ஹொஜாய்

ஆள்கூறுகள்: 26°00′N 92°52′E / 26.0°N 92.87°E / 26.0; 92.87
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொஜாய்
நகரம்
ஹொஜாய் is located in அசாம்
ஹொஜாய்
ஹொஜாய்
அசாம் மாநிலத்தில் ஹொஜாய் நகரத்தின் அமைவிடம்
ஹொஜாய் is located in இந்தியா
ஹொஜாய்
ஹொஜாய்
ஹொஜாய் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°00′N 92°52′E / 26.0°N 92.87°E / 26.0; 92.87
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்நடு அசாம் கோட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹோஜாய் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்21.219 km2 (8.193 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்36,638
 • அடர்த்தி1,700/km2 (4,500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி[1]
 • அதிகம் பேசப்படுவதுசில்ஹெட்டி மொழி
வட்டார மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
782435
Area code+91-3674
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 31
இணையதளம்hojai.assam.gov.in

ஹொஜாய் (Hojai), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் நடு அசாம் கோட்டத்தில் உள்ள ஹொஜாய் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இது நடு அசாம் கோட்டத்தின் தலைமையிடமான நகோன் நகரத்திற்கு தெற்கே 53.7 கிலோ மீட்டரும்; கவுகாத்திக்கு கிழக்கே 168.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறுகளான கபிலி மற்றும் ஜமுனா ஆறுகளின் கரையில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 19 வார்டுகளும், 7,049 வீடுகளும் கொண்ட ஹொஜாய் நகரத்தின் மக்கள் தொகை 36,638 ஆகும். அதில் ஆண்கள் 18,762 மற்றும் பெண்கள் 17,876 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 953 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,158 மற்றும் 197 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.11%, இசுலாமியர் 81.11%, சீக்கியர்கள் 0.27% மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.[3]

மொழிகள்[தொகு]

ஹொஜாய் நகரத்தில் வங்காள மொழி 69.6%, இந்தி மொழி 16%, அசாமிய மொழி 9.5%, மைதிலி மொழி 1.6% திமாசா மொழியை 1.5% பிற மொழிகளை 2.6% பேரும் பேசுகின்றனர்.[4]

போக்குவரத்து[தொகு]

ஹோஜாய் தொடருந்து நிலையம்

அருணாச்சலப் பிரதேசத்தின் லாம்டிங் நகரத்தையும், அசாமின் கவுகாத்தி நகரத்தை இணைக்கும் இருப்புப் பாதை ஹொஜாய் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  2. "Assam gets five more districts". Zee News. 15 August 2015.
  3. Hojai Population, Religion, Caste, Working Data - Assam - Census 2011
  4. "C-16 Population By Mother Tongue - Hojai (MB)". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 14 January 2020.
  5. Hojai railway station
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொஜாய்&oldid=3842723" இலிருந்து மீள்விக்கப்பட்டது