எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சம்
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 27-வது வம்சம் 𐎸𐎭𐎼𐎠𐎹 (பழைய பாரசீக மொழியில்-Mudrāya) | |||||
எகிப்திய மாகாணம், அகாமனிசியப் பேரரசு | |||||
| |||||
அகாமனிசியப் பேரரசின் மேற்கு மாகாணமாக எகிப்து[1][2][3][4] | |||||
பார்வோன் | |||||
• | கிமு 525-522 | இரண்டாம் காம்பிசெஸ் (முதல்) | |||
• | கிமு 423-404 | இரண்டாம் டேரியஸ் (இறுதி) | |||
வரலாற்றுக் காலம் | அகாமனிசியப் பேரரசுக் காலம் | ||||
• | பெலுசியம் போர் (கிமு 525) | கிமு 525 | |||
• | அமியுர்தயுஸ் புரட்சி | கிமு 404 |
எகிப்தின் இருபத்தி ஏழாம் வம்சத்தினர் (Twenty-seventh Dynasty of Egypt or Dynasty XXVII, alternatively 27th Dynasty or Dynasty 27) ஆண்ட பிந்தைய கால எகிப்தை பாரசீக அகாமனிசியப் பேரரசின் மேற்கு எல்லை மாகாணம் என்றும் அழைப்பர். (First Egyptian Satrapy)[8]இருபத்தி ஏழாவது வம்சத்தினர் கிமு 525 முதல் கிமு 404 முடிய 121 ஆண்டுகள் எகிப்தை ஆண்ட பாரசீகர்கள் ஆவார். இப்பாரசீக வம்ச பேரரசை, அமியுர்தயுஸ் எனும் எகிப்திய மன்னர் கிமு 404-இல் செய்த பெரும் மக்கள் புரட்சி மூலம் எகிப்தில் உள்ள பாரசீகர்களை விரட்டியடித்து, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தை நிறுவினார்.[9]
வரலாறு
[தொகு]கிமு 525-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் இரண்டாம் காம்பிசெஸ், எகிப்தின் இருபத்தி ஆறாம் வம்ச பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்றுவென்று எகிப்தின் பார்வோனாக முடிசூடிக் கொண்டு, எகிப்தை அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆக்கினார். கிமு 404-இல் எகிப்தின் அகாமனிசியப் பார்வோன் இரண்டாம் டேரியஸ் ஆட்சியின் போது, எகிப்திய வம்சத்தின் அமியுர்தயுஸ் என்பவர் பெரும் கிளர்ச்சி செய்து, எகிப்தில் பாரசீக அகமானிசியப் பேரரசின் ஆட்சி நீக்கி, எகிப்தில் இருபத்தி எட்டாம் வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.
27-வது வம்ச பார்வோன்கள்
[தொகு]பார்வோன் பெயர் | உருவம் | ஆட்சிக் காலம் | குறிப்பு | |
---|---|---|---|---|
இரண்டாம் காம்பிசெஸ் | கிமு 525-522 | கிமு 525-இல் எகிப்திய பார்வோன் மூன்றாம் சாம்திக்கை வென்று எகிப்தை கைப்பற்றியவர் | ||
பார்த்தியா | கிமு 522 | சாத்தியமான வஞ்சகர் | ||
மூன்றாம் பெதுபாஸ்திஸ் | கிமு 522/521-520 | அகமானிசியப் பேரரசின் பார்வோனுக்கு எதிராக புரட்சி செய்தவர் | ||
முதலாம் டேரியஸ் | கிமு 522-486 | |||
நான்காம் சாம்திக் | கிமு 480 | அகாமனிசிய பார்வோன்களுக்கு எதிராக புரட்சி செய்தவர் | ||
முதலாம் செர்கஸ் | கிமு 486-465 | |||
அர்தபானஸ் | கிமு 465–464 | முதலாம் செர்கசை கொன்றவர். பின்னர் முதலாம் அர்தசெராக்சால் கொல்லப்பட்டவர். | ||
முதலாம் அர்தசெராக்சஸ் | கிமு 465-424 | |||
இரண்டாம் செராக்சஸ் | கிமு 425-424 | எகிப்தின் அரியணையைக் கோரியவர் | ||
சோக்தியானஸ் | கிமு 424-423 | எகிப்தின் அரியணையக் கோரியவர் | ||
இரண்டாம் டேரியஸ் | கிமு 423-404 | 28=ஆம் வம்ச பார்வோன்கள் |
பண்டைய எகிப்திய வம்சங்கள்
[தொகு]எகிப்திய அரசமரபுகள் மற்றும் ஆட்சிக் காலம் |
---|
அனைத்து ஆண்டுகள் கிமு |
பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
[தொகு]- எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் (கிமு 3150 - கிமு 2686)
- பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181)
- எகிப்தின் முதல் இடைநிலைக் காலம் - (கிமு 2181 - கிமு 2055)
