தகலாகு மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Tagalog தகலாகு |
||
|---|---|---|
| நாடுகள்: | பிலிப்பீன்ஸ்; ஐக்கிய அமெரிக்கா | |
| பகுதி: | லூசோன் தீவின் நடு மற்றும் தெற்கு பகுதிகள் | |
| பேசுபவர்கள்: | பிலிப்பீன்சில் தாய்மொழியாக: 22 மில்லியன்[1]
|
|
| நிலை: | 51 | |
| மொழிக் குடும்பம்: | ஆஸ்திரோனீசிய மலாய-பொலினீசிய போர்னியோ-பிலிப்பீன்ஸ் நடு பிலிப்பீன்ஸ் Tagalog தகலாகு |
|
| எழுத்து முறை: | இலத்தீன் (தகலாகு வகை]]); வரலாற்றில் பெய்பெயின் எழுத்துகள் |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | பிலிப்பீன்ஸ் (பிலிப்பீனோ மொழி வகையில்) | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Komisyon sa Wikang Filipino (பிலிப்பீனோ மொழி ஆணையம்) | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | tl | |
| ISO 639-2: | tgl | |
| ISO/FDIS 639-3: | tgl | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
தகலாகு மொழி (Tagalog) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது பிலிப்பீன்சு மக்களில் 22 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழி 49 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர். இம்மொழியின் நியமான வகை (standardized form) பிலிப்பீனோ என்று பெயர்வைத்து பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆட்சி மொழியாகும். பிலிப்பீன்ஸ் நாட்டில் டகாலொக் தாய்மொழியில்லாத மக்களாலும் பொதுவாக பேசப்படும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000