சத்யாத்ம தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யாத்ம தீர்த்தர்
2014இல் சத்யாத்ம தீர்த்தர்
பிறப்பு(1973-03-08)8 மார்ச்சு 1973
மும்பை, மகாராட்டிரம்
இயற்பெயர்சர்வஜ்னர்
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்அபிநவ ரகோத்தமர்
நிறுவனர்விஸ்வ மத்வ மகா பரிஷத்
தத்துவம்துவைத வேதாந்தம்
குருசத்யபிரமோத தீர்த்தர்

சத்யாத்ம தீர்த்தர் (Satyatma Tirtha) இவர் ஓர் இந்திய இந்து மதத் தத்துவவாதியும், குருவும், ஆய்வாளரும், ஆன்மீகத் தலைவரும், துறவியும், தென்னிந்தியாவில் துவைத வேதாந்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மடமான உத்திராதி மடத்தின் தற்போதைய தலைவருமாவார். [1] துவைதத் தத்துவத்திற்கு புத்துயிர் அளித்தவரான மத்துவாச்சாரியருக்குப் பிறகு இவர் உத்திராதி மடத்தின் 42 வது தலைவராவார். [2] [3] [4] மேலும், இவர் விஸ்வ மத்வ மகா பரிஷத் என்பதையும் நிறுவியுள்ளார். [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர்,1973 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி பண்டிட் ரங்காச்சார்யா குட்டல் மற்றும் கே.எஸ். ருக்மாபாய் ஆகியோருக்கு இந்தியாவின் மகாராட்டிராவின் மும்பையில் சர்வஜனர் என்றப் பெயரில் பிறந்தார். [1] [6] பண்டிட் ரங்காச்சார்யர் சத்யப்பிரமோதா தீர்த்தரின் மகன் பர்வராமன் (சன்னியாச ஒழுங்கிற்கு முந்தைய பெயர்) ஆவார். [7]

சன்னியாசம்[தொகு]

இவர் தனது 23 வயதில், 24 ஏப்ரல் 1996 அன்று சத்தியப்பிரமோத தீர்த்தரின் முன்னிலையில் திருக்கோயிலூர் (தமிழ்நாடு) இரகோத்தம தீர்த்த பிருந்தாவனத்தில் பிரம்மச்சரியதிலிருந்து சந்நியசியானர். [8] இவருக்கு சத்யாத்ம தீர்த்தர் என்ற பெயரிடப்பட்டது. இவர் பிரம்மச்சாரியாக இருந்து நேரடியாக சன்யாசத்தைப் பெற்றதால் அபிநவ ரகோத்தமா தீர்த்தர் என்றும் அழைக்கப்படுகிறார் இவ்வாறு நேரடியாக சந்நியாசம் பெற்ற மடத்தின் இரண்டாவது தீர்த்தராவார்.

சமுதாயப் பொறுப்பு[தொகு]

இவர், உத்திராதி மடத்தின் மூலம், நீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை நிபுராண, இந்தியாவின் நீர் மனிதனும், ரமோன் மாக்சேசே விருததினை வென்றவருமான ராஜேந்திர சிங் என்பவரை நீர் பாதுகாப்பு மற்றும் பிற தலைப்புகளில் சொற்பொழிவு செய்ய ஊக்குவித்தார். [9] மடத்தின் மூலமாக, விஸ்வ மத்வ மகா பரிஷத்துடன் இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் மாணவர்களுக்கு ரூ .5.00 லட்சம் (சுமார் 10,000 அமெரிக்க டாலர்) உதவி செய்வதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். [10]

வெள்ள நிவாரணம்[தொகு]

2009 வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பெல்லாரி, பிஜாப்பூர், ராய்ச்சூர் மற்றும் பாகல்கோட் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். மேலும் வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 குறைந்த கட்டண வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தார். [11] கிராமத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக கர்நாடகாவின் ராய்ச்சூரில் உள்ள கிராமத்தையும் இவர் ஏற்றுக்கொண்டார் [12] .

