புரந்தரதாசர் ஆராதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரந்தரதாசர் ஆராதனை
வகைகருநாடக இசை
நாள்பிப்ரவரி /மார்ச்சு
அமைவிடம்(கள்)கர்நாடகாவின் அம்பி
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1974 –தற்போது வரை

புரந்தரதாசர் ஆராதனை (Purandara Dasa Aradhana) என்பது கன்னட இசையமைப்பாளர் புரந்தரதாசரின் வருடாந்திர ஆராதனை (கடவுளை அல்லது ஒரு நபரை மகிமைப்படுத்தும் செயல் ) ஆகும். இவர் கருநாடக இசையின் "பிதாமகர்" என்று கருதப்படுகிறார். [1] இவர் ஆந்திரவிலும், கர்நாடகாவிலும் முதன்மையாக வாழ்ந்து அம்பியில் சமாதி [2] அடைந்த தை அமாவாசை நாளில் ஆராதனை அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

ஆராதனை புரந்தரதாசர் சமாதி அடைந்த நினைவு தினத்தில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது. இது இந்திய சந்திர நாட்காட்டியின் தை அமாவாசை அன்று (பொதுவாக பிப்ரவரி-மார்ச் மாதங்கள்) அனுசரிக்கப்படுகிறாது. பண்டரிபுரம், திருமலை, அம்பி, மந்திராலயம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆராதனை கொண்டாடப்படுகிறது.[3] அம்பியில் இது புரந்தர தாசர் ஆராதனை சமிதி அறக்கட்டளையால் வருடாந்திர நிகழ்ச்சிகளுடன் திருமலையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாச சாகித்திய திட்டத்தால் ஆண்டுதோறும் சனவரி - பிப்ரவரி மாதங்களில் ஏற்பாடு செய்யப்படுகிறது. [4]

1970களின் முற்பகுதியில், தமிழ்நாட்டில் தியாகராஜருக்கு வழங்கப்பட்ட தகுதி கர்நாடகாவில் புரந்தரதாசருக்கு வழங்கப்படவில்லை என்று ஜெயச்சாமராஜா உடையார் வருத்தம் தெரிவித்தார். இதனால் ஈர்க்கப்பட்ட கன்னட பத்திரிகையாளர் என்.ஏ.மூர்த்தி என்பவர், அம்பியில் புரந்தர தசர் ஆராதனையைத் தொடங்கினார். மேலும், 1974 முதல் 1976 வரை வருடாந்திர நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். மூர்த்தியின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் ராஜா ராவ் முலபாகல் புரந்தர விட்டல தேவாலயத்தில் வருடாந்திர நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரந்தரதாசர்_ஆராதனை&oldid=3338050" இலிருந்து மீள்விக்கப்பட்டது