போபால் முகமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
போபால் முகமை
பிரித்தானிய இந்தியாவின் அரசியல் முகமை
1818–1947
Location of
Location of
மத்திய இந்திய முகமையின் வரைபடத்தின் நடுவில் போபால் முகமையின் அமைவிடம்
வரலாற்றுக் காலம் குடிமைப்பட்ட கால இந்தியா
 •  நிறுவப்பட்டது 1818
 •  1947 இந்திய விடுதலை 1947
பரப்பு
 •  1901 30,181 km2 (11,653 sq mi)
Population
 •  1901 11,57,697 
மக்கள்தொகை அடர்த்தி 38.4 /km2  (99.3 /sq mi)
தற்காலத்தில் அங்கம் மத்தியப் பிரதேசம், இந்தியா

போபால் முகமை (Bhopal Agency), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.[1] இதன் தலைமையிடம் போபால் நகரம் ஆகும். 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, போபால் முகமையின் மொத்த பரப்பளவு 30,181 சதுர கிலோ மீட்டர் மற்றும் மக்கள் தொகை 11,57,697 ஆகும்.

வரலாறு[தொகு]

மராத்தியப் பேரரசிற்கு எதிராக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் ஆட்சியாளரகள் நடத்திய மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்திய பேரரசு வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே மராத்தியப் பேரரசில் இருந்த சிற்றரசுகள் அனைத்தும், 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றக்கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இந்த சுதேச சமஸ்தானங்களை நிர்வகிக்க போபால் முகமை 1818-ஆம் ஆண்டில் போபால் முகமை நிறுவப்பட்டது. மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையாளரின் கீழ் போபால் முகமை செயல்பட்டது. போபால் முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1854-ஆம் ஆண்டு முதல் போபால் முகமை, மத்திய இந்திய முகமையின் கீழ் செயல்பட்டது.

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் போபால் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

போபால் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானகளும், ஜமீன்தார்களும்[தொகு]

1931 முடிய போபால் முகமையில் 9 சுதேச சமஸ்தான மன்ன்ர்களும், பல ஜமீன்தார்களும் இருந்தனர்.

சுதேச சமஸ்தானங்கள்[தொகு]

பிரித்தானிய இந்தியாவின் வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்:

  1. போபால் சமஸ்தானம், 19 குண்டு மரியாதை
  2. நரசிங்கர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  3. ராஜ்கர் சமஸ்தானம், 11 குண்டு மரியாதை
  4. கில்ச்சிபூர் சமஸ்தானம், 9 குண்டு மரியாதை

வணக்கமில்லா சுதேச சமஸ்தானங்கள்:

  1. பசோடா சமஸ்தானம்
  2. கோர்வாய் சமஸ்தானம்
  3. மக்சுதன்கர் சமஸ்தானம்
  4. முகமத்கர் சமஸ்தானம்
  5. பதரி சமஸ்தானம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Great Britain India Office. The Imperial Gazetteer of India. Oxford: Clarendon Press, 1908.


"https://ta.wikipedia.org/w/index.php?title=போபால்_முகமை&oldid=3388355" இலிருந்து மீள்விக்கப்பட்டது