உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிதிவி சிங் ஆசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிதிவி சிங் ஆசாத்
பவநகரில் பிரிதிவி சிங் ஆசாத்தின் மார்பளவு சிலை
பிறப்பு(1892-09-15)15 செப்டம்பர் 1892
இலால்ரு கிராமம், பட்டியாலா மாவட்டம், பஞ்சாப்
இறப்பு5 மார்ச்சு 1989(1989-03-05) (அகவை 96)
இந்தியா
பணிஇந்தியச் சுதந்திர வீரர்
செயற்பாட்டுக்
காலம்
1907–1989
அறியப்படுவதுஇந்திய விடுதலை இயக்கம்
லாகூர் சதி வழக்கு
துணைவர்மறைந்த பிரபாவதி ஆசாத் தேவி
பிள்ளைகள்அஜித் சிங் பதி
விருதுகள்பத்ம பூசண்

பிருத்வி சிங் ஆசாத் (Prithvi Singh Azad) (1892-1989) இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், புரட்சியாளரும் கதர் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவருமாவார். சிற்றறைச் சிறையில் உட்பட, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இவர் பல முறை சிறைவாசம் அனுபவித்தார். சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 1977 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் கௌரவத்தை இவருக்கு வழங்கியது. [1]

சுயசரிதை

[தொகு]

இவர் 1892 செப்டம்பர் 15 ஆம் தேதி வட இந்திய மாநிலமான பஞ்சாபின் மொகாலி மாவட்டத்தில் உள்ள இலால்ரு என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். ஒரு ராஜபுத்திரரான இவர், தலித்துகளின் மேம்பாட்டிற்காக நிறைய பணிகளை செய்தார். இவர் இளம் வயதிலேயே தேசியவாத இயக்கத்தில் ஈர்க்கப்பட்டார். மேலும் 1907–08ல் பிரித்தானிய அரசாங்கத்தால் பால கங்காதர திலகரும், குதிராம் போசும் கைது செய்யப்பட்டதில் இவர் செல்வாக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர் 1912 இல் அமெரிக்காவிற்குச் சென்றார். இந்த சமயத்தில் தான் இந்தியாவின் விடுதலைக்காக வட அமெரிக்காவில் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க்குணமிக்க அமைப்பான பிற்கால கதர் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான லாலா ஹர் தயாலை சந்தித்தார். கட்சியின் ஊதுகுழலான இந்துஸ்தான் கதரை நிறுவுவதற்கும் இவர் உதவினார். சுமார் 150 சுதந்திரப் போராளிகளுடன் இந்தியாவுக்குத் திரும்பிய இவர், 1914 திசம்பர் 7 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் . மேலும், கொல்கத்தா, சென்னை, அந்தமான் சிற்றறைச் சிறை உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் கழித்தார். [2] ஆரம்ப பயனற்ற முயற்சிக்குப் பிறகு, இவர் ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றப்படும்போது ஓடும் இரயிலில் இருந்து குதித்து தப்பினார். பின்னர், இவர் சந்திர சேகர் ஆசாத்தின் கூட்டாளியானார். மேலும் அவரிடமிருந்து ஒரு மவுசர் துப்பாக்கியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிப்ரவரி 27, 1931 அன்று ஆல்பிரட் பூங்காவில் பிரித்தானிய படைகள் இவரைச் சுற்றி வளைப்பதற்கு சற்று முன்பு சந்திர சேகர் ஆசாத்துடன் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பிந்தையவர் இவரை தப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்; [3] மாற்றாக மற்றொரு வாதம் என்னவென்றால், சந்திர சேகர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இரண்டு ஆசாதுகளும் ஆல்பிரட் பூங்காவில் சந்தித்தனர். [4]

