பூசணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்சனரி யிலுள்ள
விளக்கத்தையும் காண்க!
| பூசணி | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
||||||||||||
| Species | ||||||||||||
பூசணி, சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.
- சொற்பொருள்
- பூசணிக் கொடியிலும், இலையிலும் பூஞ்சுணைகள் (மென்மையான சுணைகள்) இருக்கும். பூசுணைக்கொடி என்பது பூசணிக்கொடி என மருவிற்று.
- வேறுபாடு
- மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். பறை போல் உள்ள காய் என்பது பொருள்.
- வெள்ளைநிறப் பூசணிக்காய்தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.
[தொகு] பயன்கள்
- பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம்(soup) தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.
- தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன்படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர்.
- தமிழகத்தில் சாம்பல் பூசணி வகையை கண் திருட்டியிலிருந்து காக்கும் வண்ணம் இறைவழிபாட்டிற்கு பின், சாலைகளில் போட்டு உடைப்பர். அதனால் பல சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. தமிழக அரசு இங்ஙனம் சாலைகளில் பூசனிக்காய் உடைக்கக் கூடாது என்பதற்கு சட்டம் இயற்றியுள்ளது.
- அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பூசணிக் கலைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
(எ.கா)ஆலோவின்
[தொகு] பூசனிக்காய் படங்கள்
| விக்கி ஊடக நடுவத்தில் பூசணி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |