பிலிப்பீன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிலிபைன்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repúbliká ng̃ Pilipinas
ரீபப்பிலிக்கா இங் பிலிபினாஸ்
பிலிப்பீன்ஸ் குடியரசு
பிலிப்பீன்ஸ் கொடி பிலிப்பீன்ஸ் சின்னம்
குறிக்கோள்

Maka-Diyos, Makatao, Makakalikasan, at Makabansa[1] (பிலிப்பினோ)
("கடவுளுக்கும், மக்களுக்கும், இயற்கையும், நாட்டுக்கும்")
நாட்டுப்பண்
லுபாங் ஹினிராங்
"தேர்ந்த நாடு"

Location of பிலிப்பீன்ஸ்
தலைநகரம் மணிலா[2]
14°35′N 121°0′E / 14.583, 121
பெரிய நகரம் குயெசோன் நகரம்
ஆட்சி மொழி(கள்)
பிரதேச மொழிகள்
மக்கள் பிலிப்பினோ
அரசு ஒன்றிய அரசியலமைப்புக் குடியரசு, சனாதிபதி முறைமை, அரசியலமைப்பு, குடியரசு
 -  சனாதிபதி பெனிஞோ அகுவினோ III
 -  உப சனாதிபதி ஜெயோமர் பினாய்
 -  Senate President Franklin Drilon
 -  House Speaker Feliciano Belmonte, Jr.
 -  Chief Justice Maria Lourdes Sereno
Independence from Spain[2] and the United States 
 -  Established April 27, 1565 
 -  Declared June 12, 1898 
 -  Self-government March 24, 1934 
 -  Recognized July 4, 1946 
 -  Current constitution February 2, 1987 
 -  நீர் (%) 0.61[4] (inland waters)
 -  நிலம் km2
Expression error: Unrecognized punctuation character "[". sq mi
 -  அடர்த்தி வார்ப்புரு:Data/popdens/கிமீ² (43rd)
/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2013 கணிப்பீடு
 -  மொத்தம் $456.418 billion[5] 
 -  நபர்வரி $4,682[5] 
மொ.தே.உ(பொதுவாக) 2013 மதிப்பீடு
 -  மொத்தம்l $272.018 billion[5] 
 -  நபர்வரி $2,790[5] 
ஜினி சுட்டெண்? (2009) 43.0 (44 ஆவது)
ம.வ.சு (2013) 0.654 (114 ஆவது)
நாணயம் Peso (Filipino: piso) (₱) (PHP)
நேர வலயம் PST (ஒ.ச.நே.+8)
 -  கோடை (ப.சே.நே.) not observed (ஒ.ச.நே.+8)
இணைய குறி .ph
தொலைபேசி ++63

பிலிப்பீன்சு (Philippines, தகலாகு மொழி: pɪlɪˈpinɐs, பிலீப்பினாஸ்), அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு தென்கிழக்காசியாவிலுள்ள ஒரு நாடாகும். இதன் தலைநகரம் மணிலா. இத் தீவு நாடானது பசுபிக் சமுத்திரத்தின் மேற்க்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸின் எல்லைகளாக வடக்கே லூசான் நீரிணைக்கு அப்பாலுள்ள தாய்வானும்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பாலுள்ள வியட்னாமும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பாலுள்ள புரூணை தீவுகளும்; தெற்கே ஏனைய தீவுகளை இந்தோனேசியாவிலிருந்து பிரிக்கும் செலேபெஸ் கடலும் அமைந்துள்ள அதேவேளை; கிழக்கில் பிலிப்பைன் கடலும் பலாவு எனப்படும் ஒரு தீவுத் தேசமும் உள்ளன. பிலிப்பைன்ஸ் தீவுத் தேசமானது பசிபிக் நெருப்பு வட்டப் பகுதியில் அமைந்துள்ளதாலும் பூமத்திய ரேகைக்கு அண்மையில் உள்ளதாலும் பூகம்பங்களும் சூறாவளிகளும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் பிலிப்பைன்ஸ் ஏராளமான இயற்கை வளங்களையும் உலகின் மிகப்பெரிய உயிரியற் பல்வகைமையையும் கொண்டுள்ளது.

300,000 சதுர கிலோமீற்றர் (115,831 சதுர மைல்) பரப்பளவைக் கொண்ட பிலிப்பைன்ஸ் உலகின் பாரிய நாடுகளின் பட்டியலில் 73 ஆவது இடத்திலுள்ளது.[6] மொத்தம் 7,107 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமாக விளங்கும் பிலிப்பைன்ஸ் புவியியல் ரீதியாக லூசொன், விசயாஸ் மற்றும் மின்டனோ என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகர் மணிலா ஆகும். பிரசித்திபெற்ற நகரமாக குவிசோன் நகரம் விள்ங்குகின்றது.

பிலிப்பைன்ஸ் தீவுகளில் வாழும் மக்கள் பிலிப்பினோக்கள் என அழைக்கப்படுகின்றனர். பிலிப்பைன்ஸ் 98 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.[7] இதுவே ஆசியாவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்திலும் உலகில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 12 ஆவது இடத்திலும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏறத்தாழப் 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். உலகிலேயே புலம்பெயர்ந்தோர் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் பிலிப்பைன்சும் ஒன்றாகும்.[8] இங்கே பல்வகைப்பட்ட இனங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றும் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றுக்கு முன்னைய காலத்தில் நெகிரிடோ இனத்தவர்கள் இங்கே வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர் வந்த அவுஸ்திரேலிய ஆசிய மக்களின் மூலம் மலாய், இந்து, இசுலாமிய மக்களால் அவர்களுடைய பண்பாட்டம்சங்களும் இங்கு கொண்டுவரப்பட்டன. பல்வேறு நாடுகள் டாடு, ராஜா, சுல்தான் மற்றும் இலாகன் ஆகியோரின் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தின் காரணமாக சீனக் கலாச்சாரம் இங்கே பரவியதோடு இன்றும் சீன மக்கள் இங்கே வாழ்ந்துவருகின்றார்கள்.

பெயர் வரலாறு[தொகு]

எசுப்பானிய அரசர் இரண்டாம் பிலிப் நினைவாக பிலிப்பைன்ஸ் என்ற பெயர் இத்தீவுக் கூட்டத்திற்குப் பெயரிடப்பட்டது. எசுப்பானிய ஆய்வாளரான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் தனது 1542 ஆம் ஆண்டு பயணத்தின் போது இத்தீவுக்கு லெய்டி தீவுகள் மற்றும் சமர் பிலிப்பினாஸ் என அஸ்டூரியாஸ் இளவரசரின் பெயரைச் சூட்டினார். இறுதியாக லாஸ் ஐஸ்லாஸ் பிலிப்பினாஸ் என்ற பெயர் இத்தீவுக்கூட்டத்தின் அனைத்துத் தீவுகளுக்கும் சூட்டப்பட்டது. இப்பெயர் பொதுவானதாக மாறுவதற்கு முன்னர், வேறு பெயர்களான ஐஸ்லாஸ் டெல் பொனியென்டே (மேற்குத் தீவுகள்) மற்றும் சான் லாசரோ தீவுகள் என்ற மகலனின் பெயரும் இத்தீவுகளைக் குறிப்பிட எசுப்பானியர்களால் பயன்படுத்தப்பட்டன.[9][10][11][12][13]

