக்குளோரைடாக பிரிகிறது.
இம்மூலக்கூறு விண்மீனிடை ஊடகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "chloridoaluminium (CHEBI:30131)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute.
- ↑ Totten, George E.; MacKenzie, D. Scott (2003). Handbook of Aluminum. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-0896-2.
- ↑ J. Cernicharo, M. Guelin (1987). "Metals in IRC+10216 - Detection of NaCl, AlCl, and KCl, and tentative detection of AlF". Astronomy and Astrophysics 183 (1): L10–L12. Bibcode: 1987A&A...183L..10C.