கொட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கொட்டை (பழக்கொட்டை) என்பது சில வகையான பழங்களில் தாமாக உடையாத கடினமான ஓட்டினால் சூழப்பட்ட விதையினைக் குறிக்கும். கொட்டைகள் மனித மற்றும் விலங்கினங்களுக்கு இன்றியமையாத சத்துணவாக அமைந்திருக்கின்றன. பல வகையான வறண்ட விதைகளும் பழங்களும் கூடக் கொட்டைகள் என்று பொதுவாக வழங்கப் பட்டாலும், தாவரவியல் அடிப்படையில் அவை கொட்டைகள் அல்ல.

பொதுவாக விதைகள் பழங்களில் இருந்து தனியே வெளிப்பட்டுவிடும் என்றாலும், கொட்டைகளைக் கொண்ட பழங்கள் தாமாகப் பிளந்து விதைகளை வெளியேற்றுவதில்லை. ஒரு பலக்கிய சூலகத்தில் இருந்து உருவாகும் கொட்டைகள் ஒரு கடினமான வெளிச்சுவற்றைக் கொண்டிருக்கும். உணவு மற்றும் சமையல் குறித்த வழக்கில் பொதுவாக பிரேசில் கொட்டை, பிசுத்தா கொட்டை போன்றவற்றையும் கொட்டைகள்[1] என்று சொன்னாலும், அவை தாவரவியல் அடிப்படையில் கொட்டைகள் அல்ல. பொது வழக்கில், கடின ஓட்டையும், உண்ணக்கூடிய மையப் பகுதியையும் கொண்ட எதனையும் கொட்டை என வழங்கும் வழக்கம் உள்ளது. [2]

[தொகு] தாவரவியல் வரையறை

தாவரவியல் அடிப்படையில் ஒரு கொட்டை என்பது பெரும்பாலும் ஒற்றை விதையைக் கொண்ட காய்ந்த பழத்தைக் குறிக்கும். இதில் சூலகப் பகுதி முதிர்ச்சி அடையும் போது மிகவும் கடினத்தன்மையைப் பெறுகிறது. அதோடு விதையானது சூலகச் சுவற்றோடு (ஓட்டோடு) ஒட்டிக் கொண்டோ ஒருமித்தோ அமைந்து விடுகிறது.

தாவரவியல் அடிப்படையில் அல்லாமல் பொதுவாகக் கொட்டைகள் என வழங்கப்பெறும் சில கொட்டைகள்:

[தொகு] References

  1. Alasalvar, Cesarettin; Shahidi, Fereidoon. Tree Nuts: Composition, Phytochemicals, and Health Effects (Nutraceutical Science and Technology). CRC. p. 143. ISBN 978-0-8493-3735-2. 
  2. Black, Michael H.; Halmer, Peter (2006). The encyclopedia of seeds: science, technology and uses. Wallingford, UK: CABI. p. 228. ISBN 978-0-85199-723-0. 
  3. Lina Sequeira. Certificate Biology 3. East African Publishers. pp. 130–. ISBN 9789966253316. http://books.google.com/books?id=7AfHwKm8vu0C&pg=PA130. Retrieved 29 July 2010. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டை&oldid=1016264" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்