இந்நாட்டின் வரலாற்றின் காரணமாக பிலிப்பைன்சின் உத்தியோகபூர்வப் பெயரானது பலமுறை மாற்றத்திற்குள்ளானது. பிலிப்பைன் புரட்சியின் போது மலொலோஸ் காங்கிரஸ் ரிபப்ளிகா பிலிப்பினா அல்லது பிலிப்பைன் குடியரசு என்னும் பெயரை நிறுவுவதாகப் பிரகடனப்படுத்தியது. எசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898) மற்றும் பிலிப்பைன்-அமெரிக்கப் போர்க் (1899–1902) காலப்பகுதியிலிருந்து பொதுநலவாயக் காலப்பகுதி (1935–46) வரை அமெரிக்க காலனித்துவ அதிகாரிகள் எசுப்பானியப் பெயரின் மொழிபெயர்ப்பான பிலிப்பைன் தீவுகள் என இந்நாட்டைக் குறிப்பிட்டனர். 1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து பிலிப்பைன்ஸ் என்ற பெயர் தோன்றி நாட்டின் பொதுவான பெயராகவும் மாறியது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து இந்நாட்டின் உத்தியோகபூர்வப் பெயரானது பிலிப்பைன்ஸ் குடியரசு என்று வழங்கப்பட்டுவருகின்றது.[14]

வரலாறு[தொகு]

வரலாற்றுக்கு முன்[தொகு]

இத்தீவுக் கூட்டத்தின் பழமையான மனிதனாக இதுவரை அறியப்பட்டவரையில், கலாவோ மனிதனின் கால் எலும்புகளை யுரேனியத் தொடர் நாட்கணிப்பிற்கு உட்படுத்திய போது 67,000 ஆண்டுகள் பழமையானது என நம்பகமான முறையில் தெரியவந்துள்ளது.[15] இதற்கு முன்னர், காபன் நாட்கணிப்பின் மூலம் 24,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்ட, பிலிப்பைன்சின் மாகாணமான பலாவனைச் சேர்ந்த, தபொன் மனிதனே பழமையான மனிதனாகக் காணப்பட்டான்.[16][17] நெகிரிடோசும் இத்தீவுக்கூட்டத்தின் முற்காலத்திய குடியேறிகளின் மத்தியில் ஒன்றாக இருந்த போதிலும் அவர்களின் தோற்றம் பிலிப்பைன்சில் எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் நம்பகமான முறையில் கணிக்கப்படவில்லை.[18] பண்டைய பிலிப்பினோக்களின் தோற்றம் தொடர்பாகப் பல எதிர்மாறான கோட்பாடுகள் நிலவுகின்றன. மிகவும் பரவலாக மொழியியல் மற்றும் தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவுட் ஒஃப் தாய்வான் எனும் மாதிரி காணப்படுகின்றது. இதன் படி தாய்வானிலிருந்து வந்த ஆஸ்திரோனேசியரகள் முன்னர் வருகைதந்தவர்களை இடம்பெயரச்செய்து, கி.மு. 4000 இல் பிலிப்பைன்சில் குடிபெயர்ந்தனர்.[19][20] கி.மு. 1000 அளவில் தீவுக்கூட்டத்தின் மக்கள் வேட்டையாடும் பழங்குடியினர், போர்வீரர் சங்கங்கள், மலைநாட்டின் பணம் படைத்த பிரபுக்கள் மற்றும் கடலோர துறைமுக முகாமையாளர்கள் என நான்கு வகையான சமூகக் குழுக்களாக வளர்ச்சியடைந்திருந்தனர்.[21]

எசுப்பானியக் காலனியாதிக்கம்[தொகு]

மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி ஆல் 1590 இல் கட்டப்பட்ட மணிலாவிலுள்ள சாந்தியாகோ கோட்டை.

1521 ஆம் ஆண்டு, போர்த்துக்கேய நாடுகாண் பயணியான பேர்டினண்ட் மகலன் பிலிப்பைன்சை வந்தடைந்து இத்தீவுக்கூட்டத்தை எசுப்பானியாவிற்கு உரித்துடையதாக்கினார்.[22] எசுப்பானிய நாடுகாண் பயணியான மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி 1565 ஆம் ஆண்டு மெக்சிக்கோவிலிருந்து இங்கு வந்து, முதலாவது ஐரோப்பியக் குடியேற்றங்களை செபுவில் அமைத்ததிலிருந்து காலனியாதிக்கம் ஆரம்பமானது. பூர்வீக எதிர்ப்பை அடக்கியமை மற்றும் சீன கடற்கொள்ளைப் போர்ப்பிரபுவான லிமஹொங்கைத் தோற்கடித்தமை என்பவற்றின் பின்னர், எசுப்பானியர்கள் 1571 ஆம் ஆண்டு எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைநகரமாக மணிலாவைப் பிரகடனப்படுத்தினார்கள்.[23][24] எசுப்பானிய ஆட்சியானது இத்தீவுக்கூட்டத்தின் பிரிவுபட்ட பிராந்தியங்களின் மத்தியில் அரசியல் ஒற்றுமையைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. 1565 இல் இருந்து 1821 வரை பிலிப்பைன்ஸ் தீவானது புதிய எசுப்பானியாவின் உப அரசின் ஒர் பிரதேசமாக ஆட்சிசெய்யப்பட்டு, மெக்சிக்கன் சுதந்திரப் போரின் பின்னர் மட்ரிட்டிலிருந்து நேரடியாக ஆட்சிசெய்யப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரை மணிலா கலியன் என்ற கப்பலும் பெரிய கடற்படையும் மணிலாவிற்கும் அக்கபல்கோவிற்கும் இடையே ஒரு வருடத்தில் இருமுறை பயணித்தது. இவ்வர்த்தகம் சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், மிளகு தூள், மற்றும் அன்னாசி போன்ற அமெரிக்காவில் இருந்து வந்த உணவுகளை இங்கு அறிமுகப்படுத்தியது.[24] உரோமன் கத்தோலிக்க மதபிரசாரகர்கள் பெரும்பாலான தாழ்நில மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றினார்கள். அத்துடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் வைத்தியசாலைகளையும் அமைத்தனர். எசுப்பானிய ஆணையின் மூலம் 1863 ஆம் ஆண்டு இலவசப் பொதுப் பள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கக் காலகட்டத்திலேயே வெகுசன பொதுக்கல்வி முறையின் முயற்சிகள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தன.[25]

பிரச்சார இயக்கத்தின் தலைவர்களான ஜோஸ் ரிசால், மார்செலோ எச். டெல் பிலார், மற்றும் மரியானோ பொன்ஸ்.

எசுப்பானியா அதனுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு உள்ளூர் புரட்சிகளை எதிர்கொண்டதுடன் சீன, டச்சு, மற்றும் போர்த்துகீச கடற்கொள்ளையர்களிடமிருந்து பல்வேறு வெளியகக் காலனித்துவச் சவால்களையும் எதிர்கொண்டது. தொடர்ந்து போராடிய ஏழு ஆண்டுகள் போரின் ஒரு நீடிப்பாக பிரிட்டனின் படைகள் 1762 இல் இருந்து 1764 வரை மணிலாவைக் கைப்பற்றிக்கொண்டனர். இறுதியில் எசுப்பானியாவின் ஆட்சி 1763 ஆம் ஆண்டு பாரிஸ் பாரிஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து மீட்டெடுக்கப்பட்டது.[26][27][28] 19 ஆம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் துறைமுகங்கள் உலக வர்த்தகத்திற்காகத் திறந்துவைக்கப்பட்டதில் இருந்து பிலிப்பைன்ஸ் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பல எசுப்பானியர்கள் பிலிப்பைன்சில் பிறந்தனர் (கிரியொல்லோ). அத்துடன் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தோர் செல்வந்தர்களாக மாறியதுடன், ஐபேரியன் குடாநாட்டில் பிறந்த எசுப்பானியர்கள் பாரம்பரியமாக வகித்துவந்த அரசாங்க பதவிகள், இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த குடியேற்றக்காரர்களும் திறந்துவிடப்பட்டது. புரட்சிக்கான சிந்தனைகளும் தீவுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தன. 1872 ஆம் ஆண்டு கவைட் கலகத்தில் ஏற்பட்ட கிரியொல்லோ அதிருப்தி பிலிப்பைன்ஸ் புரட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தது.[26][29][30][31]

அமெரிக்க காலம்[தொகு]

சனாதிபதி மானுவேல் எல். குவிசொன் (நவம்பர் 1942)

