சம்பல் நகரம்

ஆள்கூறுகள்: 28°35′N 78°33′E / 28.58°N 78.55°E / 28.58; 78.55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்பல்
நகரம்
சாஹி ஜுமா பள்ளிவாசல், சம்பல்
சம்பல் is located in உத்தரப் பிரதேசம்
சம்பல்
சம்பல்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சம்பல் நகரத்தின் அமைவிடம்
சம்பல் is located in இந்தியா
சம்பல்
சம்பல்
சம்பல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°35′N 78°33′E / 28.58°N 78.55°E / 28.58; 78.55
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
கோட்டம்மொராதாபாத்
மாவட்டம்சம்பல்
நிறுவிய ஆண்டு12-ஆம் நூற்றாண்டு
தோற்றுவித்தவர்பிருத்திவிராச் சௌகான்
பரப்பளவு
 • மொத்தம்16 km2 (6 sq mi)
ஏற்றம்203 m (666 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்2,20,813
 • அடர்த்தி11,433/km2 (29,610/sq mi)
மொழி
 • அலுவல் மொழிஇந்தி மொழி[3]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
244302
தொலைபேசி குறியீடு எண்(+91) (05923)
வாகனப் பதிவுUP-38
இணையதளம்sambhal.nic.in

சம்பல் (Sambhal) (கேட்க), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். புது தில்லிக்கு கிழக்கே 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[4]மேலும் மாநிலத் தலைநகரான லக்னோவிற்க்கு வடகிழக்கில் சம்பல் நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 2,21,334 ஆகும். அதில் ஆண்கள் 116,008 மற்றும் பெண்கள் 105,326 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 34,279 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 49.51% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 22.00%, இசுலாமியர் 77.67% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[5]

இருப்புப் பாதை[தொகு]

சம்பல் ஹதிம் சராய் தொடருந்து நிலையம் தில்லி, லக்னோ, கான்பூர், அலகாபாத், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[6]

பொருளாதாரம்[தொகு]

மெந்தால் எண்ணெய் இந்நகரத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.[7]

கல்வி[தொகு]

 • மகாத்மா காந்தி நினைவு பட்டமேற்படிப்பு கல்லூரி
 • சம்பல் அரசுக் கல்லூரி
 • ஹக்கீம் ரியாஸ் யுனானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
 • இஸ்ரத் குழும கல்வி நிறுவனங்கள், சம்பல்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Sambhal, Uttar Pradesh, India". latlong.net. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
 2. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
 3. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2018.
 4. Ltd, rome2rio Pty. "New Delhi to Sambhal - 5 ways to travel via train, bus, taxi, and car". Rome2rio (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-31.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
 5. Sambhal City Population 2011
 6. Sambhal Hatim Sarai Railway Station (SHTS) Trains Schedule
 7. "Mentha Oil Rate Today: मेंथा ऑयल में बिकवाली, रिकॉर्ड उत्पादन से कीमतों पर दबाव" (in hi). https://www.financialexpress.com/hindi/business-news/mentha-oil-rate-today-on-8-june-2020-mcx-mentha-oil-price-today-sambhal-demand-export/1984558/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பல்_நகரம்&oldid=3526537" இலிருந்து மீள்விக்கப்பட்டது