கிண்ணியா மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிண்ணியா மத்திய கல்லூரி
அமைவிடம்
இலங்கை
தகவல்
அதிபர்எஸ்.ஏ. சராப்டீன்
ஆசிரியர் குழு80
மொத்த சேர்க்கை2100
இணையம்
கிண்ணியா மத்திய கல்லூரி சின்னம்

கிண்ணியா மத்திய கல்லூரி (Kinniya Central College) கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள முன்னணி முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றாகும். இதுவொரு தேசியப் பாடசாலையாகும். இது மூதூர்த் தொகுதியின் கிண்ணியா வலயத்தில் அமைந்துள்ளது. இது 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

1958ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இப்பாடசாலையில் தரம் 1 - 13 வரையிலான வகுப்புக்கள் காணப்படுகின்றன. இப்பாடசாலையில் சுமார் 2100 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 80 ஆசிரியர்கள் சேவைபுரிகின்றனர். இதன் தற்போதைய அதிபராக எஸ்.ஏ. சராப்டீன் பதவி வகிக்கின்றார்.


வரலாறு[தொகு]

கிண்ணியா முஸ்லிம்கள் தமது கல்வித் தேவையை[ பூர்த்தி செய்வதற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரையில் அனைத்துப் பிரதேச மாணவர்களும் கல்வி பயிலக் கூடிய பாடசாலையாக கிண்ணியா மத்திய கல்லூரியினை 1958 ஆம் ஆண்டு ஆரம்பித்தார்கள். 1958 ஆம் ஆண்டு சீனியர் ஸ்கூல் எனும் பெயரில் இது ஆரம்பமானது. [சான்று தேவை] கிண்ணியாப் பிரதேசத்தின் முதல் ஆசிரியரான காசிநாதர் இக்கல்லூரியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். இக்கல்லூரி 1961 ஆம் ஆண்டு மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. 1996 ஆம் ஆண்டு மத்திய கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1980 இல் இக்கல்லூரி 1ஏபி பாடசாலையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பாடசாலையில் 25.02.1991 ஆம் திகதியன்று கோட்டக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் முயற்சியினால் 16.05.1995 ஆம் திகதியன்று இக்கல்லூரி தேசியப் பாடசாலையாக்கப்பட்டது.


கல்லூரியின் தோற்றம்[தொகு]

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்த் தொகுதியின் மத்தியில் பல உப்பு நீர் ஆறுகளால் கிண்ணிகள் போல் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதேசமே கிண்ணியா. இதன் வடக்கில் சீனக்குடா விமானநிலையமும் கிழக்கில் கொட்டியாரக்குடாவும் மேற்கில் கந்தலாய்க் குளத்து நீரால் வளம் பெறும் தம்பலகமப் பிரதேசக் கழனி நிலங்களும் எல்லையாக இருக்க மகாவலிகங்கை அதன் தெற்கு எல்லையை அணைத்துச் செல்கின்றது.

கடல் வளமும், காட்டுவளமும், நிலவளமும், நீர்வளமும் நிறையப் பெற்ற கிண்ணியா 70000 மக்கள் தொகைக் கொண்ட ஒரு கிராமமாகும். இவர்களுள் ஏறக்குறைய 99% மானோர் முஸ்லிம்களாவர். இலங்கையில் மிகக் கூடிய முஸ்லிம்கள் செறிந்து வாலும் ஓர் இடமாகக் கிண்ணியா விளங்குகின்றது. எனினும் கிராமியச் சூழல் இன்னும் முற்றாக மறையாத பல் வேறு துறைகளிலும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகவே இன்றும் இது காணப்படுகின்றது. ஆகவே கல்வித்துறையும் இதற்கு விதி விலக்கல்ல.

இக்கல்லூரியின் வரலாற்றுச்சான்றுகள் எதுவும் இன்னும் மறைந்து விடவில்லை. இக்கல்லூரியின் தோற்றமும் வளர்ச்சியும் கிண்ணியாவின் கல்வி வரலாற்றோடு பின்னிப்பினைந்ததொன்றாகவே காணப்படுகின்றது. 300 ஆண்டுகளுக்கு குறைவான வரலாற்றைக் கொண்ட கிண்ணியாவின் கல்வி வரலாறு 100 வருடங்களுக்கு உட்பட்டதாகும்.. கிண்ணியாவையும் சீனக்குடாவையும் பிரித்து வைக்கின்ற துறைக்கு(துறையடிக்கு) அண்மையில் வாழ்ந்த தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையே கிண்ணியாவின் முதற் பாடசாலையாகும். எனினும் அக்கால முஸ்லிம்கள் தமிழ்க் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. மார்க்கக்கல்விக்கு முரணான கல்வி சைத்தானின் கல்வி என்ற கருத்து அக்கால முஸ்லிம்கள் மத்தியில் பலமாக வேரூன்றியிருந்தமையே இதற்குக் காரணமாகும்.

