பால் (பானம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பால்

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது.

பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்பு சத்து நிறைந்த வெண்ணெயும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம்.

பால் கறத்தல்

பொருளடக்கம்

பால் தரும் விலங்குகள் [தொகு]

பின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது.

உலகம் முழுவதிலும் பால் உற்பத்தி [தொகு]

சிறுமி தன்னுடைய கையால் பால் கறக்கிறார்

உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. [1] தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

பால் உற்பத்திப் பொருட்கள் [தொகு]

பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது.பால் உற்பத்திப் பொருட்களாவன:

*தயிர்
*வெண்ணெய்
*மோர்
*பால் பை
*பால் கோவா
*பன்னீர்
*நெய்
*யோக்கட்

உலகம் முழுவதிலும் உள்ள எருமைப் பால் உற்பத்தி நிலவரம் 2007 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

எருமைப் பால் உற்பத்தி நிலவரம் 2007 வரையிலும்[2]
நாடுகள் உற்பத்தி (டன்களில்) குறிப்புகள்
இந்தியாவின் கொடி இந்தியா 59,210,000
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 20,372,000
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு 2,900,000 தோராயமாக
எகிப்தின் கொடி எகிப்து 2,300,000
நேபாளம் கொடி நேபாளம் 958,603
ஈரான் கொடி ஈரான் 241,500 தோராயமாக
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 220,462
இத்தாலியின் கொடி இத்தாலி 200,000 தோராயமாக
வியட்நாம் கொடி வியட்நாம் 32,000
துருக்கியின் கொடி துருக்கி 30,375
 உலகம் முழுவதும் 86,574,539 கிட்டத்தட்ட


குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]

  1. International dairy product prices are turning down: how far, how fast?, FAO Food outlook No.1, June 2006. www.fao.org. Retrieved on 21 July 2009.
  2. Livestock Production statistics, FAOSTAT, Food And Agricultural Organization of the United Nations. faostat.fao.org. Retrieved on 21 July 2009.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பால்_(பானம்)&oldid=1398810" இருந்து மீள்விக்கப்பட்டது