கல்தாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழ் கல்தா குளம்
கல்தாஜியில் உள்ள ஸ்ரீ ஞான கோபால் ஜி கோவில்

கல்தாஜி (Galtaji) என்பது இந்திய மாநிலமான இராசத்தானிலுள்ள செய்ப்பூரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு பண்டைய இந்து யாத்திரை தளமாகும். செய்ப்பூரைச் சுற்றியுள்ள மலைகளின் வளையத்தில் ஒரு குறுகிய பள்ளத்தில் கட்டப்பட்ட கோயில்களின் வரிசையை இந்த தளம் கொண்டுள்ளது. ஒரு இயற்கை நீரூற்று மலையின் மீது உயரமாக வெளிப்பட்டு கீழ்நோக்கி பாய்ந்து, பக்தர்கள் நீராடும் புனித குளங்களை நிரப்புகிறது. பார்வையாளர்களும் யாத்ரீகர்களும் பிளவுகளில் ஏறிச் செல்லலாம். உயரமான நீர்க் குளத்தைத் தாண்டி மலை உச்சியில் உள்ள கோயிலுக்கும் செல்லலாம். அங்கிருந்து செய்ப்பூரின் காட்சிகள் மற்றும் அதன் கோட்டைகள் பள்ளத்தாக்கு தளம் முழுவதும் கண்டு களிக்கலாம். கலாவ் என்ற துறவி இங்கு வாழ்ந்ததாகவும், தியானம் செய்ததாகவும், தவம் செய்ததாகவும் நம்பப்படுகிறது. [1]

சிறீ கல்தா பீடம்[தொகு]

கல்தாஜி வாயில்

ஆரவல்லி மலைகளில் செய்ப்பூரின் கிழக்கே 10 கிமீ தொலைவில் உள்ள மலைப்பாதையில் இது கட்டப்பட்டுள்ளது. [2] 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கு வாழ்ந்த இராமாநந்தரின் இராமானந்த சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர். [3] [1] இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்றிய யோகி பயஹரி கிருஷ்ணதாஸ் என்பவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. [4] அவர், 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கல்தாவுக்கு வந்து, அந்த இடத்தில் இருந்த முந்தைய யோகிகளுக்குப் பதிலாக கல்தா காடியின் தலைவரானார். [5]

கல்தா வட இந்தியாவின் முதல் வைணவ இராமானந்த பீடமாகவும், இராமானந்தா பிரிவின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகவும் மாறியது. [6]

கோஸ்வாமி நாபா தாஸ் என்றா துறவியும் இங்கிருந்தார். அவர் துளசிதாசரை சந்தித்ததாக கூறப்படுகிறது. [7] கல்தா பீடம் என்பது ஜம்மு, பஞ்சாப் மற்றும் கீழ் இமாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களிலுள்ள இராமநந்திகளுக்கு இந்த இடம் (இச்சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களை இராமானந்திகள் என்று அழைப்பர்.[8]) ஒரு புனித யாத்திரை தளமாகும்.

கோவிலில் வட்டமான கூரைகள், செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட சுவர்கள் கொண்ட பல மண்டபங்கள் உள்ளன. இந்த வளாகம் ஒரு இயற்கை நீரூற்று மற்றும் 7 புனித குளங்களை உருவாக்கும் நீர்வீழ்ச்சிகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. [9]

சூரியன் கோவில்[தொகு]

மலையின் உச்சியில் சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில் உள்ளது. இது சூர்யா மந்திர் என்று அழைக்கப்படுகிறது. [10]

தண்ணீர் குளங்கள்[தொகு]

கல்தாஜியின் கீழ் குளம்

இக்கோயில் அதன் இயற்கை நீரூற்றுகளுக்கு பெயர் பெற்றது. அதிலிருந்து நீர் குளங்களில். இங்கு ஏழு தொட்டிகள் உள்ளன. இதில் கல்தா குளம் மிகவும் புனிதமானது. அவை ஒருபோதும் வறண்டு போகாது. குறிப்பாக மகர சங்கராந்தி அன்று இக்குளத்தில் நீராடுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் இங்கு நீராட வருகிறார்கள். [11]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Building Jaipur: The Making of an Indian City. https://books.google.com/books?id=7F_MJcTjDOQC&pg=PA39. பார்த்த நாள்: 29 August 2013. 
  2. Dr. Daljeet. Monuments Of India. https://books.google.com/books?id=NZ3pAAAAMAAJ. 
  3. Ramananda, Hindu philosopher
  4. Śrivastava, Vijai Shankar (1981). Cultural Contours of India: Dr. Satya Prakash Felicitation Volume. https://books.google.com/books?id=nKJiBUFrmfoC&dq=Galta+ji+Ramanandi&pg=RA1-PA395. 
  5. Gupta, Dr R.K. Rajsthan through the ages - Vol 4. Jaipur rulers and administrators. https://books.google.com/books?id=DLQeSBLpUwsC. 
  6. Burchett, Patton E. (2019-05-28) (in en). A Genealogy of Devotion: Bhakti, Tantra, Yoga, and Sufism in North India. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-231-54883-0. https://books.google.com/books?id=ASd2DwAAQBAJ&dq=Pindori&pg=PT162. "According to the tradition of Pindori Dhām, a major Rāmānandī center in the Gurdaspur district of Panjab, the young Bhagvān-jī met Kṛṣṇadās Payahārī at Galta while on a pilgrimage. Payahārī is said to have converted him to Vaiṣṇavism" 
  7. Excelsior, Daily (2017-04-15). "Guru Nabha Dass Ji". Jammu Kashmir Latest News | Tourism | Breaking News J&K (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11. He continuously attended "Gosthi" atleast for three years with the author of Ramayan Tulsi Dass in Galta Dham in Jaipur. The Guru of Nabha Dass Ji, Agar Dass, Keel Dass Baba Krishan Pahariu Dass were great saints. The temple of Nabha Dass Ji is situated at Galta Dham in Jaipur Rajasthan.
  8. Ramananda, Hindu philosopher
  9. Ann Grodzins Gold (1990). Fruitful Journeys: The Ways of Rajasthani Pilgrims. University of California Press. பக். 278–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-06959-6. https://books.google.com/books?id=iAMo1TMH6iYC&pg=PA278. பார்த்த நாள்: 29 August 2013. 
  10. "Jaipur Tourism: Places to Visit, Sightseeing, Trip to Jaipur- Rajasthan Tourism". www.tourism.rajasthan.gov.in (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
  11. Dobson, Jim. "48 Hours In Jaipur, India: How To Experience The Spectacular Pink City In Style". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்தாஜி&oldid=3789627" இலிருந்து மீள்விக்கப்பட்டது