பி. எச். பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. எச். பாண்டியன் (P. H. Pandian) ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார்.[1][2] பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். 1989இல் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார்[3]. இவரது மகன் மனோஜ் பாண்டியனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எச்._பாண்டியன்&oldid=2693189" இருந்து மீள்விக்கப்பட்டது