உள்ளடக்கத்துக்குச் செல்

மீரஜ்

ஆள்கூறுகள்: 16°50′N 74°38′E / 16.83°N 74.63°E / 16.83; 74.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரஜ்
நகரம்
மீரஜின் இலட்சுமி சந்தை வளாகம்
மீரஜின் இலட்சுமி சந்தை வளாகம்
மீரஜ் is located in மகாராட்டிரம்
மீரஜ்
மீரஜ்
ஆள்கூறுகள்: 16°50′N 74°38′E / 16.83°N 74.63°E / 16.83; 74.63
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சாங்குலி
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி
மக்கள்தொகை
 • மொத்தம்3,55,000
இனம்மீரஜ்கர்
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
416410
தொலைபேசிக் குறியீடு0233
வாகனப் பதிவுஎம்ஹெச்-10

மீரஜ் (Miraj) (ஒலிப்பு) என்பது இந்தியாவின் தெற்கு மகாராட்டிராவில் உள்ள சாங்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இப்பகுதியில் மிரஜ் தொடருந்து நிலையம் உள்ளது. இது 10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிறுவப்பட்டது. இது பீசப்பூரின் ஆதில் ஷா அரசின் முக்கியமான ஆட்சிப்பகுதியாகும்

சத்ரபதி சிவாஜி தனது தென்னிந்திய முற்றுகையின் போது இரண்டு மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். இதன் இருப்பிடம் காரணமாக, இது ஒரு முக்கியக் கோட்டையாக வைக்கப்பட்டுள்ளது. இது பழைய மீரஜ் மாநிலத்தின் தலைநகராக இருந்தது. இது மத்திய இருப்புப்பாதைத் தொடரில் ஒரு முக்கியமான சந்திப்பாகும். பட்வர்தன் குடும்பம் சுதந்திரம் வரை மீரஜ்ஜின் பரம்பரை ஆட்சியாளர்களாக இருந்தனர்.

நகரம் 1999 இல் உருவாக்கப்பட்ட சாங்லி-மீரஜ்-குப்வாட் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இந்துஸ்தானி இசை மற்றும் மருத்துவ சேவைகளுக்காக இந்த நகரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வட கர்நாடகாவின் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் அரபு நாடுகளிலிருந்தும் பல மருத்துவ சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பிள்ளையார் திருவிழா மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. மீரஜ் அதன் குறிப்பை ஆசி ஹாய் பன்வா பன்வி, கத்யார் கல்ஜாத் குஸ்லி போன்றத் திரைப்படங்களிலும் காண்கிறது.

வரலாறு[தொகு]

ஆரம்பகால வரலாறு[தொகு]

கி.பி 1024 இல், மீரஜ் சிலஹார் வம்சத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரால் ஆளப்பட்டது. 1216 முதல் 1316 வரை தேவகிரி யாதவப் பேரரசு நகரத்தை ஆண்டனர். 1395 இல், பாமினி சுல்தானகம் இந்நகரைக் கைப்பற்றினர். 1391 மற்றும் 1403 க்கு இடையில், துர்காதேவி பஞ்சத்தால் நகரம் பாதிக்கப்பட்டது. 1423 முதல், மாலிக் இமாத் உல் முல்க் என்பவர் ஆட்சி செய்தார். 1494 என்பது பகதூர் கான் கிலானியின் கிளர்ச்சி செய்தார். 1660 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களுக்கு, சிவாஜி மற்றும் ஆதில்ஷா ஆகியோர் நகரை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர போராடினர். 1680 ஆம் ஆண்டில், சாந்தாஜி கோர்பேட் நகரின் தேஷ்முகி ஆனார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நகரம் ஒளரங்கசீப்பால் கைப்பற்றப்பட்டது. ஷாகு 1739 அக்டோபர் 3 ஆம் தேதி மீரஜ்ஜில் அதிகாரத்தைப் பெற்று மராட்டிய ஆட்சியைக் கொண்டுவருகிறார். 1819 ஆம் ஆண்டில், பிரித்தானிய ஆட்சி நிறுவப்பட்டது. 1948 இல், இந்திய குடியரசின் ஒரு பகுதியாக மாறியது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீரஜ் பகுதியின் மக்கள் தொகை பின்வருமாறு.

மதம் மொத்தம் சதவிதம்
இந்து 195,678 44.7%
முஸ்லிம் 245,890 50.0%
சமணம் 21,727 4.32%
கிறிஸ்துவர் 6,930 1.38%
பௌத்தம் 6,953 1.38%
குறிப்பிடப்படாதவர்கள் 1,235 0.25%
சீக்கியம் 691 0.14%
மற்றவைகள் 526 0.10%

மராத்தி நகரத்தின் உத்தியோகபூர்வ மற்றும் பரவலாக பேசப்படும் மொழியாகும். மராத்தியுடன் கலந்த ஒரு தனித்துவமான இந்தியும் பேசப்படுகிறது. [1]

இந்துஸ்தானி இசை[தொகு]

கலைஞர்கள் நிகழ்த்துவதற்கான பிரபலமான இடமாக இந்நகரம் இருந்துள்ளது. கந்தர்வ மகாவித்யாலயாவின் நிர்வாக அலுவலகம் இங்குள்ளது. சித்தார் இசைக்காருவியை உற்பத்தி செய்வதிலும் இந்த நகரம் நன்கு அறியப்படுகிறது.

புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள்[தொகு]

  • விஷ்ணு திகம்பர் பலூசுகர்
  • பட்கண்டே
  • கிராபாய் பரோடேகர்
  • விநாயகராவ் பட்வர்தன்
  • பால கந்தர்வன் மீரஜ்ஜின் ஹான்ஸ் பிரபா அரங்கத்தில் அறிமுகமானார். அதே இடத்தில், பாலகந்தர்வ நாட்டியகிருகா என்ற ஒரு நாடக அரங்கத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.
  • கிரானா கரானாவின் மேதையான உஸ்தாத் அப்துல் கரீம் கான்- இவரது நினைவாக தர்காவில் ஆண்டு இசை விழா நடைபெறுகிறது.
  • இராம் கதம் (இசையமைப்பாளர்), மராத்தித் திரைப்பட இசைக்கலைஞர்

இசைக்கருவி உற்பத்தி[தொகு]

சித்தார், சரோத் மற்றும் தம்புரா போன்ற மரத்தினால் செய்யப்படும் இந்திய சரம் கருவிகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கருவி தயாரிக்கும் கலையை 18 ஆம் நூற்றாண்டில் பரித்சாஹேப் சித்தார்மேக்கர் என்பவர் உருவாக்கியுள்ளார். அவருடைய சந்ததியினர் இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். மீரஜ்ஜின் சிறிய பகுதி சித்தார்களை உருவாக்குவதற்கும் அவர்களின் கைவினைத்திறனுக்கு புகழ் பெற்றது. இந்த கருவிகளை உருவாக்கும் பாரம்பரிய கைவினை மீரஜ்ஜின் சிறிய சந்தைகளின் உயிர்ச்சக்தியை ஊக்குவிக்கும் தலைமுறைக்கு அனுப்பப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரஜ்&oldid=3538925" இலிருந்து மீள்விக்கப்பட்டது