பாவ்நகரில் பிருத்விசிங் ஆசாத்தின் மார்பளவு

சந்திர சேகர் தான் இவரை மேலதிக பயிற்சிக்காக உருசியாவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்; இவரை உருசியாவிற்கு அனுப்பும் யோசனை உண்மையில் மற்றொரு தியாக புரட்சியாளரான பகத் சிங்கிடமிருந்து வந்தது என்றும் சந்திர சேகர் பகத்சிங்கின் கோரிக்கையை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. [4] சில மாதங்கள் இருந்த இவரது அனுபவங்கள் பின்னர் லெனின் கே தேசம் மீ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன. பின்னர் விஜய் சவுகான் என்பவர் ஆங்கிலத்தில் பிரித்வி சிங் ஆசாத் லெனின்ஸ் லேன்ட் என்றப் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தியா திரும்பியதும், மகாத்தமா காந்தி உட்பட பல முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களை சந்தித்து காந்தி தலைமையிலான தேசியவாத இயக்கத்தில் சேர்ந்தார்.1933 மற்றும் 1947 இல் இந்திய சுதந்திரத்திற்கு இடையில், இவர் பல முறை கைது செய்யப்பட்டார். அதில் லாகூர் சதி வழக்கு அடங்கும். அதில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; இந்த தண்டனை பின்னர் சிற்றறைச் சிறையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. [5] இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் பஞ்சாபிலிருந்து இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடு வெற்றி பெற்றார். மேலும் 1946 திசம்பர் 9 அன்று புதுதில்லியில் உள்ள அரசியலமைப்பு விடுதி மாளிகையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதன்முறையாக கூடியதிலிருந்து அதன் உறுப்பினராக இருந்தார். இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, பீம் சென் சச்சார் 1949 இல் பஞ்சாபின் இரண்டாவது முதல்வராக பொறுப்பேற்றபோது இவர் தொழிலாளர் மற்றும் உள்ளாட்சி சுய-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சகத்தின் ஒரே தலித் உறுப்பினராக இருந்தார். 1977 ஆம் ஆண்டில் பத்ம பூசண் கௌரவத்துடன் இந்திய அரசு இவரை கௌரவித்தது. [1]

இறப்பும், மரியாதையும்

[தொகு]

இவர் 5 மார்ச் 1989 அன்று தனது 96 வயதில் இறந்தார். இவரது வாழ்க்கையின் கதை இரண்டு சுயசரிதைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது; கிரந்தி பாத் கா பாத்திக் (புரட்சிகர பாதையில் ஒரு பயணி), 1990 இல் அரியானா சாகித்ய அகாடமி வெளியிட்டது. பாபா பிருத்வி சிங் ஆசாத், த லெஜன்டரி குரூசடர் என்பதை பாரதிய வித்தியா பவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 1987 இல் வெளியிடப்பட்டது. இவரது வாழ்க்கை தொடர்பான ஆவணங்களின் தொகுப்பு புது தில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் பாபா பிருத்வி சிங் ஆசாத் பேப்பர்களாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இவரது சொந்த ஊரான இலால்ருவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு இவரது பெயரான பாபா பிருத்வி சிங் ஆசாத் நினைவு மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டுள்ளது. [6] இவரது மகள் பிரக்யா குமார், என்பவர் சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாக இருக்கிறார்.[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  2. "Ghadari Babas in Kalapani Jail" (PDF). Punjab State Education Board. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  3. "Shaheed Chandra Shekhar Azad". Punjab Junta. 27 February 2015. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  4. 4.0 4.1 Chinmohan Sehanavis (October 2007). "Impact of Lenin on Bhagat Singh's Life". Mainstream XLV (42). http://www.mainstreamweekly.net/article351.html. 
  5. Vasant Teraiya (3 March 2016). "Padmabhushan Baba Prithvi Singh Azad The Legendary Crusader". யூடியூப். Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Name Lalru CHC after freedom fighter: Residents". The Tribune. 12 September 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  7. "Prithvi Singh Azad's daughter donates land". The Tribune. 17 March 2005. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிதிவி_சிங்_ஆசாத்&oldid=3767551" இலிருந்து மீள்விக்கப்பட்டது