உள்ளடக்கத்துக்குச் செல்

சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி

ஆள்கூறுகள்: 16°51′38″N 74°33′56″E / 16.860446°N 74.565518°E / 16.860446; 74.565518
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட்
सांगली-मिरज आणि कुपवाड
இரட்டை நகரங்கள்
சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் is located in மகாராட்டிரம்
சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட்
சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°51′38″N 74°33′56″E / 16.860446°N 74.565518°E / 16.860446; 74.565518
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாங்கிலி
நிறுவிய ஆண்டு28 பிப்ரவரி 1998
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி
 • பரப்பளவு தரவரிசை91
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,13,862
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்www.smkc.gov.in

சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி (Sangli-Miraj & Kupwad), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தெற்கில் உள்ள சாங்கிலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். சாங்கிலி, மீரஜ் மற்றும் குப்வாட் ஆகிய நகரங்களைக் கொண்ட இம்மாநகராட்சி கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ளது. இம்மாநகராட்சியின் மீரஜ் பகுதியில் மிரஜ் தொடருந்து நிலையம் உள்ளது.

நிர்வாகம்

[தொகு]

சாங்கிலி, மீரஜ் மற்றும் குப்வாட் நகராட்சிகளை இணைத்து 28 பிப்ரவரி 1998 அன்று சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி நிறுவப்பட்டது.[1]இம்மாநகராட்சி 74 மாமன்ற உறுப்பினர்களையும், மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளரையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1,10,062 வீடுகள் கொண்ட இம்மாநகரத்தின் மக்கள் தொகை 5,02,793 ஆகும். அதில் ஆண்கள் 2,53,640 மற்றும் பெண்கள் 2,49,153 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 73,032 மற்றும் 3,496 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.32%, இசுலாமியர் 21.11%, பௌத்தர்கள் 1.38%, சமணர்கள் 4.32%, சீக்கியர்கள் 0.14%, கிறித்தவர்கள் 1.38% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "City Profile: Sangli-Miraj-Kupwad". National Institute of Urban Affairs, Government of India. Archived from the original on 19 October 2007.
  2. Sangli Miraj Kupwad Population, Religion, Caste, Working Data Sangli, Maharashtra - Census 2011