தாண்டா
தாண்டா | |
---|---|
ஆள்கூறுகள்: 26°33′N 82°39′E / 26.55°N 82.65°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | அம்பேத்கர் நகர் |
ஏற்றம் | 78 m (256 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,516 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | அவதி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 224190 |
வாகனப் பதிவு | UP-45 |
தாண்டா (Tanda), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள தாண்ட வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2] இது காக்ரா ஆற்றின் கரையில் உள்ளது. இது மாவட்டத் தலைநகரான அக்பர்பூருக்கு வடகிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும்; அயோத்திக்கு தென்கிழக்கில் 60.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான லக்னோவுக்கு 182 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தாண்டா நகரம் கைத்தறி லுங்கி உற்பத்திக்கு பெயர் பெற்றது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகளும், 14,597 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 95,516 ஆகும். அதில் ஆண்கள் 49,429 மற்றும் பெண்கள் 46,087 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 938 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.66% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.60% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 27.03%, இசுலாமியர் 72.16%, சீக்கியர்கள் 0.43%, கிறித்தவர்கள் 0.22% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர். [3]
போக்குவரத்து
[தொகு]இரயில் நிலையம்
[தொகு]தாண்டா இரயில் நிலையம்[4] பைசாபாத், அயோத்தி, அக்பர்பூர் போன்ற நகரங்களுடன் இணைப்பு கொண்டுள்ளது.
சாலைகள்
[தொகு]தாண்டா நகரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் 233 ஏ, 232 மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2018.
- ↑ "Tehsil - Ambedkarnagar - India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-21.
- ↑ Tanda Population Census 2011
- ↑ Tanda Railway Station