கே. ஏ. மதியழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Mathiazhagan.jpg

கே. ஏ. மதியழகன் (பி. டிசம்பர் 7, 1926 - இ. ஆகஸ்ட் 17, 1983) தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு அமைச்சராக பணியாற்றியவர். 1971-72 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர். தி.மு.கவில் அறிஞர் அண்ணாவின் நெருங்கிய துணையாகவும் இயக்கத்திற்கு தூணாகவும் இருந்தவர்.பின்னாளில் எம்.ஜி.ஆர் தி.மு.கழகத்திலிருந்து பிரிந்தபோது அவருடன் சென்ற முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மதியழகன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கணியூரில் திராவிடப் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது தம்பி மறைந்த அ.தி.மு.கத் தலைவர் கே. ஏ. கிருஷ்ணசாமி ஆவார்.

அரசியலில்[தொகு]

திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தார். அவரது தமிழ் பேச்சுத்திறமை அண்ணா, மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் ஆகியோருடையது போன்று தி.மு.க வளர்ச்சிக்கு வித்திட்டது. தி.மு.க பிளவுபட்டு எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியபோதும் அவருடன் இணைந்து துணை நின்றார். 1971ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அவரது எம். ஜி. ஆர் ஆதரவினைக் கருத்தில்கொண்டு ஒரே நேரத்தில் அவைத்தலைவரான அவரும் அப்போதைய துணைத்தலைவர் சீனிவாசனும் வீற்றிருந்து எதிர் மறையான ஆணைகளைப் பிறப்பித்தது பேரவை வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._மதியழகன்&oldid=2306168" இருந்து மீள்விக்கப்பட்டது