எனினும் கிண்ணியா முஸ்லிம்கள் தமது சமயக் கல்வித்தாகத்தைப் பூர்த்திசெய்வதற்காக ஜாவாமுஸ்லிம்கள் செரிந்து வாழ்ந்த பெரியாற்றுமுனையில் 1888ம் ஆண்டு ஜாகுவப்பள்ளியில் மதுரசத்துல் சகுதியாவை ஆரம்பித்தனர். இம்மதுரசாவுக்கு அண்மையில் தற்போது முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் இருக்குமிடத்தில் 1905ம் ஆண்டு ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அதுவே முஸ்லிம்களுக்கனெ ஆரம்பிக்கப்பட்ட முதல் தமிழ் பாடசாலையாகும். அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் என வௌ;வேறாக வகுப்புகள் நடத்தப்பட்டன. 1914ம் ஆண்டு ஆலங்கேணி விஃவித்தியாலயமும் 1928ம் ஆண்டு சின்னக் கிண்ணியாவில் தற்போதைய அல்-அக்ஸ்வும் 1932ம் ஆண்டு குறிஞ்சாக் கேணியில் தற்போதைய அறபா மகா வித்தியாலயமும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இப்பாடசாலைகளில் 10ம் வகுப்பு வரை இருக்க வில்லை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் மாத்திரமே ளுளுஊ வகுப்பு வரை இருந்தது. 1982ம் ஆண்டு அல்-அக்சாவிலும் அறபாவிலும் 6ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. 1965ம் ஆண்டுதான் ஆலங்கேணியில் பு.ஊ.நு. ழுஃடு வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே 1958ம் ஆண்டின் பின்னர் வெள்ளைமணல் உட்பட கிண்ணியாப் பிரதேச மாணவர்கள் யாவரும் கி. மத்திய கல்லூரியிலேயே G.C.E. சாதாரன வகுப்பு வரை கற்க வேண்டிய ஒரு தாய்ப் பாடசாலையாக இக்கல்லூரி விளங்குகியது.

1945ம் ஆண்டு இலவசக் கல்வி முறை அமுலானதைத் தொடர்ந்து 1905ம் ஆண்டு பெரியகிண்ணியாவில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் 1947ம் ஆண்டு எஸ்.எஸ்.சி. வகுப்பு (10ம்வகுப்பு) வரை ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 1950ம் ஆண்டைத் தொடர்ந்து இப்பாடசாலையில் கல்வி கற்ற உள்;ர் முஸ்லிம்கள் சிலர் ஆசிரியர்களாக வரமுடிந்தது. எனினும் இக்காலப்பகுதியில் மத்திய வகுப்பைச் சேர்ந்த சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மட்டக்களப்புச் சிவானந்தாக் கல்லூரி போன்ற வெளியூர் பாடசாலைகளுக்கு அனுப்பினர். அவர்கள் ஆங்கிலக் கல்வியைக் கற்று திருகோணமலை மாவட்ட அரசியலிலும், கல்வி நிறுவாக சேவைகளிலும் பல பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதிபர்கள்[தொகு]

  • திரு.கே . பரமானந்தம் - மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்தவர்
  • மர்ஹும் ஏ.எல்.ஏ.மஜீது (01.06.1959) - இந்தியாவிலிருந்து தமது உயர் கல்வியை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சரும் ஆவார்.
  • ஜனாப் எஸ்.ஏ .ஹுஸைன்
  • அல்ஹாஜ் டி.ஏ.எம்.இஸ்ஹாக்
  • எஸ்.ஏ.சராப்டீன்
  • ஏ.ஜே.எம்.றூமி
  • எஸ்.எம்.அனிபா - தற்போது அதிபராக உள்ளவர்.

