உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாள குடியரசுத் தலைவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு குடியரசுத் தலைவர்
தற்போது
ராம் சந்திர பௌதெல்

13 மார்ச்சு 2023 முதல்
வாழுமிடம்சீதள் நிவாஸ்
நியமிப்பவர்மறைமுகத் தேர்தல்
பதவிக் காலம்ஐந்தாண்டுகள்
உருவாக்கம்28 மே 2008; 16 ஆண்டுகள் முன்னர் (2008-05-28)
துணை குடியரசுத் தலைவர்துணைக் குடியரசுத் தலைவர்
ஊதியம்நேபாள ரூபாய் 1,09,410 (மாதந்தோறும்)[1]
இணையதளம்www.presidentofnepal.gov.np

நேபாள குடியரசுத் தலைவர், (President of the Federal Democratic Republic of Nepal) (நேபாளி: राष्ट्रपति), நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு மற்றும் முப்படைகளின் தலைவர் ஆவார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழித்து, நேபாளத்தை ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்த நாளில் குடியரசுத் தலைவர் பதவி மே 2008ல் உருவாக்கப்பட்டது. நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ஆவார்.

வித்யா தேவி பண்டாரி நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, அக்டோபர் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் மார்ச் 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

[தொகு]

நேபாள நாடாளுமன்றத்தின், பிரதிநிதிகள் சபை, தேசிய சபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், நேபாள குடியரசுத் தலைவர் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.

குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க இயலாது.

அதிகாரங்கள்

[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் போன்றே, நேபாளக் குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் சடங்கு சம்பிரதாயம் போன்றதே. பிரதம அமைச்சரின் ஆலோசனையின் படியே நேபாள குடியரசுத் தலவர் செயல்படுகிறார்.

குடியரசுத் தலைவர் பதவியின் வரலாறு

[தொகு]

நேபாள இடைக்கால அரசியலமைப்பு சட்டத்தின் படி நேபாளத்தில் சனவரி, 2007 அன்று மன்னராட்சி முறை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது. நேபாளத்தின் தற்காலிக குடியரசுத் தலைவராக முன்னாள் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 மே 2008ல் கூடிய நேபாள நாடாளுமன்றம், ராம் பரன் யாதவ்வை, நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் நேபாளத்தில் 247 ஆண்டு கால மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவிற்கு வந்தது.

நேபாளக் குடியரசுத் தலைவர்கள் (2008 முதல் - தற்போது வரை)

[தொகு]
எண் பெயர்
(பிறப்பு–இறப்பு)
படம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் பதவியேற்ற நாள் விலகிய நாள் துணை குடியரசுத் தலைவர் வாக்குகள்
1 ராம் பரன் யாதவ்
(1948–)
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2008 23 சூலை 2008 29 அக்டோபர் 2015 பரமானந்த ஜா
308 / 601

(2nd round)
2 வித்யா தேவி பண்டாரி
(1961–)
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2015 29 அக்டோபர் 2015 13 மார்ச்சு 2023 நந்த கிசோர் புன்
327 / 601
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018
3 ராம் சந்திர பௌதெல்
(1944–)
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2023 13 மார்ச்சு 2023 பதவியில்
566 / 881

நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2023

[தொகு]

நேபாளத்தின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் மார்ச் 9, 2023 அன்று நடைபெற்றது. தேர்தலில் ராம் சந்திர பௌதெல் மற்றும் சுபாச்சந்திர நெம்வாங் ஆகியோர் போட்டியிட்டனர். ராம் சந்திர பௌதெல் அதிக வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்

வேட்பாளர் அரசியல் கட்சிகள் வாக்குகள்
ராம் சந்திர பௌதெல் நேபாளி காங்கிரஸ் 556
சுபச்சந்திர நெம்வாங் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் 260
செல்லாத வாக்குகள் 5 881

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_குடியரசுத்_தலைவர்&oldid=3838191" இலிருந்து மீள்விக்கப்பட்டது