திராவிடநாடு (இதழ்)
திராவிடநாடு 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த வார இதழ் 1942 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடங்கியவர், ஆசிரியர் தமிழக முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரை ஆவார். திராவிடர் விடுதலை, தமிழ் உணர்வு ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு திராவிட நாடு இதழ் தொடங்கப்பட்டது. இது திராவிடத் தனிநாடு பற்றியும், காங்கிரசார் பற்றியும், தமிழர்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டது.
இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது. அதற்குப் பின்னர் அண்ணாதுரை காஞ்சி என்னும் பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார். இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சான்றுகள்
[தொகு]- பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள், பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து, பக்கம் 3240
- தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி, ஆசிரியர் அ. மா.சாமி