ஆசிரியர்கள்[தொகு]

இக்கல்லூரி ஆரம்பிக்கப்படும் போது பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் இருந்து எஸ்.எஸ்.சீ வகுப்பைச் சேர்ந்த 14 மாணவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டு இப்பாடசாலையூடாகவே 1959 ஆம் ஆண்டு அரசாங்கப் பரீட்சைக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இவர்களுள் ஜனாப் எம்.எஸ்.ஏ.ஹஸன் எனும் ஒரு மாணவரே சித்தியடைந்தார். இவரும் இப்பாடசாலையின் அதிபராக ஒரு காலப்பகுதியில் பணிபுரிந்தார். இக்கல்லூரி மாணவர்களுள் முதலில் ஆசிரியர் நியமனம் பெற்றவரும் இவரே ஆவார். டீ.ஏ.எம்.இஸ்ஹாக், எம்.எஸ்.ஏ.இப்றாஹிம் ஆகியோர் தமிழ் மொழி ஆசிரியர்களாகவும் எஸ்.ஏ.ஹமீது புரக்டர் அவர்கள் ஆங்கில ஆசிரியராகவும் 1952 ஆம் ஆண்டு நியமனம் பெற்றனர் இவர்களே கிண்ணியாவின் முதல் முஸ்லிம் ஆசிரியர்கள் ஆவார்கள்.


அரச பரீட்சைகள்[தொகு]

அக்காலக் கல்வித்திட்டத்தின் படி எஸ்.எஸ்.சீ வகுப்பு (10ஆம் வகுப்பு) கலை விஞ்ஞானம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது, 1960 ஆம் ஆண்டு ஜனாப் பாரூக்(முன்னாள் மடவளை மதீனா வித்தியாலய அதிபர்) என்ற விஞ்ஞானப் பட்டதாரி நியமிக்கப்பட்டவுடன் 1961 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பிரிவு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 8 ஆம் வகுப்பு சித்தியடைந்தவர்கள் இவ்வாறு கலை விஞ்ஞான வகுப்புகளுக்குப் பிரிக்கப்படுவர 1968ஆம் ஆண்டு ஜீ.சீ.ஈ உயர்தர கலை வகுப்பு நான்கு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.ஆசிரியர் பற்றாக் குறை காரணமாக இரண்டு மாணவர்களே வகுப்பில் எஞ்சி இருந்தனர் ஏனையோர் வெளியூர் சென்றுவிட்டனர். திரு.எஸ்.அழகரத்தினம் (முன்னாள் வவுனியா கல்வியியற் கல்லூரி பீடாதிபதி) அவர்களின் தனி முயற்சியினால் 1969 ஆம் ஆண்டு ஜீ.சீ.ஈ உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய இரு மாணவர்களுள் ஒருவர் முதன்முறையாக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்(ஜனாப் ஏ.எஸ்.எம் யூஸுப்) எனினும் கிண்ணியாவின் முதல் கலைப்பட்டதாரி மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீது ஆவார்.(1959).

1973 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் முதன்முறையாக ஜீ.சீ.ஈ.உயர்தர கணித விஞ்ஞான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1980 ஆம் ஆண்டு கணிதப் பிரிவில் இருந்து பொறியியல் துறைக்கு ஐ.அபூஹுரைரா எனும் ஒரு மாணவர் தெரிவானார். 1973ஆம் ஆண்டு கணிதப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட போதிலும் 1990 ஆம் ஆண்டைத் தொடர்ந்தே கணிதத் துறையில் அதிக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாக முடிந்தது.

இணையத்தளம்[தொகு]

திருகோணமலை மாவட்டத்தில் ஒரு அரச பாடசாலைக்கு என முதன் முதலில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கே www.kinniyacentral.org [1] எனும் பெயரில் இணையத்தளம் ஒன்று அக்காலப்பகுதியில் (2003) அதிபராக இருந்த ஜனாப் எஸ்.ஏ.சராப்டீன் என்பவரின் முயற்சியில் உருவாக்கப்பட்டது. இதற்கான பண உதவிகளை இக்கால்லூரியின் பழைய மாணவர்களான ஜனாப். முகைதீன் அப்துல் றஹீம் (சாபி) மற்றும் ஜனாப் அப்துல் சமது றியாட் ஆகியோர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான இணையத்தளத்தினை இப்பாடசாலையில் ஆசிரியராகக் கடமை புரிந்து வரும் ஜனாப் ஜவ்பர் இம்தியாஸ் உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் அரசு இலவசமாக Schoolnet [2] மூலமாக இலவசமாக வழக்குவதனால் இதன் இணையத்தளத்தின் பெயர் www.kinniyacentral.sch.lk [3]என மாற்றியமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2004-03-20 அன்று பரணிடப்பட்டது.
  2. www.schoolnet.lk
  3. www.kinniyacentral.sch.lk

வெளியிணைப்புக்கள்[தொகு]