விக்கிப்பீடியா பேச்சு:தவறான வழிமாற்று நெறிப்படுத்தல் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தி எதிர்ப்புப் போராட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

[1] en:Wikipedia:Redirects_for_discussion/Log/2014_May_6#Varnasrama

மேலுள்ள இணைப்புகளில் நடந்த உரையாடல்களின் படி விக்கிப்பீடியாவில் தவறான தலைப்பிலோ தவறாக பொருள் தரும் விதமோ வழிமாற்றங்கள் அமையக் கூடாது. அப்படி அமைந்தால் அவை இப்பக்கத்துக்கு வழிமாற்றப்படும்.

எடுத்துக்காட்டுக்கு தமிழகத்தில் இந்தித்திணிப்பை எதிர்த்தே தமிழகத்தவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனப் பரவலாக ஊடகங்களில் இது அடையாளப்படுத்தப் படுவதால் தமிழகத்தவர்கள் ஏதோ இந்தி எனும் மொழியையே எதிர்த்ததாக தவறாக பொருள்படலாம். அதனால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்னும் தலைப்பை இப்பக்கத்துக்கு வழிமாற்றுகிறோம்.

இதே போல் தவறான பொருள் தரும் தலைப்புகளை எல்லாம் இங்கு வழிமாற்றலாம். இதைப் போல் தவறாக வழிமாற்றப்படும் தலைப்புகளை தலைப்பு தொடர்பான விவாதங்களில் இறங்குவோர் இப்பக்கத்துக்கு வழிமாற்றும் முன் அதை இப்பக்கத்தில் பட்டியல் இடவேண்டும். இதனால் தாங்கள் தேடிவந்த பக்கம் எங்குள்ளது என பயனர்கள் எளிமையாக அறிந்து கொள்வர். பின்னர் தவறான தலைப்புகள் உள்ள பக்கங்களை நிர்வாகிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று பூட்டச் செய்யலாம்.

கொள்கை தொடர்பான உரையாடல்கள்[தொகு]

பயனர்:Rsmn பயனர்:Kanags போன்ற பயனர்களும் மற்ற பயனர்களும் இங்கே கருத்திட வேண்டுகிறேன். ஒருமித்த கருத்தமைந்தால் மேலுள்ளதைத் தொகுத்து கொள்கைப் பக்கத்துக்கு கொண்டு செல்லவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:20, 21 நவம்பர் 2014 (UTC)

உங்கள் வழிமாற்று எனது ஆட்சேபணைக்குத் தீர்வாக உள்ளது. இதற்காக தனியாக கொள்கைப் பக்கம் தேவையா எனத் தெரியவில்லை. மேலும் இது வேறொரு பண்டோராவின் பெட்டியைத் திறந்து விடாதிருக்க வேண்டும் :) --மணியன் (பேச்சு) 03:44, 22 நவம்பர் 2014 (UTC)

கொள்கை தேவை தான். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற ஊடகங்கள் பயன்படுத்துவதைப் பார்த்து வட இந்தியர் ஒருவர் என்னிடம் ஏன் இந்தியை எதிர்க்கிறீர்கள் எனக் கேட்கிறார். நீங்கள் இந்தியை எதிர்ப்பதாக நேரில் பார்த்தீர்களா எனக் கேட்டேன். நான் ஊடகத்தில் பார்த்தேன் என்கிறார். பின்பு நான் விளக்கம் தந்ததும் கருத்தை மாற்றிக்கொண்டார். இதே போல் தான் இராசீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை இராசீவ் கொலையாளிகள் என்பதும். இன்னொருவர் முதல் பக்கத்தில் "இலஞ்சத்தை ஒழிக்க துவங்கப்பட்ட xxxx கட்சி" என இற்றைப்படுத்துகிறார். இவை எல்லாம் ஊடக மாயை. நமக்கே தெரியாமல் உங்களிடமும் என்னிடமும் இருக்கலாம். இதைப் போல் விக்கிப்பீடியாவில் எழுதப்படுவதில்லை. எழுதப்பட்டால் அடையாளம் காட்டப்பட வேண்டும். தீவிரவாதிகள் என்று கருதப்படுவோர் என்ற நடுநிலைப் பெயருடன் தான் விக்கியில் பகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

//இது வேறொரு பண்டோராவின் பெட்டியைத் திறந்து விடாதிருக்க வேண்டும் :) //

பெட்டியைத் திறக்கும். ஆனால் அது பண்டோராவுடையது அல்ல. தீர்வுகளை தரும் அரோகரா பெட்டி என்பது என் துணிபு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:49, 22 நவம்பர் 2014 (UTC)

ஆ.வி சுட்டி பிழையாக உள்ளதா? தவறான வழிமாற்று நெறிப்படுத்தல் கொள்கைக்கு ஆதரவு. இது பற்றிய தெளிவாக கொள்கை பக்கத்தில் வரையறுக்க வேண்டும். --AntonTalk 20:16, 29 நவம்பர் 2014 (UTC)
இந்த ஆங்கில விக்கி கொள்கையைப் பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால், நிறைய கொள்கைகளை வகுத்துக் கொண்டு போகாமல் ஆங்காங்கே (case by case) குறிப்புகள் மூலம் தீர்க்க முடிந்தால் நன்றாக இருக்கும்.--இரவி (பேச்சு) 05:49, 30 நவம்பர் 2014 (UTC)

//நிறைய கொள்கைகளை வகுத்துக் கொண்டு //

தற்போது கட்டுரை எண்ணிக்கை இக்கொள்கை தொடர்பாக குறைவாக இருப்பதால் அப்படித் தெரியலாம். இதைப் போல் 20, 30 கட்டுரைகளுக்கு மேல் உள்ளன. நேரம் கிடைக்கும் போது அதை வழிமாற்றுகிறேன். அப்போது நீங்கள் இதன் அவசியத்தை புரிந்து கொள்ளலாம். இல்லை என்றால் இக்கொள்கையின் கீழ் வரும் பக்கங்கள் ஒரு 50ஐ தாண்டிய பிறகு நாம் இதைப் பற்றிப் பேசுவோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:57, 30 நவம்பர் 2014 (UTC)