1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் எசுப்பானியா இத்தீவுகளை, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது.[32] அப்போது புதிதாக முளைவிட்டுப் பெருகிச்சென்ற முதல் பிலிப்பைன்ஸ் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.[33] நலிவடைந்த, சுல்தான்களின் ஆட்சிக்குட்பட்ட இடமாகவிருந்த சூலுவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிராகப் பெருமளவில் மோரோ கிளர்ச்சி தோன்றியது.[34] இந்தக் காலத்தில், பிலிப்பைன் கலாசாரத்தில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன் பிலிப்பைன் திரைத்துறை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஒரு விரிவாக்கம் நிகழ்ந்தது.[35][36][37][38] மணிலாவை நவீன நகரமாக மாற்றும் பொருட்டு டானியல் பெர்ன்ஹாம் ஒரு கட்டுமானத் திட்டத்தை வடிவமைத்தார்.[39]

1935 ஆம் ஆண்டு, பிலிப்பைன்சிற்குப் பொதுநலவாய அந்தஸ்து வழங்கப்பட்டதுடன் மானுவேல் குவிசொன் சனாதிபதிப் பொறுப்பை ஏற்றார். அவர் தேசிய மொழியொன்றை நியமித்ததுடன் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.[40][41] சப்பானியப் பேரரசு படையெடுத்தமை மற்றும் ஜோஸ் பி. லாரல் ஆல் இரண்டாம் பிலிப்பைன் குடியரசு ஒருங்கிணைப்பு மாநிலமாக நிறுவப்பட்டமை ஆகிய காரணங்களால், அடுத்த தசாப்த காலத்தில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டங்கள் இரண்டாம் உலகப் போரின் காலகட்டட்தில் தடைப்பட்டன. பட்டன் இறப்பு மார்ச் மற்றும் மணிலா போரின் போது உச்சக்கட்டத்தை அடைந்த மணிலா படுகொலை போன்ற பல அட்டூழியங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் யுத்தத்தின் போது இழைக்கப்பட்டன.[42] 1944 இல் குவிசொன் அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் இறந்ததுடன் செர்ஜியோ ஒஸ்மெனா அவரைத் தொடர்ந்து சனாதிபதியானர். நேசநாடுகளின் படைகள் 1945 ஆம் ஆண்டு சப்பானியர்களைத் தோற்கடித்தனர். போரின் முடிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பினோக்கள் இறந்து விட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[43][44][45]

சமகால வரலாறு[தொகு]

மீண்டும் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சனநாயக மற்றும் அரசாங்கச் சீர்திருத்தங்களாவன தேசிய கடன், அரசாங்கத்தின் ஊழல், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், பேரழிவுகள், தொடர்ச்சியான கம்யூனிஸ்ட் கிளர்ச்சி,[46] மற்றும் மோரோ பிரிவினைவாதிகளுடனான இராணுவ மோதல் என்பவற்றின் காரணமாகத் தடுக்கப்பட்டன.[47] கொராசன் அக்குவினோவின் நிர்வாகம், பினாடுபோ மலையின் வெடிப்புடன் முடிவடைந்தது.[48][49] இதன் காரணமாக அமெரிக்கப் படைகள் சூபிக் விரிகுடா மற்றும் கிளார்க் விமான தளத்திலிருந்து வெளியேறின. 1992 ஆம் ஆண்டு சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிடெல் வி. ராமோஸ் அவர்களின் நிர்வாகத்தின் போது நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது. இருந்தபோதிலும், மோரோ தேசிய விடுதலை முன்னணியுடனான சமாதான உடன்படிக்கை,[50] போன்ற அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாடுகள், 1997 ஆம் ஆண்டில் கிழக்காசிய நிதி நெருக்கடி ஆரம்பித்ததன் காரணமாக முழுவதுமாக மறுதலிக்கப்பட்டன.[51][52]

2001 இல், அபு சயாவ் உடன் தொடரும் மோதலுக்கு மத்தியில்,[53] ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், மற்றும் ஒரு முடக்கப்பட்ட பாரிய குற்ற பிரேரணையின் காரணமாக ராமோஸ் இன் வாரிசான ஜோசப் எஸ்ட்ராடா 2001 எட்சா புரட்சி மூலம் அகற்றப்பட்டு குளோரியா மெக்கபாகல்-அர்ரோயோ அவருக்குப் பதிலாகப் பதிலீடு செய்யப்பட்டார்.[54] பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை அனுபவித்தமை மற்றும் பெரும் மந்தநிலையைத் தவிர்க்க முடிந்தமை[55][56][57][58] போன்றவை நிகழ்ந்த போதிலும் அவரது 9 ஆண்டு நிர்வாகம் இலஞ்சம் மற்றும் அரசியல் ஊழல்களால் கட்டப்பட்டிருக்கின்றது. நவம்பர் 23, 2009 அன்று இடம்பெற்ற, மகுயினாடோ படுகொலை 34 பத்திரிகையாளர்களின் கொலைக்கு வழிவகுத்தது.[59][60] 2010 ஆம் ஆண்டு, பெனிஞோ அகுவினோ III சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது காலப்பகுதியில் வடக்கு போர்னியோ மற்றும் தென் சீனக் கடலில் நிலப்பகுதி மோதல்கள் அதிகரித்த போது பாங்சமோரோ சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.[61][62][63][64] 2013 ஆம் ஆண்டு ஹையான் சூறாவளி பிலிப்பைன்சைத் தாக்கியது.[65]

அரசியல் மற்றும் அரசாங்கம்[தொகு]

பிலிப்பைன்ஸ் குடியரசின் தற்போதைய மற்றும் 15 ஆவது சனாதிபதியான பெனிஞோ அகுவினோ III

பிலிப்பைன்ஸ், ஜனாதிபதி முறையைக் கொண்ட, ஒரு அரசியலமைப்பு குடியரசு வடிவில் அமைந்த, ஒரு சனநாயக அரசாங்கத்தைக் கொண்டது.[66] தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரமாகச் செயற்படும் முஸ்லிம் மிந்தானோ தன்னாட்சி பிரதேசத்தைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள், ஓர் ஒற்றையாட்சி அரசாக நிர்வகிக்கப்படுகின்றது. ராமோசின் நிர்வாகத்தில் இருந்து ஒரு கூட்டாட்சி, ஓரவை, அல்லது நாடாளுமன்ற அரசாங்கத்திற்கு அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.[67][68]

மாநில மற்றும் அரசாங்கத் தலைவராகவும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் சனாதிபதி செயற்படுகின்றார். சனாதிபதி ஆறு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பகின்றார். அவரது காலத்தில் அமைச்சரவையை நியமிப்பதுடன் அதற்குத் தலைமையும் வகிக்கின்றார்.[69]

பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை[தொகு]

பிலிப்பைன்சின் பாதுகாப்பு பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகளின் மூலம் கையாளப்படுவதுடன், இது வான் படை, தரைப் படை, கடற் படை (கடற்படைச் சிறப்புப் பிரிவு உட்பட) என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.[70][71][72] குடிமக்கள் பாதுகாப்பானது, உள்துறை மற்றும் உள்ளூர் அரசாங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பிலிப்பைன் தேசியக் காவல்துறையால் கையாளப்படுகின்றது.[73][74]

மிகப்பெரிய பிரிவினைவாத அமைப்பான முஸ்லிம் மிந்தனவு தன்னாட்சிப் பகுதியில் மோரோ தேசிய விடுதலை முன்னணி தற்போது அதன் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் செயற்படுத்துகின்றது. இதர போராளி குழுக்களான மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி, கம்யூனிஸ்ட் புதிய மக்கள் இராணுவம், மற்றும் அபு சயாவ் போன்றவை இன்னும் மாகாணங்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வழங்கிய வெற்றிகரமான பாதுகாப்பின் காரணத்தால், அவர்களின் இருப்பு அண்மைய ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளது.[75][76]

சர்வதேச உறவுகள்[தொகு]

ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. யில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம்.

