உள்ளடக்கத்துக்குச் செல்

நஜீப் அப்துல் மஜீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஜீப் அப்துல் மஜீத்
M. N. Abdul Majeed
கிழக்கு மாகாணசபையின் 2வது முதலமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 18, 2012 – பெப்ரவரி 2015
முன்னையவர்சிவநேசதுரை சந்திரகாந்தன்
பின்னவர்ஹாபிஸ் நசீர் அகமது
தபால், தொலைத்தொடர்பு இணை அமைச்சர்
பதவியில்
2000–2001
கூட்டுறவு சபைகளுக்கான அமைச்சரவை-அந்தஸ்தில்லாத அமைச்சர் பதவி
பதவியில்
2007–2010
இலங்கை நாடாளுமன்றம்
திருகோணமலை
பதவியில்
2000–2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 1, 1957 (1957-01-01) (அகவை 67)
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிசிறீலங்கா சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பெற்றோர்ஏ. எல். அப்துல் மஜீத்
வாழிடம்(s)சல்மா மன்சில், கிண்ணியா 06

முகமது நஜீப் அப்துல் மஜீத் (Mohamed Najeeb Abdul Majeed, பிறப்பு: சனவரி 1, 1957)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 2012, செப்டம்பர் 18 இல் கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் தெரிவு செய்யப்பட்டு பெப்ரவரி 2015 வரை பதவியில் இருந்தார். மாகாண சபை முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 ஆண்டு காலத்தில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை மஜீத் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1960-77 வரை மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ. எல். அப்துல் மஜீத்தின் மகனான நஜீப்[1] கிண்ணியா மத்திய கல்லூரி, கம்பளை சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம் சென். ஜோன் அக்காதமி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1]

நஜீப் பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கப்பல் கம்பனி ஒன்றில் பணியாற்றினார்.[1] இவரது தந்தை 1987 நவம்பர் 14 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.[3] அதன் பின்னர் நஜீப் கிண்ணியா திரும்பி தந்தையின் அரசியலை முன்னெடுத்தார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

நஜீப் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[1] 1993 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, கிண்ணியா பிரதேச சபையின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[1] சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியில் 1994 ஆம் ஆண்டில் இணைந்து 1994 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 2000 தேர்தலில் மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 2000 ஆம் ஆண்டு தபால் தந்தி, தொலைத் தொடர்பு ஆகிய துறைகளின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]

2001 இல் முசுலிம் காங்கிரசுக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையயான உறவுகள் முறிவடைந்ததை அடுத்து முசுலிம் காங்கிரசு ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது. நஜீப் 2001 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[1] 2004 தேர்தலில் முசுலிம் காங்கிரசு தனித்துப் போட்டியிட்டதில் திருகோணமலைத் தொகுதியில் நஜீப் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[6] முசுலிம் காங்கிரசினுள் இடம்பெற்ற உள் முரண்பாடுகள் காரணமாக 2004 மே 30 இல் நஜீப் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.[7] 2004 அக்டோபரில் நஜீப் திருகோணமலை மாவட்டத்துக்கான புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] நஜீப் பின்னர் ஏ. எல். எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசு கட்சியிலும், பின்னர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசு கட்சியிலும் இணைந்தார்.[1] 2007 இல் மீண்டும் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து.[1] கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.[9]

நஜீப் 2010 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[10] இவர் பின்னர் திருகோணமலை மாவட்டத்துக்கான சனாதிபதி ஒருங்கிணைப்பாளராகவும், மூதூர் தொகுதி சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.[1]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐமசுகூ வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 4,877 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[11]

கிழக்கு மாகாணசபை முதல்வராக

[தொகு]

2012, செப்டம்பர் 8 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு 11,726 விருப்பு வாக்குககளைப் பெற்று மாகாண சபைக்கு உறுப்பினராக தெரிவானார்.[12] சுதந்திரக் கூட்டணி 15 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.[13] அப்துல் மஜீத் கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்.[14] முசுலிம் காங்கிரசுடன் சுதந்திரக் கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரண்டரை ஆண்டுக் காலப் பதவியின் பின்னர்[15] பெப்ரவரி 2015 இல் இவர் பதவி விலகினார். பதிலாக முசுலிம் காங்கிரசின் ஹாபிஸ் நசீர் அகமது கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக 2015 பெப்ரவரி 6 இல் நியமிக்கப்பட்டார்.[16]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 டி. பி. எஸ். ஜெயராஜ் (22 செப்டம்பர் 2012). "NAJEEB ABDUL MAJEED MAKES HISTORY AS THE FIRST MUSLIM CM OF SRI LANKA". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/opinion/dbsjeyaraj-column/22121-najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka.html. 
  2. "PARLIAMENTARY GENERAL ELECTION - 02-04-2004" (PDF). Sri Lanka Department of Elections. Archived from the original (PDF) on 4 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Ferdinando, Shamindra (21 சனவரி 2008). "Political killings: from S.W.R.D to DM". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000926/http://www.island.lk/2008/01/21/features1.html. 
  4. "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  5. "General Election 2000 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  6. "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
  7. "SLMC high command sacks three parliamentarians". தமிழ்நெட். 30 மே 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=12115. பார்த்த நாள்: 5 டிசம்பர் 2009. 
  8. "Dissident SLMC MPs sworn in as ministers". தமிழ்நெட். 30 அக்டோபர் 2004. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13275. 
  9. "New Cabinet of Ministers sworn in". Current Affairs. இலங்கை அரசு. Archived from the original on 2010-06-28. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  10. "Parliamentary General Election – 2010 Trincomalee Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  11. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  12. "Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-02-07.
  13. Ferdinando, Shamindra (18 செப்டம்பர் 2012). "President bags East with Hakeem's help". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140917113609/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=61840. 
  14. "Majeed sworn in as Eastern CM". டெய்லிமிரர். 18 செப்டம்பர் 2012. http://www.dailymirror.lk/news/22010--majeed-sworn-in-as-eastern-cm.html. 
  15. Bandara, Kelum (20 செப்டம்பர் 2012). "PC polls: SLMC to share Chief Minister Post in East". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/opinion/172-opinion/22063-pc-polls-slmc-to-share-chief-minister-post-in-east.html. 
  16. "கிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்". தமிழ்மிரர். 6 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஜீப்_அப்துல்_மஜீத்&oldid=3560290" இலிருந்து மீள்விக்கப்பட்டது