நினைவுக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[Image:Egypt.HatshepsutsTemple.01.jpg|thumb|right|300px|இராணி [[ஆட்செப்சுட்டு]]வின் கல்லறைக் கோயில்]]
[[Image:Egypt.HatshepsutsTemple.01.jpg|thumb|right|300px|இராணி [[ஆட்செப்சுட்டு]]வின் கல்லறைக் கோயில்]]



17:01, 23 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

இராணி ஆட்செப்சுட்டுவின் கல்லறைக் கோயில்

கல்லறைக் கோயில் (Mortuary temples (or funerary temples) பண்டைய எகிப்தின் இறந்த பார்வோன்களுக்கு எழுப்படும் பிரமிடுகள் போன்ற கல்லறை நினைவிடங்களுக்கு அருகில் எழுப்பப்படும் கோயில் ஆகும். இக்கல்லறைக் கோயில், இறந்த பார்வோன்களின் பிந்தைய வாழ்க்கையின் போது இறை வழிபாடு செய்ய வேண்டி அமைக்கப்பட்டது.

வரலாறு

கல்லறக் கோயில்கள் கொண்ட தேர் எல் பகாரி நகரம்

பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) மற்றும் மத்தியகால எகிப்து இராச்சியத்தின் (கிமு 2055 – கிமு 1650) காலத்தில் தான் இறந்த பார்வோன்களின் சடலங்களை அடக்கம் செய்த பிரமிடுகளுக்கு மிக அண்மையில், பார்வோன்களின் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது இறைவழிபாடு செய்ய தனியாகக் கல்லறைக் கோயில்கள் நிறுவும் வழக்கம் ஏற்பட்டது. புது எகிப்து இராச்சியக் காலத்தில் ([[கிமு 1550 – கிமு 1077) பார்வோன்களின் சடலங்கள் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டதுடன், கல்லறைக் கோயில்கள் தனியாக வேறிடத்தில் நிறுவப்பட்டது. எகிப்தியர்கள் இக்கல்லறை கோயிலை பார்வோன்களின் மில்லியன் கணக்கான ஆண்டுகளின் மாளிகைகள் என அழைத்தனர்.[1]

தீபை நகரத்தில் நடைபெறும் ஒபெத் திருவிழாவின் போது, பண்டைய எகிப்தியக் கடவுளான அமூனின் படகை நிறுத்தும் இடமாகவும் கல்லறைக் கோயில்களை பயன்படுத்தப்பட்டது. முதல் கல்லறைக் கோயில் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அமென்கோதேப்பிற்கான (கிமு 1525–1504) கல்லறைக் கோயில் பண்டைய தேர் எல் பகாரி நகரத்தில் நிறுவப்பட்டது. இது எகிப்தின் பதினொன்றாம் வம்ச மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயில் அருகே உள்ளது.[2]

19ஆம் வம்ச பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறைக் கோயில் அபிதோஸ் நகரத்தில் உள்ளது. [3] இரண்டாம் ராமேசஸ் தனது கல்லறைக் கோயிலை கட்டிய கல்லறைக் கோயிலை ராமேசியம் என்பார்.[4]20-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் ராமேசஸ் தனது கல்லறைக் கோயிலை மெடிநெத் அபு நக்ரத்தில் கட்டினார்.[5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Wilkinson, Richard H. (2000). The Complete Temples of Ancient Egypt. Thames & Hudson. p. 25
  2. K. Kris Hirst. "Pharaoh Hatshepsut's Deir el-Bahri". பார்க்கப்பட்ட நாள் 2008-04-20.
  3. "Creatness eclipsed by magnitude". Al-Ahram Weekly. Archived from the original on 2006-12-10. பார்க்கப்பட்ட நாள் 2007-02-15.
  4. Guy Lecuyot. "THE RAMESSEUM (EGYPT), RECENT ARCHAEOLOGICAL RESEARCH". Archéologies d'Orient et d'Occident. Archived from the original on 2006-11-27. பார்க்கப்பட்ட நாள் 2007-03-07.
  5. Uvo Hölscher (1929). "Medinet Habu 1924-1928. II The Architectural Survey of the Great Temple and Palace of Medinet Habu (season 1927-28)". OIC (Chicago: University of Chicago Press) No. 5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினைவுக்_கோயில்&oldid=3202723" இலிருந்து மீள்விக்கப்பட்டது