பிலிப்பைன்சின் சர்வதேச உறவுகள், மற்றைய நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளையும், நாட்டின் வெளியே வாழும் 11 மில்லியன் வெளிநாட்டுப் பிலிப்பினோக்களின் நல்வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன.[77] ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய மற்றும் அதன் தற்போதைய சுறுசுறுப்பான அங்கத்தவர் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அங்கத்தவர்களுள் ஒருவராகப் பிலிப்பைன்ஸ் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கார்லஸ் பி. ரொமுலோ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளர். பிலிப்பைன்சானது மனித உரிமைகள் ஆணையத்திலும், குறிப்பாகக் கிழக்குத் திமோரில் சமாதானப் பாதுகாப்புப்பணிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றது.[78][79][80]

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிப்பதற்கு மேலதிகமாக, இந்நாடானது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை நிறுவிய மற்றும் அதன் தற்போதைய சுறுசுறுப்பான அங்கத்தவராகவும் இருக்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தவும் பொருளாதார மற்றும் கலாசார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.[81] பிலிப்பைன்ஸ் பல ஆசியான் மாநாடுகளை நடத்தியதுடன் இவ்வைமைப்பின் வழிகாட்டல் மற்றும் கொள்கைகளை அமைப்பதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளராகச் செயற்படுகின்றது.[82]

பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவுடன் பெறுமதியான உறவுகளைக் கொண்டுள்ளது.[77] பிலிப்பைன்ஸ் பனிப்போர் காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் ஐக்கிய அமெரிக்காவை ஆதரித்ததுடன் இது ஒரு முக்கிய நேட்டோ அல்லாத கூட்டணி ஆகும். இவ்வாறாக வரலாற்றில் நல்லெண்ணமொன்று இருக்கும் போதிலும், சபிக் விரிகுடா, கிளார்க் விமான தளம் ஆகியவற்றில் தற்போதும் முன்னாள் அமெரிக்க இராணுவ தளங்கள் இருத்தல், மற்றும் தற்போதைய வருகை படைகள் ஒப்பந்தம், தொடர்பான சர்ச்சைகள் நேரத்திற்கு நேரம் எழுந்துகொண்டிருக்கின்றன.[77] நாட்டின் உத்தியோகபூர்வ நிதி மற்றும் அபிவிருத்தி உதவியில் பாரிய பங்களிப்புச்செய்கின்ற நாடான சப்பான்,[83] ஒரு நட்பு நாடாகக் கருதப்படுகின்றது. இருந்தபோதிலும் ஆறுதலளிக்கும் பெண்களின் அவல நிலை போன்ற வரலாற்று ரீதியான அழுத்தங்கள் இன்னமும் இருக்கின்றன. இரண்டாம் உலக போர் நினைவுகள் ஈர்க்கப்பட்டு இவற்றுக்கிடையான விரோதம் மிகவும் மறைந்துள்ளது.[84]

மற்ற நாடுகளுடன் உள்ள உறவும் பொதுவாக நல்ல நிலையில் இருக்கின்றது. மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஜனநாயக விழுமியத்துடனான எளிதான உறவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள அதேவேளை, இதே போன்று பொருளாதார அக்கறையுடன் உதவுதல் என்பவற்றின் மூலம் மற்றைய வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுடன் உறவைப் பேணுகின்றது. வரலாற்று ரீதியான பிணைப்புக்கள் மற்றும் கலாசார ஒற்றுமைகள் என்பன எசுப்பானியாவுடனான உறவில் ஒரு பாலமாகச் செயற்படுகின்றன.[85][86][87] உள்நாட்டு முறைகேடு மற்றும் வெளிநாட்டு பிலிப்பினோ தொழிலாளர்களை போர் பாதித்தல் போன்ற பிரச்சனைகள் இருந்த போதிலும்,[88][89] மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் நட்பு ரீதியாக உள்ளன என்பது, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பிலிப்பினோக்கள் தொடர்ச்சியாக வேலைசெய்துகொண்டு அங்கு வாழ்வதிலிருந்து தெளிவாகின்றது.[90][91]

இனிமேல் கம்யூனிச முறையில் இருந்த அச்சுறுத்தல் இல்லை என்பதால், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையே 1950 களில் ஒருமுறை விரோதமாக இருந்த உறவுகள் தற்போது பெரிதும் மேம்பட்டுள்ளது. தாய்வான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான, ஸ்பிரட்லி தீவுகள், மற்றும் சீனாவின் செல்வாக்கு விரிவடைதல் தொடர்பான கவலைகள் போன்றவை இருப்பினும், தற்போது அது தொடர்பான எச்சரிக்கையைச் சற்று அதிகரித்துள்ளது.[84] சமீபத்திய வெளிநாட்டு கொள்கைகள், அதன் தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆசிய பசிபிக் அண்டை நாடுகளுடனான பொருளாதார உறவுகளைப் பற்றியே பெரும்பாலும் இருந்து வருகின்றது.[77]

கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS), ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) இலத்தீன் ஒன்றியம், குழு 24, மற்றும் அணிசேரா இயக்கம் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸ் ஆர்வம் மிக்க உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றது.[69] இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதன் மூலம், இசுலாமிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தப் பிலிப்பைன்ஸ் முயன்று வருகின்றது.[92][93]

புவியியல்[தொகு]

பிலிப்பைன்சானது 7,107 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டமாகும்.[69] உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளடங்கலாக இதன் மொத்தப் பரப்பளவு அண்ணளவாக 300,000 சதுர கிலோமீற்றர்கள் ((115,831 சதுர மைல்) ஆகும்.[94] அத்துடன் 36,289 கிலோமீற்றர் (22,549 மைல்) நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட பிலிப்பைன்ஸ், உலகின் ஐந்தாவது நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட நாடாக விளங்குகின்றது.[69][95] இது 116° 40', மற்றும் 126° 34' கிழக்கு நெடுங்கோட்டிற்கும் 4° 40' மற்றும் 21° 10' வடக்கு அகலக்கோட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது. பிலிப்பைன்சின் எல்லைகளாக, கிழக்கே பிலிப்பைன் கடலும், மேற்கே தென் சீனக் கடலும், தெற்கே செலெபெஸ் கடலும் அமைந்துள்ளன. போர்னியோ தீவுகள் தென்கிழக்கில் சில நூறு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுடன் சரியாக வடக்குத் திசையில் தாய்வான் அமைந்துள்ளது. மொலுக்காஸ் மற்றும் சுலவேசி ஆகிய தீவுகள் தென்-தென்மேற்கில் அமைந்துள்ளதுடன் பிலிப்பைன்சின் கிழக்கில் பலாவு அமைந்துள்ளது.[69]

இங்குள்ள மலைப்பாங்கான தீவுகளில் பெரும்பாலானவை வெப்பமண்டல மழைக்காடுகளால் மூடப்பட்டிருப்பதுடன் ஆரம்பத்தில் அவை எரிமலையாக இருந்துள்ளன. இத்தீவுகளில் உள்ள மிக உயரமான மலையாக அப்போ மலை விளங்குகின்றது. இது கடல் மட்டத்திற்கு மேல் 2,954 மீற்றர் (9,692 அடி) உயரத்தில், மின்டானோ தீவில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் ஆழியில் உள்ள கலத்தியா ஆழமே இந்நாட்டின் மிக ஆழமான இடமாகவும், உலகின் மூம்றாவது ஆழமான இடமாகவும் உள்ளது. இந்த ஆழி பிலிப்பைன் கடலில் அமைந்துள்ளது. மிக நீளமான ஆறாக லூசோனில் அமைந்துள்ள ககயான் ஆறு விளங்குகின்றது. தலை நகரான மணிலா அமைந்துள்ள மணிலா விரிகுடா, பிலிப்பைன்சின் மிகப்பெரிய ஏரியாகிய லகுனா டி பே உடன், பாசிக் ஆற்றினால் இணைக்கப்பட்டுள்ளது. சபிக் விரிகுடா, டவாவோ வளைகுடா, மற்றும் மோரோ வளைகுடா ஆகியவை இங்குள்ள ஏனைய முக்கிய விரிகுடாக்கள் ஆகும். சமர் மற்றும் லெய்ட்டி தீவுகளை பிலிப்பைன்சிலிருந்து சான் ஜுவானிக்கோ நீரிணை பிரிக்கின்ற போதிலும் அதன் குறுக்காக அமைந்துள்ள சான் ஜுவானிக்கோ பாலத்தின் மூலம் இவை இணைக்கப்பட்டுள்ளன.[96]

