சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி
சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி | |
---|---|
கிபி 8ஆம் நூற்றாண்டின் காதலர்களின் சிற்பம், திவாரா கோயில், சிர்பூர், சத்தீசுகர் | |
அமைவிடம் | சிர்பூர், மகாசமுந்து மாவட்டம், சத்தீசுகர், இந்தியா |
அருகில் உள்ள நகரம் | ராய்ப்பூர் |
ஆள்கூற்றுகள் | 21°20′43″N 82°11′05″E / 21.345225°N 82.184814°E |
கட்டப்பட்டது | 5–12ஆம் நூற்றாண்டு |
நிர்வகிக்கும் அமைப்பு | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி (Sirpur Group of Monuments) தொல்லியல் களமும், இந்து, சைனம் மற்றும் பௌத்த சமயங்களின், கிபி 5 முதல் 12ஆம் நூற்றாண்டுக் காலத்திய நினைவுச் சின்னங்களைக் கொண்டது. இது சத்தீசுகர் மாநிலத்தின் மகாசமுந்து மாவட்டம், சிர்பூர் எனும் சிற்றூரில் உள்ளது. [1] சிர்பூர் நினைவுச்சின்னங்களின் தொகுதி, சத்தீசுகர் மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில், மகாநதி ஆற்றின் கரை அருகே உள்ளது.[2][3]
பண்டய சிர்பூர் நகரம், தெற்கு கோசல நாட்டை ஆண்ட சரபாபூரிய அரசகுலத்தவர்களின் தலைநகராக கிபி 5 முதல் 6-ஆம் நூற்றாண்டு முடியவும், பின்னர் சந்திர குல மன்னர்களின் தலைநகராக 9 முதல் 12ஆம் நூற்றாண்டு முடிய இருந்தது. தெற்கு கோசல நாட்டின் சிர்பூர் நகரம் கிபி 5 முதல் 12 முடிய இந்து, சமண மற்றும் பௌத்த சமயத்தவர்களின் புகழிடமாக விளங்கியது.[1] கிபி 7-ஆம் நூற்றாண்டில் சீன பௌத்த அறிஞர் யுவான் சுவான் சிர்பூர் நகரத்திற்கு யாத்திரையாக வந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் சிர்பூர் நகரத்தில் 12 பௌத்த விகாரைகளும், 1 சமணக் கோயிலும், ஒரே கல்லால் செய்த புத்தர் மற்று மகாவீரர் சிற்பங்களும் மற்றும் 22 சிவன் கோயில்களும், 5 விஷ்ணு கோயில்கள், சக்தி மற்றும் தாந்திரிகக் கோயில்களும், தரையடி தானியக் களஞ்சியமும், 6-ஆம் நூற்றாண்டின் குளியல் வீடும் கண்டெடுக்கப்பட்டது.
இந்து சமய நினவுச் சின்னங்கள்
[தொகு]சிர்பூர் தொல்லியல் களத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிபி 7-ஆம் நூற்றாண்டின் இலட்சுமணன் கோயில், இராமர் கோயில், சிவன் கோயில், காந்தேஷ்வர் கோயில், பாலேஷ்வர் மகாதேவர் கோயில், சுரங் திலா கோயில்கள், சக்திக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பௌத்த & சமண நினைவுச்சின்னங்கள்
[தொகு]சிர்பூர் தொல்லியல் களத்தில் ஆனந்த பிரபு விகாரை, சுவஸ்திகா விகாரை, திவார் தேவ் விகாரை மற்றும் ஒரு சமணப் பள்ளியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அருகாட்சியகம்
[தொகு]சிர்பூர் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட நினைவுச் சின்னங்களைக் கொண்டு, சிர்பூரில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அருங்காட்சியகம் ஒன்றை பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்துள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Atula Kumar Pradhan and Shambhoonath Yadav (2013), Sirpur - A unique township of early medieval India, Proceedings of the Indian History Congress, Vol. 74 (2013), pp. 854-864
- ↑ Sirpur raipur.gov.in
- ↑ SIRPUR : A Goldmine of History பரணிடப்பட்டது 2014-02-14 at the வந்தவழி இயந்திரம் Prasar Bharti
- ↑ http://asi.nic.in/asi_monu_tktd_chts_laxman.asp
வெளி இணைப்புகள்
[தொகு]- Lakshmana Temple, Sirpur, Archaeological Survey of India