சிவனேசத்துரை சந்திரகாந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிள்ளையான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவனேசத்துரை சந்திரகாந்தன்
Pillayan swearing in.jpg
கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர்
பதவியில்
மே 16, 2008 – சூன் 27, 2012
பின்வந்தவர் நஜீப் அப்துல் மஜீத்
தொகுதி மட்டக்களப்பு மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்ட் 18, 1975 (1975-08-18) (அகவை 40)
மட்டக்களப்பு மாவட்டம், பேத்தாழை, வாழைச்சேனை
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
இணையம் www.cmsep.lk

பிரபலமாக பிள்ளையான் என அறியப்பட்ட சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிறப்பு: ஓகஸ்ட் 18, 1975) இலங்கையின் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்[1] இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமாவார். இவர் கருணா என அறியப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிந்துச் சென்று கருணா குழுவில் முக்கிய தலைவராக செயற்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை, பேத்தாழையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிள்ளையான் பேத்தாழை விபுலானந்தா வித்தியாலயத்திலும் பின்னர் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் க.பொ.த. (சாதாரண தர) வகுப்பு (தரம் 11) வரை கல்வி பயின்றவர். ஏப்ரல் 4, 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தனது 15வது வயதில் "பிள்ளையான்" என்ற இயக்கப் பெயரில் போராளியாக இணைந்தார். 1997 இல் முல்லைத்தீவு இராணுவமுகாம் தாக்குதல், 2001 இல் ஆனையிறவு முகாம் தாக்குதல் ஆகியவற்றில் பங்கு பற்றினார்.

2004 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா அணியுடன் சேர்ந்து விலகி அவ்வமைப்பில் பதில் தலைவரானார். கருணாவின் சகோதரர் ரெஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவ்வமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவரானார். விடுதலைப் புலிகளுக்கெதிராகத் தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்ட இவர் பின்னர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டார். 2007 இல் கருணா அணியில் இடம்பெற்ற உள்ளக மோதல்களைத் தொடர்ந்து கருணா இலண்டனுக்குத் தப்பி ஓடியதை அடுத்து அவ்வமைப்பின் தலைவரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "CM appointment illegal - Hisbullah". BBC News. 16 May, 2008. http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/05/080516_pillayan_cm.shtml.