தெகியாஜூலி

ஆள்கூறுகள்: 26°42′N 92°30′E / 26.7°N 92.5°E / 26.7; 92.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெகியாஜூலி
நகரம்
தெகியாஜூலி is located in அசாம்
தெகியாஜூலி
தெகியாஜூலி
அசாம் மாநிலத்தில் தெகியாஜூலி நகரத்தின் அமைவிடம்
தெகியாஜூலி is located in இந்தியா
தெகியாஜூலி
தெகியாஜூலி
தெகியாஜூலி (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°42′N 92°30′E / 26.7°N 92.5°E / 26.7; 92.5
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்வடக்கு அசாம் கோட்டம்
மாவட்டம்சோணித்பூர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தெகியாஜூலி நகராட்சி
ஏற்றம்100 m (300 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்21,579
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண் -->784110
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS

தெகியாஜூலி (Dhekiajuli) வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் வடக்கு கோட்டத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்திலுள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. இது மாநிலத் தலைமையிடமான கவுகாத்திக்கு வடகிழக்கில் 128.3 கிலோ மீட்டரும், கோட்டத் தலைமையிடமான தேஜ்பூருக்கு மேற்கில் 33.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தைச் சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 10 வார்டுகளும், 4,767 வீடுகளும் கொண்ட தெகியாஜூலி நகரத்தின் மக்கள் தொகை 21,579 ஆகும். அதில் ஆண்கள் 11,097 மற்றும் பெண்கள் 10,482 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 945 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,879 மற்றும் 362 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 86.26%, இசுலாமியர் 9.96%, பௌத்தர்கள் , சமணர்கள் , சீக்கியர்கள் 0.28%, கிறித்தவர்கள் 3.22 மற்றும் பிறர் 0.9% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து[தொகு]

அருணாச்சலப் பிரதேசத்தின் நாகார்லாகுன் - கவுகாத்தி செல்லும் தொடருந்துகள் தெகியாஜூலி சாலை தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெகியாஜூலி&oldid=3584414" இலிருந்து மீள்விக்கப்பட்டது