உதம்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 33°00′N 75°10′E / 33.000°N 75.167°E / 33.000; 75.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
updated map (GlobalReplace v0.6.5)
வரிசை 1: வரிசை 1:
[[File:Udhampur District.svg|thumb|சம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
[[File:Jammu and Kashmir Udhampur district.svg|thumb|சம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தின் அமைவிடம்]]
'''உதம்பூர் மாவட்டம்''', [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.
'''உதம்பூர் மாவட்டம்''', [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தின் தலைமையிடமான [[உதம்பூர்]] நகரத்திலிருந்து, 53 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற [[வைஷ்ணவ தேவி]] அம்மன் மலைக் கோயிலும், [[ஜம்மு]] நகரமும் அமைந்துள்ளன. மாநிலத் தலைநகரம் [[காஷ்மீர்]] 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகரான [[புதுதில்லி]] 630 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் தலைமையிடமான [[உதம்பூர்]] நகரத்திலிருந்து, 53 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற [[வைஷ்ணவ தேவி]] அம்மன் மலைக் கோயிலும், [[ஜம்மு]] நகரமும் அமைந்துள்ளன. மாநிலத் தலைநகரம் [[காஷ்மீர்]] 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகரான [[புதுதில்லி]] 630 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

17:08, 12 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

சம்மு காஷ்மீர் மாநிலத்தில், உதம்பூர் மாவட்டத்தின் அமைவிடம்

உதம்பூர் மாவட்டம், இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடமான உதம்பூர் நகரத்திலிருந்து, 53 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி அம்மன் மலைக் கோயிலும், ஜம்மு நகரமும் அமைந்துள்ளன. மாநிலத் தலைநகரம் காஷ்மீர் 130 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகரான புதுதில்லி 630 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மாவட்ட எல்லைகள்

2,637 சதுர கிலோ மீட்டர் கொண்ட உதம்பூர் மாவட்டத்தின் வடக்கில் இராம்பன் மாவட்டமும், வடகிழக்கில், தோடா மாவட்டமும், தென்கிழக்கில் கதுவா மாவட்டமும், தென்மேற்கில் சம்பா மாவட்டமும், மேற்கில் ஜம்மு மாவட்டமும், வடமேற்கில் ரியாசி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

போக்குவரத்து வசதிகள்

பேருந்து வசதிகள்

ஜம்மு - காஷ்மீரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 1 எ உதம்பூர் வழியாக செல்கிறது.

உதம்பூர் மாவட்டத்திலிருந்து, சம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து நகரங்களையும் இணைக்க ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தொடருந்து வசதிகள்

இந்திய இரயில்வே, உதம்பூரையும் ஜம்மு, பதான்கோட், கட்ரா, புதுதில்லி, அகமதாபாத், மும்பை, சென்னை, கான்பூர், கோட்டா, சண்டிகர் போன்ற நகரங்களையும் இணைக்கும் தொடருந்துகளை இயக்குகிறது.[1]

மொழிகள்

டோக்கிரி, இந்தி, உருது, ஆங்கிலம், கோஜ்ரி மொழிகளை பேசுகின்றனர்.

ஆறுகள்

உதம்பூர் மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரம் வரை அமைந்துள்ளது. செனாப் ஆறு மற்றும் தாவி ஆறுகள் இம்மாவட்டத்தின் குறுக்கே பாய்கிறது.

இராணுவம்

இந்திய இராணுவத் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு கட்டளை மண்டலங்கள் உதம்பூரில் அமைந்துள்ளதால், இம்மாவட்டம் வடக்கு இந்தியாவின் முக்கிய இராணுவ கேந்திரமாக கருதப்படுகிறது.

நிர்வாகம்

உதம்பூர் மாவட்டம் உதம்பூர், செனானி, இராம்நகர், மஜால்தா, வருவாய் வட்டங்களும், ஏழு ஊராட்சி ஒன்றியங்களும், நாற்பத்தி ஆறு ஊராட்சி மன்றங்களும் கொண்டுள்ளது. [2] [3]

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, உதம்பூர் மாவட்ட மக்கள் தொகை 5,54,985 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 296,784; பெண்கள் 258,201 ஆக உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 210 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 870 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 68.49 விழுக்காடாக உள்ளது. அதில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம்78.36% ஆகவும், பெண்கள் எழுத்தறிவு விகிதம் 57.10% உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 84,332 ஆக உள்ளது. [4] உதம்பூர் மாவட்ட மக்கள் தொகையில் இந்துக்கள் 88.12% விழுக்காடாகவும், இசுலாமியர்கள் 10.77% ஆகவும், கிறித்தவர்கள் 0.35% ஆகவும், சீக்கியர்கள் 0.62% ஆகவும், மற்றவர்கள் 0.14% ஆகவும் உள்ளனர். [5]

இந்திய இராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு கட்டளைப் பிரிவுகள் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்திருப்பதால், இங்கு இராணுவத்தினரின் குடும்பங்கள், கல்வி நிலையங்கள் அதிக அளவில் உள்ளதால், உதம்பூர் மாவட்டத்தின் மக்கள் தொகையில், இராணுவத்தினர் மற்றும் அவர் தம் குடும்பங்களின் பங்கு கணிசமாக உள்ளது.

முக்கிய நகரங்கள்

உதம்பூர், பாட்லி, மன்சர், தாபு, செனானி, நர்சு, தாலொரா, டோமெயில், ராம்கோட் மற்றும் ஜிப் ராம்நகர் உதம்பூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் ஆகும்.

அரசியல்

உதம்பூர் மாவட்டம், உதம்பூர், செனானி மற்றும் இராம்நகர் என மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் தேசிய சிறுத்தைகள் கட்சி முக்கிய அரசியல் கட்சிகளாகும்.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. http://indiarailinfo.com/search/udhampur-uhp-to-jammu-tawi-jat/2819/0/81
  2. http://udhampur.nic.in/pdf/Directory-panchayi%20Raj.pdf
  3. Statement showing the number of blocks in respect of 22 Districts of Jammu and Kashmir State including newly Created Districts dated 2008-03-13, accessed 2008-08-30
  4. Udhampur District : Census 2011 data
  5. http://www.census2011.co.in/census/district/637-udhampur.html
  6. "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=உதம்பூர்_மாவட்டம்&oldid=3105420" இலிருந்து மீள்விக்கப்பட்டது