வடக்குப் பிலிப்பைன்சின் செங்குத்தான மலைப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட இகோரொட் படிக்கட்டுப் பயிர்ச்செய்கை
வடக்குப் பிலிப்பைன்சின் செங்குத்தான மலைப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட இகோரொட் படிக்கட்டுப் பயிர்ச்செய்கை

பசுபிக் நெருப்பு வளையத்தின் மேற்கு எல்லைப்புறத்தின் மீது அமைந்துள்ளமையால் பிலிப்பைன்சில் அடிக்கடி பூமியதிர்ச்சி மற்றும் எரிமலை வெடிப்புக்கள் நிகழ்கின்றன. பிலிப்பைன்சிற்குக் கிழக்கில் பிலிப்பைன் கடலில் அமைந்துள்ள பென்ஹாம் மேட்டுநிலம் துரிதமாக நில அடுக்குகள் இயங்கும் கடலுக்கடியிலுள்ள பிரதேசமாகும்.[97] கிட்டத்தட்ட 20 பூமியதிர்ச்சிகள் தினமும் பதிவு செய்யப்படுகின்ற போதிலும் பெரும்பாலானவை பலவீனமானவை ஆகையால் அவை உணர முடியாதவையாக உள்ளன. 1990 லூசோன் பூகம்பமே இறுதியாக ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியாகும்.[98] மயோன் எரிமலை, பினாடுபோ மலை, மற்றும் தால் எரிமலை ஆகியவை இன்றும் செய்யற்பாட்டிலுள்ள எரிமலைகளாக உள்ளன. 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் ஏற்பட்ட பினாடுபோ மலையின் எரிமலை வெடிப்பே 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பெரிய, தரையில் எற்பட்ட எரிமலை வெடிப்பாக உள்ளது.[99] இங்குள்ள அனைத்துக் குறிப்பிடத்தக்க புவியியல் அம்சங்களும் வன்முறை அல்லது அழிவைச் சார்ந்தவையாக இல்லை. புவியியல் தொந்தரவுகளற்ற அமைதியான மரபுரிமைத் தலமாக புவேர்டோ பிரின்செசா எனப்படும் பூமிக்கு அடியிலுள்ள ஆறு விளங்குகின்றது. இப்பிரதேசம் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்கும் ஒரு வாழ்விடமாக இருக்கின்றது. மேலும் ஒரு முழுமையான் மலைக்கும் கடலுக்குமான சூழலமைப்பைக் கொண்டுள்ளதுடன் ஆசியாவில் மிக முக்கியமான காடுகள் சிலவும் இங்கு அமைந்துள்ளன.[100]

இத்தீவுகளில் உள்ள எரிமலைத் தன்மை காரணமாக இங்கு கனிமப் படைகள் ஏராளமாக உள்ளன. தென்னாபிரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக தங்கப் படிவுகள் கிடைக்கும் இடமாக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன் உலகின் மிகப்பாரிய செப்புப் படிவுகள் உள்ள இடமாகவும் உள்ளது.[101] இங்கு நிக்கல், குறோமைட்டு மற்றும் துத்தநாகம் ஆகியவையும் பேரளவில் கிடைக்கின்றன. இவ்வாறு இருந்த போதிலும்கூட, மோசமான நிர்வாகம், அதிக மக்கள் தொகை, மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வின்மை ஆகிய காரணங்களால் இக்கனிம வளங்கள் பாரியளவில் தோண்டி எடுக்கப்படாத நிலையில் உள்ளன.[101] இங்கு எரிமலைகளின் விளைபொருளாகிய புவிவெப்பச் சக்தியை பயனுள்ள வகையில் வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய புவிவெப்பச் சக்தி உற்பத்தியாளராக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன், 18% வீதமான நாட்டின் மின்சாரத் தேவைகள் புவிவெப்பச் சக்தியின் மூலம் பூர்த்திசெய்யப்படுகின்றது.[102]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

பிலிப்பைன்சின் மழைக்காடுகளும் அதன் தொடர்ச்சியான கடலோரப் பகுதிகளும், பலவிதமான பறவைகள், தாவரங்கள், விலங்குகள், மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் என்பவற்றிற்கு வாழ்விடமாக உள்ளன.[103] பிலிப்பைன்ஸ், மிகவும் உயிரியல் பன்முகத்தன்மை மிக்க முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளதுடன் ஓரலகுப் பகுதியில் அதிக உயிர்ப் பல்வகைமை உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.[104][105][106] வேறெங்கும் இல்லாத வகையில், 100 வகையான முலையூட்டிகளும் 170 வகையான பறவைகளும் உள்ளடங்கலாகக் கிட்டத்தட்ட 1,100 வகையான தரைவாழ் முள்ளந்தண்டுளிகள் பிலிப்பைன்சில் இனங்காணப்பட்டுள்ளன.[107] பிலிப்பைன்சானது உலகிலேயே மிக உயர்ந்த விகிதத்தில் உயிரினங்களின் கண்டுபிடிப்பு நிகழும் நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கடந்த பத்து வருடங்களில் பதினாறு புதிய முலையூட்டி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பிலிப்பைன்சிற்கு உரித்தான உயிரினங்களின் விகிதம் உயர்ந்துள்ளதுடன் இதே போன்று மேலும் உயரக்கூடிய சாத்தியங்களும் உள்ளன.[108]

மிகச் சிறிய குரங்கினங்களில் ஒன்றான பிலிப்பைன் டார்சியர் (Tarsius syrichta)