- எகிப்தின் மத்தியகால இராச்சியம் -(கிமு 2055 – கிமு 1650)
- எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் - (கிமு 1650 - கிமு 1580)
- புது எகிப்து இராச்சியம் (கிமு 1550 – 1077)
- எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் - (கிமு 1100 – கிமு 650)
- பிந்தைய கால எகிப்திய இராச்சியம் - (கிமு 664 - கிமு 332)
- கிரேககர்களின் மாசிடோனியாப் பேரரசு -கிமு 332– கிமு 305
- கிரேக்கர்களின் தாலமி பேரரசு - (கிமு 305 – கிமு 30)
- எகிப்து (ரோமானிய மாகாணம்) - கிமு 30 - கிபி 619 மற்றும் கிபி 629 – 641
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Brien, Patrick Karl (2002). Atlas of World History (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 42–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195219210.
- ↑ Philip's Atlas of World History. 1999.
- ↑ Davidson, Peter (2018). Atlas of Empires: The World's Great Powers from Ancient Times to Today (in ஆங்கிலம்). i5 Publishing LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781620082881.
- ↑ Barraclough, Geoffrey (1989). The Times Atlas of World History (in ஆங்கிலம்). Times Books. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0723003041.
- ↑ "a Persian hero slaughtering an Egyptian pharaoh while leading four other Egyptian captives" Hartley, Charles W.; Yazicioğlu, G. Bike; Smith, Adam T. (2012). The Archaeology of Power and Politics in Eurasia: Regimes and Revolutions (in ஆங்கிலம்). Cambridge University Press. p. ix, photograph 4.6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139789387.
- ↑ "Victor, apparently wearing the tall Persian headdress rather than a crown, leads four bareheaded Egyptian captives by a rope tied to his belt. Victor spears a figure wearing Egyptian type crown." in Root, Margaret Cool (1979). The king and kingship in Achaemenid art: essays on the creation of an iconography of empire (in ஆங்கிலம்). Diffusion, E.J. Brill. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004039025.
- ↑ "Another seal, also from Egypt, shows a Persian king, his left hand grasping an Egyptian with an Egyptian hairdo (pschent), whom he thrusts through with his lance while holding four prisoners with a rope around their necks." Briant, Pierre (2002). From Cyrus to Alexander: A History of the Persian Empire (in ஆங்கிலம்). Eisenbrauns. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575061207.
- ↑ electricpulp.com. "ACHAEMENID SATRAPIES – Encyclopaedia Iranica". www.iranicaonline.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.
- ↑ Twenty Seventh Dynasty of Egypt
- ↑ Razmjou, Shahrokh (1954). Ars orientalis; the arts of Islam and the East. Freer Gallery of Art. pp. 81–101.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bresciani, Edda (1998). "EGYPT i. Persians in Egypt in the Achaemenid period". Encyclopaedia Iranica, Vol VIII, Fasc. 3. 247–249.
- Colburn, Henry P. (2017). "KHARGA OASIS". Encyclopaedia Iranica.
- Persian Period from the UCLA Encyclopedia of Egyptology