நசீரா

ஆள்கூறுகள்: 26°55′N 94°44′E / 26.92°N 94.73°E / 26.92; 94.73
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசீரா
நகரம்
நசீரா is located in அசாம்
நசீரா
நசீரா
அசாம் மாநிலத்தில் நசீரா நகரத்தின் அமைவிடம்
நசீரா is located in இந்தியா
நசீரா
நசீரா
நசீரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°55′N 94°44′E / 26.92°N 94.73°E / 26.92; 94.73
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்மேல் அசாம்
மாவட்டம்சிவசாகர் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்நசீரா நகராட்சி
ஏற்றம்132 m (433 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,304
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண் -->785685
வாகனப் பதிவுAS

நசீரா (Nazira), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் கிழக்கு அசாம் கோட்டத்தில் அமைந்த சிவசாகர் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடம் சிவசாருக்கு 18 கிலோ மீட்டர் தொலைவிலும்; அசாம் மாநிலத் தலைநகரம் குவாகாத்திக்கு வடகிழக்கில் 364 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேஜ்பூருக்கு வடகிழக்கில் 222 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் எண் 27 மற்றும் 715 இந்நகரத்தின் வழியாகச் செல்கிறது. இதன் அருகில் அமைந்த வானூர்தி நிலையம் 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட் நகரத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிமலுகுரியில் உள்ளது[1]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 10 வார்டுகளும், 3,241 வீடுகளும் கொண்ட நசீரா நகரத்தின் மக்கள் தொகை 13,304 ஆகும். அதில் ஆண்கள் 6,885 மற்றும் பெண்கள் 6,419 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 932 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 92.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,089 மற்றும் 402 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.69%, இசுலாமியர் 22.23%, பௌத்தர்கள் 0.33%, சீக்கியர்கள் 0.25%, கிறித்தவர்கள் 0.44% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[2]

பொருளாதாரம்[தொகு]

நசீரா நகரம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகள் கொண்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீரா&oldid=3583804" இலிருந்து மீள்விக்கப்பட்டது