பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் IUCN |
|
| வகை | பன்னாட்டு அமைப்பு |
|---|---|
| துவக்கம் | அக்டோபர் 1948, பிரான்சு |
| தலைமையகம் | Rue Mauverney 28, 1196 Gland, சுவிட்சர்லாந்து |
| முக்கியமான நபர்கள் | வல்லி மூசா Julia Marton-Lefèvre |
| தொழில்துறை | இயற்கை வளம், வன உயிர் பாதுகாப்பு |
| வருவாய் | SFr 99,348 (2005) |
| ஊழியர்கள் | உலகெங்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேல் |
| அடைமொழி | உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு |
| வலைத்தளம் | www.iucn.org |
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (International Union for Conservation of Nature), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.
இச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் கிலான்டு பகுதியில் உள்ள செனிவா ஏரியில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 10, 000 துறை வல்லுநர்களை ஒருங்கிணைத்த உலகின் இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
[தொகு] சிகப்பு பட்டியல்
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆண்டுதோறும் சிகப்பு பட்டியல் என்ற பெயரில் பல்வேறு தாவர மற்றும் விலங்குகளின் சுழியல் தரத்திற்கேற்ப தர வரிசைப்படுத்தி வெளியிடுகிறது. கீழே அத்தர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.
- Lower risk = குறைந்த தீவாய்ப்பு
- Least Concern species = தீவாய்ப்புக் கவலை இல்லை
- Near Threatened species = அருகும்தருவாயில் உள்ளவை
- Conservation Dependent = காப்புநிலையைப் பொருத்தது
- Vulnerable species = அழியும் வாய்ப்புநிலையில் உள்ள இனம்; அழிவாய்ப்பு இனம்
- Endangered species = அருகிவிட்ட இனம்; அருகியுள்ள இனம்
- Critically endangered species = அருகும் எல்லையில் உள்ள இனம்
- Species extinct in the wild =இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்
- Extinct species =அற்றுவிட்ட இனம்; முற்றழிவுற்ற இனம்
- Possibly Extinct ==அற்று இருக்கக்கூடியது
- Critically Imperiled = நிலைமாறி அழிவுற உள்ளன
- Imperiled = அழிசரிவுற்றது
- Vulnerable = அழிதருவாயில் உள்ளன; அழிவுறக்கூடியன; அழிவாய்ப்புடையன
- Apparently Secure = நிலைபெற்றுள்ளதாகக் கருதப்ப்படுகிறது
- Secure = நிலைபெற்றுள்ளது; நிலை ஊன்றியுள்ளது
- Presumed Extinct = அற்றுவிட்டதாகக் கருதப்படுவன
- Nationally Critical == நாட்டளவில் அழியவுள்ளது
- Nationally Endangered ==நாட்டளவில் அருகிவிட்டது
- Nationally Vulnerable = நாட்டளவில் அழிவுறக்கூடியன; நாட்டளவில் அழிவாய்ப்புள்ளன
- Serious Decline = மிகவும் குறந்தநிலை; வலுவான சரிவு; பெருஞ்சரிவு
- Gradual Decline = சிறுகச்சிறுகக் குறைதல்; மெதுவான சரிவு
- Sparse = ஐது; ஐதாக உள்ளது; விலத்தி
- Range Restricted = வாழிடம் சுருங்குதல்
