சவந்த்வாடி தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவந்த்வாடி தாலுகா (SAWANTWADI taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் சாவந்த்வாடி நகரம் ஆகும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 நகராட்சி மன்றம், 2 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 82 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [2] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இத்தாலுகா சாவந்த்வாடி சமஸ்தானத்தில் இருந்தது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 147,466 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 72,944 மற்றும் பெண்கள் 74,522 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 12426 - 8% ஆகும். சராசரி எழுத்தறிவு 86.71% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 8,350 மற்றும் 1,061 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92%, இசுலாமியர்கள் 3.98%, பௌத்தர்கள் 0.44%, கிறித்துவர்கள் 3.26% மற்றும் பிறர் 0.32% ஆக உள்ளனர். இதன் பெரும்பான்மையான பேச்சு மொழி மராத்தி மொழி ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவந்த்வாடி_தாலுகா&oldid=3536896" இலிருந்து மீள்விக்கப்பட்டது