சேவல் சண்டை
சாவக்கட்டு அல்லது சேவல் சண்டை என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஒரு விளையாட்டாகும். இதே போன்ற விளையாட்டுகள் வட அமெரிக்கா, ஆசியாவின் பல பகுதிகளிலும் நடத்தப்படுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] விளையாட்டு அமைப்பு
கிராமப்பகுதிகளில் இரு சேவல்களுக்கிடையிலான சண்டையை விளையாட்டாகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்து வந்தனர். போட்டியாளர்கள் தம் சேவல்களின் கால்களில் கூர்மையான சிறுகத்தியை கட்டி, சேவலை கையில் ஏந்தியபடி எதிர்செவலை மோதல்காட்டி கீழே தரையில் விட்டபின் சேவல்கள் ஆக்ரோசத்துடன் மோதும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். சேவல்களின் கால்களில் உள்ள கத்தி எதிர் சேவலின்மீது பட்டு காயங்களினால் சேவல் சோர்வடைந்து வீழும் அல்லது களத்தைவிட்டு ஓடும் சேவல் தோல்வியடைந்ததாக கருதப்படும்.
[தொகு] தடை
பிற்காலத்தில் இது சூதாட்டம் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்த விளையாட்டில் இரு பிரிவினர்களுக்கிடையே மோதல், கலவரம் என நடந்ததைத் தொடர்ந்து இவ்விளையாட்டிற்கு தமிழ்நாடு காவல்துறை தடைவிதித்துள்ளது.
[தொகு] திரைப்படம்
தமிழில் வெளியான ஆடுகளம் திரைப்படம் இச்சாவக்கட்டை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டது.