பைத்தன் மற்றும் நாகம் போன்ற பாம்புகள், உவர்நீர் முதலைகள், தேசியப் பறவையாக விளங்கும் பிலிப்பைன் கழுகு போன்ற இரைதேடியுண்ணும் பறவைகள் என்பவற்றைத் தவிர்த்துப் பிலிப்பைன்சில் பெரிய இரைதேடியுண்ணும் உயிரினங்கள் இல்லை. பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.[109][110] மிகப் பெரிய சிறைப்பிடிக்கப்பட்ட முதலையாக தெற்குத் தீவாகிய மின்டனோவில் பிடிக்கப்பட்ட முதலை விளங்குகின்றது.[111] ஏனைய பூர்வீக விலங்குகளில் போஹொலில் உள்ள ஆசிய மரநாய், ஆவுளியா, பிலிப்பைன் டார்சியர் போன்றவயும் உள்ளடங்குகின்றன. இங்குள்ள கிட்டத்தட்ட 13,500 வகையான தாவரங்களுள், 3,200 வகைகள் இத்தீவுடளுக்கு மட்டும் உரித்தானவை.[107] பல்வேறு அரிய வகையான ஆர்க்கிட் மற்றும் ரபிளீசியா என்பவை உள்ளடங்கலாகப் பல்வேறு தாவர வகைகள் பிலிப்பைன் மழைக்காடுகளில் உள்ளன.[112][113]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Republic act no. 8491". Republic of the Philippines. பார்த்த நாள் 2014-03-08.
 2. "Presidential Decree No. 940" (May 29, 1976).
 3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; 7_mother_languages என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. "East & Southeast Asia :: Philippines". The World Factbook. Washington, D.C.: Author: Central Intelligence Agency (2009-10-28). பார்த்த நாள் 2009-11-07.
 5. 5.0 5.1 5.2 5.3 "Philippines". International Monetary Fund. பார்த்த நாள் January 2014.
 6. General Profile of the Philippines : Geography (archived from the original on 2005-11-04), Philippine Information Agency.
 7. Projected Population as of May 6, 2013, PH: Commission on Population, May 6, 2013, http://www.popcom.gov.ph/ 
 8. Global Pinoys to rally at Chinese consulates – The Philippine Star » News » Headlines. Philstar.com (2012-04-27). Retrieved on 2012-07-04.
 9. Scott, William Henry. (1994). Barangay: Sixteenth-century Philippine Culture and Society. Ateneo de Manila University Press. p. 6. ISBN 971-550-135-4. http://books.google.com/?id=15KZU-yMuisC. 
 10. Spate, Oskar H. K. (1979). "Chapter 4. Magellan's Successors: Loaysa to Urdaneta. Two failures: Grijalva and Villalobos". The Spanish Lake – The Pacific since Magellan, Volume I. Taylor & Francis. p. 97. ISBN 0-7099-0049-X. http://epress.anu.edu.au/spanish_lake/mobile_devices/ch04s05.html. பார்த்த நாள்: 2010-01-07. 
 11. Friis, Herman Ralph. (Ed.). (1967). The Pacific Basin: A History of Its Geographical Exploration. American Geographical Society. p. 369. http://books.google.com/?id=veuwAAAAIAAJ&cd=5&dq=islas+del+poniente+san+lazaro&q=islas+del+poniente#search_anchor. 
 12. Galang, Zoilo M. (Ed.). (1957). Encyclopedia of the Philippines, Volume 15 (3rd ed.). E. Floro. p. 46. http://books.google.com/?id=lt5uAAAAMAAJ&cd=2&dq=islas+del+poniente+san+lazaro&q=islas+del+poniente+#search_anchor. 
 13. Tarling, Nicholas. (1999). The Cambridge History of Southeast Asia – Volume One, Part Two – From c. 1500 to c. 1800. Cambridge, UK: Cambridge University Press. p. 12. ISBN 0-521-66370-9. http://books.google.com/?id=jtsMLNmMzbkC&printsec=frontcover#v=onepage&q. 
 14. Quezon, Manuel, III. (2005-03-28). "The Philippines are or is?". Manuel L. Quezon III: The Daily Dose. Retrieved 2009-12-20.
 15. Henderson, Barney (August 4, 2010). "Archaeologists unearth 67000-year-old human bone in Philippines". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/news/worldnews/asia/philippines/7924538/Archaeologists-unearth-67000-year-old-human-bone-in-Philippines.html. பார்த்த நாள்: August 4, 2010. 
 16. Fox, Robert B. (1970). The Tabon Caves: Archaeological Explorations and Excavations on Palawan. National Museum. p. 44. http://books.google.com/?id=pd6AAAAAMAAJ&q=tabon+man. பார்த்த நாள்: 2009-12-16. 
 17. Scott, William Henry. (1984). Prehispanic Source Materials for the Study of Philippine History. Quezon City: New Day Publishers. p. 15. ISBN 971-10-0227-2. http://books.google.com/?id=FSlwAAAAMAAJ&q=pre-mongoloid. 
 18. Scott, William Henry. (1984). Prehispanic Source Materials for the Study of Philippine History. Quezon City: New Day Publishers. p. 138. ISBN 971-10-0227-2. http://books.google.com/?id=FSlwAAAAMAAJ&q=pygmy+Negrito. "Not one roof beam, not one grain of rice, not one pygmy Negrito bone has been recovered. Any theory which describes such details is therefore pure hypothesis and should be honestly presented as such." 
 19. Solheim, Wilhelm G., II. (January 2006). Origins of the Filipinos and Their Languages. Archived from the original on 2008-08-03. http://web.archive.org/web/20080803020434/http://web.kssp.upd.edu.ph/linguistics/plc2006/papers/FullPapers/I-2_Solheim.pdf. பார்த்த நாள்: 2009-08-27. 
 20. Mijares, Armand Salvador B. (2006). The Early Austronesian Migration To Luzon: Perspectives From The Peñablanca Cave Sites. Bulletin of the Indo-Pacific Prehistory Association 26: 72–78.
 21. Legarda, Benito, Jr. (2001). "Cultural Landmarks and their Interactions with Economic Factors in the Second Millennium in the Philippines". Kinaadman (Wisdom) A Journal of the Southern Philippines 23: 40. 
 22. Zaide, Gregorio F. and Sonia M. Zaide (2004). Philippine History and Government (6th ed.). All-Nations Publishing Company. 
 23. Kurlansky, Mark. (1999). The Basque History of the World. New York: Walker & Company. p. 64. ISBN 0-8027-1349-1.
 24. 24.0 24.1 Joaquin, Nick. (1988). Culture and History: Occasional Notes on the Process of Philippine Becoming. Manila: Solar Publishing.
 25. Dolan, Ronald E. (Ed.). (1991). "Education". Philippines: A Country Study. Washington: GPO for the Library of Congress. Retrieved 2009-12-20 from Country Studies US Website.
 26. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Agoncillo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 27. Halili, Maria Christine N. (2004). Philippine History. Rex Bookstore. பக். 119–120. ISBN 971-23-3934-3. http://books.google.com/?id=gUt5v8ET4QYC&pg=PA119&q=. பார்த்த நாள்: 2010-01-08. 
 28. De Borja, Marciano R. (2005). Basques in the Philippines. University of Nevada Press. பக். 81–83. ISBN 0-87417-590-9. http://books.google.com/?id=xXpiujH2uOwC&pg=PA81&q=. பார்த்த நாள்: 2010-01-08. 
 29. Nuguid, Nati. (1972). "The Cavite Mutiny". in Mary R. Tagle. 12 Events that Have Influenced Philippine History. [Manila]: National Media Production Center. Retrieved 2009-12-20 from StuartXchange Website.
 30. Joaquin, Nick. A Question of Heroes.
 31. Richardson, Jim. (January 2006). "Andrés Bonifacio Letter to Julio Nakpil, April 24, 1897". Documents of the Katipunan. மூல முகவரியிலிருந்து 2013-01-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-12-19.
 32. Price, Michael G. (2002). Foreword. In A. B. Feuer, America at War: the Philippines, 1898–1913 (pp. xiii–xvi). Westport, Connecticut: Greenwood. ISBN 0-275-96821-9.
 33. Gates, John M. (November 2002). "The Pacification of the Philippines". The U.S. Army and Irregular Warfare. http://www3.wooster.edu/history/jgates/book-ch3.html. பார்த்த நாள்: 2010-02-20. 
 34. Kho, Madge. "The Bates Treaty". PhilippineUpdate.com. பார்த்த நாள் 2007-12-02.
 35. {{|url=http://benjieordonez.blogspot.com/2005/01/visayan-film-industry-retrospective.html%7Cdate=5 January 2005 |accessdate=2013-09-07 |format=Fee required}}
 36. 2014 Philippines Yearly Box Office Results
 37. Armes, Roy. "Third World Film Making and the West", p.152. University of California Press, 1987. Retrieved on 2011-01-09.
 38. "The Role of José Nepomuceno in the Philippine Society: What language did his silent film speaks?". Stockholm University Publications. Retrieved on 2014-01-28.
 39. Moore, Charles (1921). "Daniel H. Burnham: Planner of Cities". Houghton Mifflin and Co., Boston and New York.
 40. Molina, Antonio. The Philippines: Through the centuries. Manila: University of Sto. Tomas Cooperative, 1961. Print.
 41. Manapat, Carlos, et al. Economics, Taxation, and Agrarian Reform. Quezon City: C&E Pub., 2010.Print.
 42. White, Matthew. "Death Tolls for the Man-made Megadeaths of the 20th Century". Retrieved 2007-08-01.
 43. Rottman, Gordon L. (2002). World War 2 Pacific Island Guide – A Geo-Military Study. Westport, Connecticut: Greenwood Press. p. 318. ISBN 0-313-31395-4.
 44. "Cebu". encyclopedia.com, citing The Columbia Encyclopedia, Sixth Edition.. பார்த்த நாள் 2010-07-04.
 45. Zaide, Sonia M. (1994). The Philippines: A Unique Nation. All-Nations Publishing Co.. p. 354. ISBN 971-642-071-4. 
 46. Gov't drafts new framework to guide peace talks with leftist rebels.Philippine Star.
 47. Julie Alipala (October 2, 2010). "RP terror campaign cost lives of 11 US, 572 RP soldiers—military". Philippine Daily Inquirer. பார்த்த நாள் May 1, 2012.
 48. "Tarlac map". University of Texas in Austin Library. Retrieved on 2011-08-02.
 49. "Report of the Philippine Commission to the President, 1901 Vol. III", pg. 141. Government Printing Office, Washington, 1901.
 50. Gargan, Edward A. (December 11, 1997). "Last Laugh for the Philippines; Onetime Joke Economy Avoids Much of Asia's Turmoil". New York Times. http://www.nytimes.com/1997/12/11/business/last-laugh-for-philippines-onetime-joke-economy-avoids-much-asia-s-turmoil.html. பார்த்த நாள்: 2008-01-25. 
 51. "Financial Crisis and Global Governance: A Network Analysis" (July 2009). பார்த்த நாள் 11 June 2012. by Andrew Sheng, Adj. Prof., Tsinghua University and University of Malaya
 52. "Analyzing Systemic Risk with Financial Networks During a Financial Crash". பார்த்த நாள் 8 March 2014. by Taylan Yenilmez, Tinbergen Institute and Burak Saltoglu, Bogazici University
 53. "2 US Navy men, 1 Marine killed in Sulu land mine blast". GMA News. September 29, 2009. Archived from the original on October 2, 2009. http://www.gmanews.tv/story/173383/2-us-navy-men-1-marine-killed-in-sulu-land-mine-blast. பார்த்த நாள்: September 29, 2009. "Two US Navy personnel and one Philippine Marine soldier were killed when a land mine exploded along a road in Indanan, Sulu Tuesday morning, an official said. The American fatalities were members of the US Navy construction brigade, Armed Forces of the Philippines (AFP) spokesman Lt. Col. Romeo Brawner Jr. told GMANews.TV in a telephone interview. He did not disclose the identities of all three casualties."  and
  Al Pessin (September 29, 2009). "Pentagon Says Troops Killed in Philippines Hit by Roadside Bomb". Voice of America. http://www.voanews.com/english/news/a-13-2009-09-29-voa12.html. பார்த்த நாள்: January 12, 2011.  and
  "Troops killed in Philippines blast". Al Jazeera. September 29, 2009. Archived from the original on October 3, 2009. http://english.aljazeera.net/news/asia-pacific/2009/09/20099298614751808.html. பார்த்த நாள்: September 29, 2009.  and
  Jim Gomez (September 29, 2009). "2 US troops killed in Philippines blast". CBS News. Archived from the original on February 2, 2011. http://www.cbsnews.com/stories/2009/09/29/world/main5348332.shtml. பார்த்த நாள்: January 12, 2011. 
 54. Bowring, Philip. Filipino Democracy Needs Stronger Institutions. International Herald Tribune website. 2001, January 22. Retrieved January 27, 2009.
 55. "Bolante Faces Off with Senators Over Fertilizer Fund Scam". ANC (2008-11-13). மூல முகவரியிலிருந்து 2009-03-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-04.
 56. "Arroyo claims hollow victory" by Leslie Davis, Asia Times Online, September 27, 2005.
 57. "Corruption was Gloria's biggest mistake: survey". ABS-CBN News and Current Affairs. பார்த்த நாள் 15 April 2012.
 58. "Philippines charges Gloria Arroyo with corruption". The Guardian (18 November 2011). பார்த்த நாள் 15 April 2012. "Former president is formally accused of electoral fraud after government rushed to court as she tried to leave country"
 59. Jimenez-Gutierrez, Jason (November 23, 2010). "Philippines mourns massacre victims". Philippine Daily Inquirer. http://newsinfo.inquirer.net/breakingnews/nation/view/20101123-304817/Philippines-mourns-massacre-victims. பார்த்த நாள்: November 23, 2010. 
 60. Analyn Perez (November 25, 2009). "The Ampatuan Massacre: a map and timeline". GMA News (gmanews.tv). http://www.gmanetwork.com/news/story/177821/news/specialreports/the-ampatuan-massacre-a-map-and-timeline. 
 61. gov.ph (2012-10-15). "Speech of President Benigno Aquino III during the signing of the Framework Agreement on the Bangsamoro". Gov.ph. பார்த்த நாள் 2014-03-03.
 62. "The Republic of the Philippines v. The People's Republic of China". Pca-cpa.org. பார்த்த நாள் 2013-10-24.
 63. Del Cappar, Michaela (April 25, 2013). "ITLOS completes five-man tribunal that will hear PHL case vs. China". GMA News One. பார்த்த நாள் October 24, 2013.
 64. Frialde, Mike (23 February 2013). "Sultanate of Sulu wants Sabah returned to Phl". The Philippine Star. http://www.philstar.com/headlines/2013/02/23/912045/sultanate-sulu-wants-sabah-returned-phl. பார்த்த நாள்: 24 February 2013. 
 65. (November 22, 2013) Typhoon Haiyan death toll rises over 5,000. BBC. (Report). Retrieved on November 22, 2013.
 66. "Country description". US State Department Website. US State Department Website (January 2012). பார்த்த நாள் 2012-01-24. "The Philippines is an emerging economy with a democratic system of government."
 67. Robles, Alan C. (July–August 2008). "Civil service reform: Whose service?". D+C (Internationale Weiterbildung und Entwicklung [InWEnt]) 49: 285–289. http://www.inwent.org/ez/articles/077943/index.en.shtml. பார்த்த நாள்: 2008-11-30. 
 68. Bigornia, Amante. (1997-09-17). "The 'consultations' on Charter change". The Manila Standard. http://news.google.com/newspapers?id=no8VAAAAIBAJ&sjid=bQsEAAAAIBAJ&pg=4208,1807319&dq=. பார்த்த நாள்: 2009-12-13. 
 69. 69.0 69.1 69.2 69.3 69.4 General Information at the Wayback Machine (archived அக்டோபர் 22, 2007).. (older version – as it existed in 2007 – during the presidency of Gloria Macapagal Arroyo), The Official Government Portal of the Republic of the Philippines.
 70. Shoulder Ranks (Officers), The Philippine Army.(archived from the original on 2012-07-01)
 71. Philippine Military Rank Insignia, Globalsecurity.org.
 72. "AFP Organization". மூல முகவரியிலிருந்து 2008-04-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-02-03.
 73. "Department of the Interior and Local Government Act of 1990". Lawphil.net. Retrieved 2014-01-30.
 74. "Republic Act No. 6975". The LAWPHiL Project. பார்த்த நாள் 31 December 2012.
 75. "Guide to the Philippines conflict". (2007-08-10). BBC News. Retrieved 2009-12-16.
