தேங்காய் எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Coconutoils.jpg

தேங்காய் எண்ணெய் என்பது சமையலின்போது பயன்படுத்தப்படக்கூடிய ஒரு வகை எண்ணெய்யாகும். இந்த எண்ணெய் தேங்காயில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

தயாரிக்கும் முறை[தொகு]

தேங்காய்களில் நன்றாக விளைந்த முற்றிய காய்களின் பருப்புகளை எடுத்து 10லிருந்து 15 நாட்களுக்கு வெய்யிலில் உலர்த்தி, உலர்த்திய தேங்காய்|தேங்காய் ப்பருப்புகளை எணெணெய் ஆட்டி எடுக்கும் ஆரவை நிலையத்தில், எண்ணெய் ஆட்டும் செக்கு இவற்றில் ஆட்டி கிடைக்கும் கொழுப்புத் திரவமே தேங்காய் எண்ணெய்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்_எண்ணெய்&oldid=1598819" இருந்து மீள்விக்கப்பட்டது