ராய் (புல்வகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராய் (Rye)
Secale cereale illustration.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலைத் தாவரம்
(தரப்படுத்தப்படாத) கொமெலினிட்டு
வரிசை: Poales
குடும்பம்: போவாசியே
துணைக்குடும்பம்: Pooideae
Tribe: Triticeae
பேரினம்: Secale
இனம்: S. cereale
இருசொற்பெயர்
Secale cereale
M.Bieb.

ராய் (Rye)(Secale cereale) என்பது தானியத்துக்காகவும், கால்நடைத் தீவனத்துக்காகவும் வளர்க்கப்படும் ஒருவகைப் புல்லினம் ஆகும். இது கோதுமை, பார்லி ஆகிய தாவர இனங்களுக்கு நெருங்கிய உறவுடையது. இதிலிருந்து பெறப்படும் தானியம், ராய் ரொட்டி, ராய் பீர், சிலவகை விஸ்கி, சிலவகை வொட்காக்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகிறது. இதனை மாவாக்கி உணவு தயாரிப்பது மட்டுமன்றி முழுத் தானியத்தை அவித்தும் உண்பதுண்டு.

வரலாறு[தொகு]

ராய், துருக்கியிலும், அதன் அயலிலும் தானாக வளரும் பல இனப் புல்வகைகளுள் ஒன்றாகும். பயிரிடப்பட்ட ராய் துருக்கியின் சில புதிய கற்காலத் தொல்லியல் களங்களில் சிறிய அளவுகளில் காணப்பட்டுள்ளது. ஆயினும், கிமு 1800-1500 ஆண்டளவிலான வெண்கலக் காலத்துக்கு முற்பட்ட தொல்லியல் களங்களில் இது மிக அரிதாகவே காணப்பட்ட்டுள்ளது. இது, தொடக்கத்தில் துருக்கியிலிருந்து கோதுமையுடன் கலந்து மேற்குப் பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. பிற்காலத்திலேயே இது தனியாகப் பயிரிடப்பட்டிருக்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_(புல்வகை)&oldid=1351996" இருந்து மீள்விக்கப்பட்டது