 76. World Bank. Conflict Prevention & Reconstruction Unit. (February 2005). The Mindanao Conflict in the Philippines: Roots, Costs, and Potential Peace Dividend by Salvatore Schiavo-Campo and Mary Judd. Washington, D.C.: World Bank. (Social Development Paper No. 24). Retrieved 2009-12-16.
 77. 77.0 77.1 77.2 77.3 U.S. Department of State. Bureau of East Asian and Pacific Affairs. (October 2009). "Background Note: Philippines". பார்த்த நாள் 2009-12-18.
 78. Permanent Mission of the Republic of the Philippines to the United Nations. [c. 2008]. About Us. Retrieved 2010-08-13.
 79. Permanent Mission of the Republic of the Philippines to the United Nations. [c. 2008]. The Philippines and the UN Security Council. Retrieved 2008-01-12.
 80. United Nations Security Council. (1999-10-25). Resolution 1272 [S-RES-1272(1999)]. Retrieved 2010-03-21.
 81. Bangkok Declaration. (1967-08-08). Retrieved 2009-12-20 from Wikisource.
 82. "ASEAN Primer" at the Wayback Machine (archived திசம்பர் 17, 2007).. (1999). 3rd ASEAN Informal Summit. Archived from the original on 2007-12-17. Retrieved 2009-12-13.
 83. Ministry of Foreign Affairs of Japan. [c. 2009]. "Japan's ODA Data by Country – Philippines". பார்த்த நாள் 2010-06-02.
 84. 84.0 84.1 Dolan, Ronald E. (Ed.). (1991). "Relations with Asian Neighbors". Philippines: A Country Study. Washington: GPO for the Library of Congress. Retrieved 2010-01-05 from Country Studies US Website.
 85. Aurea Calica. "Spain Starts Hiring RP Health Workers". www.newsflash.org. பார்த்த நாள் June 29, 2006.
 86. "Stock Estimate of Overseas Filipinos As of December 2009". Philippine Overseas Employment Administration. பார்த்த நாள் 2011-05-28.
 87. "Filipino Among Royal Guards of King of Spain". ABS CBN News. பார்த்த நாள் July 2, 2009.
 88. Leonard, John (2008-07-03). "OFW rights violation worsens under the Arroyo administration". Filipino OFWs Qatar. http://qa.filipinoexpats.com/node/940. பார்த்த நாள்: 2009-01-25. 
 89. Olea, Ronalyn (2008-10-25). "Middle East is ‘Most Distressing OFW Destination’ - Migrant Group". Bulatlat News. http://bulatlat.com/main/2008/10/25/middle-east-is-%E2%80%98most-distressing-ofw-destination%E2%80%99-migrant-group/. பார்த்த நாள்: 2009-01-25. 
 90. Torres, Estrella (2009-01-22). "Saudi Arabia will still need RP medical professionals". Business Mirror. http://businessmirror.com.ph/index.php?option=com_content&view=article&id=5017:saudi-arabia-will-still-need-rp-medical-professionals-&catid=33:economy&Itemid=60. பார்த்த நாள்: 2009-01-24. 
 91. Opiniano, Jeremaiah M. (2008-08-20). "Economist says crisis stretching OFWs’ ability to send money". Philippine Times. http://www.philippinetimes.com.au/default.asp?sourceid=&smenu=91&twindow=Default&mad=No&sdetail=830&wpage=1&skeyword=&sidate=&ccat=&ccatm=&restate=&restatus=&reoption=&retype=&repmin=&repmax=&rebed=&rebath=&subname=&pform=&sc=1759&hn=philippinetimes&he=.com.au. பார்த்த நாள்: 2009-01-24. 
 92. "DFA: 'Technicalities' blocking RP bid for OIC observer status". (2009-05-26). GMA News. Retrieved 2009-07-10.
 93. Balana, Cynthia. (May 26, 2009). "RP nears observer status in OIC – DFA". The Philippine Daily Inquirer. http://globalnation.inquirer.net/news/news/view/20090526-207265/RP-nears-observer-status-in-OIC----DFA. பார்த்த நாள்: 2009-07-10. 
 94. "General Profile of the Philippines : Geography". Philippine Information Agency.
 95. Central Intelligence Agency. (2009). "Field Listing :: Coastline". Washington, D.C.: Author. Retrieved 2009-11-07.
 96. Republic of the Philippines. Department of Tourism. [c. 2008]. Leyte is Famous For... at the Wayback Machine (archived ஏப்ரல் 27, 2012). (archived from the original on 2012-04-27). Retrieved 2010-03-21 from www.travelmart.net.
 97. "Submissions, through the Secretary-General of the United Nations, to the Commission on the Limits of the Continental Shelf, pursuant to article 76, paragraph 8, of the United Nations Convention on the Law of the Sea of 10 December 1982". United Nations Commission on the Limits of the Continental Shelf (28 May 2009). பார்த்த நாள் 29 May 2009.
 98. La Putt, Juny P. [c. 2003]. The 1990 Baguio City Earthquake. Retrieved 2009-12-20 from The City of Baguio Website.
 99. Newhall, Chris, James W. Hendley II, and Peter H. Stauffer. (2005-02-28). "The Cataclysmic 1991 Eruption of Mount Pinatubo, Philippines (U.S. Geological Survey Fact Sheet 113-97)". U.S. Department of the Interior. U.S. Geological Survey. மூல முகவரியிலிருந்து 2013-08-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-09.
 100. "Puerto-Princesa Subterranean River National Park". UNESCO World Heritage Centre. பார்த்த நாள் 2013-05-04.
 101. 101.0 101.1 Greenlees, Donald. (May 14, 2008). "Miners shun mineral wealth of the Philippines". The New York Times. http://www.nytimes.com/2008/05/14/business/worldbusiness/14iht-mine.1.12876764.html. பார்த்த நாள்: 2009-12-11. 
 102. Davies, Ed and Karen Lema. (2008-06-29). "Pricey oil makes geothermal projects more attractive for Indonesia and the Philippines". The New York Times. http://www.nytimes.com/2008/06/29/business/worldbusiness/29iht-energy.1.14068397.html. பார்த்த நாள்: 2009-12-18. 
 103. "Natural Resources and Environment in the Philippines". (n.d.). eTravel Pilipinas. Retrieved January 22, 2009.
 104. Chanco, Boo. (1998-12-07). "The Philippines Environment: A Warning". The Philippine Star. http://gbgm-umc.org/asia-pacific/philippines/ecophil.html.  Retrieved 2010-02-15 from gbgm-umc.org.
 105. Williams, Jann, Cassia Read, Tony Norton, Steve Dovers, Mark Burgman, Wendy Proctor, and Heather Anderson. (2001). "The Meaning, Significance and Implications of Biodiversity (continued)". Biodiversity Theme Report. CSIRO on behalf of the Australian Government Department of the Environment and Heritage. ISBN 0-643-06749-3. http://www.environment.gov.au/soe/2001/publications/theme-reports/biodiversity/biodiversity01-3.html. பார்த்த நாள்: 2009-11-06. 
 106. Carpenter, Kent E. and Victor G. Springer. (April 2005). "The center of the center of marine shore fish biodiversity: the Philippine Islands". Environmental Biology of Fishes (Springer Netherlands) 74 (2): 467–480. doi:10.1007/s10641-004-3154-4. 
 107. 107.0 107.1 Rowthorn, Chris and Greg Bloom. (2006). Philippines (9th ed.). Lonely Planet. p. 52. ISBN 1-74104-289-5. http://books.google.com/?id=aaUR07G0yAcC. 
 108. "Biological diversity in the Philippines". Eoearth.org. பார்த்த நாள் 2013-05-04.
 109. [1] [தொடர்பிழந்த இணைப்பு]
 110. BirdLife International. (2004). Pithecophaga jefferyi. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2009-1-7.
 111. Guinness says Philippine croc world's largest at the Wayback Machine (archived சூலை 11, 2012). [தொடர்பிழந்த இணைப்பு] (archived from the original [தொடர்பிழந்த இணைப்பு] on 2012-07-11). AFP via News.yahoo.com (2012-07-02). Retrieved on 2012-07-04.
 112. Conservation International. Center for Applied Biodiversity Science. [c. 2007]. "Philippines". In Biodiversity Hotspots. Retrieved 2009-12-20.
 113. Taguinod, Fioro. (2008-11-20). "Rare flower species found only in northern Philippines". GMA News. Retrieved 2009-12-14.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்பீன்சு&oldid=1650338" இருந்து மீள்விக்கப்பட்டது