ஆன்மீக சொற்பொழிவுகள்[தொகு]

இவரது ஆன்மீக சொற்பொழிவுகள் பெரிய கூட்டங்களை ஈர்க்கின்றன. முக்கியமாக மத்துவாச்சார்யரைப் பின்பற்றுபவர்களிடமிருந்து, அவர் வேத பாடங்கள் பற்றிய பேச்சுகளில் நிபுணத்துவம் பெற்றவர். [13] பெங்களூரு, [14] குல்பர்கா, மல்கெடா, உடுப்பி, ராஜமன்றி, ஐதராபாத், [12] புனே, [15] ராய்ச்சூர், தார்வாடு மற்றும் சென்னை போன்ற பல இடங்களில் ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார். ஆளுமை மேம்பாட்டுத் திட்டங்களையும் நடத்திய இவர் ஆளுமை மேம்பாடு, மதம் மற்றும் தத்துவம் போன்ற தலைப்புகளில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். [16] உத்திரதி மடத்தின் தற்போதைய தலைவரான இவர், மற்ற ஆசிரியர்களையும் மத அனுபவங்கள் குறித்த புத்தகங்களை எழுத ஊக்குவித்துள்ளார். [17]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Sharma 2000.
 2. "For Preservation of Dharma". The Hindu (Hyderabad). 5 March 2003 இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030701135420/http://www.hindu.com/thehindu/mp/2003/03/05/stories/2003030500370200.htm. பார்த்த நாள்: 5 September 2012. 
 3. "City plays host to Uttaradi pontiff's religious rite". The Times of India (Pune). 4 September 2008 இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214111145/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-04/pune/27934919_1_chaturmasya-blood-donation-camps-sankalpa. பார்த்த நாள்: 16 September 2012. 
 4. Naqvī & Rao 2005.
 5. Ṣaṣṭyabdasaṃskr̥tam: India. https://books.google.co.in/books?id=6-oTrf_Q4I8C. 
 6. Math, Shri Uttaradi. "Shri Satyatma Tirta". Shri Uttaradi Math. uttaradimath.org. Archived from the original on 8 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 September 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 7. "Sri Satyatma Tirtha Biography". Uttaradi Math.
 8. Math, Shri Uttaradi. "Shri Satyatma Tirta". Shri Uttaradi Math. uttaradimath.org. பார்க்கப்பட்ட நாள் 5 September 2012.
 9. Express News Service, newindianexpress.com (13 August 2012). "Save Arkavathi, Kumudvathi basins, says Rajendra Singh". The New Indian Express. http://newindianexpress.com/cities/bangalore/article588331.ece?service=print. பார்த்த நாள்: 5 September 2012. 
 10. correspondent, Staff (12 October 2009). "Math to construct houses for flood affected". The Hindu இம் மூலத்தில் இருந்து 15 அக்டோபர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091015025729/http://www.hindu.com/2009/10/12/stories/2009101252250300.htm. பார்த்த நாள்: 5 September 2012. 
 11. correspondent, Staff (12 October 2009). "Math to construct houses for flood affected". The Hindu. http://www.hindu.com/2009/10/12/stories/2009101252250300.htm. பார்த்த நாள்: 5 September 2012. 
 12. 12.0 12.1 "For Preservation of Dharma". The Hindu (Hyderabad). 5 March 2003. http://www.hindu.com/thehindu/mp/2003/03/05/stories/2003030500370200.htm. பார்த்த நாள்: 5 September 2012. 
 13. staff reporter, thehindu.com (3 February 2012). "Protect Vedic Dharma, Youth told". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/article2856107.ece. பார்த்த நாள்: 5 September 2012. 
 14. thehindu.com (7 August 2012). "Spiritual Discourse". The Hindu, Bangalore. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article3736314.ece. பார்த்த நாள்: 5 September 2012. 
 15. Times news network (4 September 2008). "City plays host to Uttaradi pontiff's religious rite". The Times of India (Pune) இம் மூலத்தில் இருந்து 14 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214111145/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-04/pune/27934919_1_chaturmasya-blood-donation-camps-sankalpa. பார்த்த நாள்: 16 September 2012. 
 16. MyLib.in: Online Book Library in Bangalore, Corporate Library solutions
 17. Prasad, PVRK (IAS). When I saw Tirupati Balaji. https://books.google.com/books?id=C26lbOuDIbYC&pg=PA315&lpg=PA315&dq=satyatma+tirtha#q=humble%20offering. பார்த்த நாள்: 19 September 2012. 

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யாத்ம_தீர்த்தர்&oldid=3778020" இலிருந்து மீள்விக்கப்பட்டது