வயநாடு காட்டுயிர் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வயநாடு காட்டுயிர் காப்பகம்
—  தேசியப் பூங்கா  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் வயநாடு
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வயநாடு காட்டுயிர் காப்பகம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் வயநாடு பகுதியில் உள்ள ஒரு காட்டுயிர் காப்பகம். இது மைசூரில் இருந்து சுல்த்தான் பத்தேரி செல்லும் வழியில் உள்ளது. வயநாடு காட்டுயிர் காப்பகமே கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய காப்பகம். இது முத்தங்கா காட்டுயிர் காப்பகம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு கடமா எனப்படும் காட்டு மாடு, யானை, மான், புலி முதலிய விலங்குகள் காணப்படுகின்றன.

மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய வகை விலங்குகளும் பறவையினங்களும் உள்ளன. இது 1973-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்காப்பகத்தின் வடகிழக்குப் பகுதியில் கர்நாடகத்தைச் சேர்ந்த நாகர்கொளே, பந்திப்பூர் காப்பகங்களும் தென்கிழக்கில் தமிழகத்தின் முதுமலை காட்டுயிர் காப்பகமும் உள்ளது. இக்காப்பகத்தின் பரப்பளவு 345 சதுர கிலோ மீட்டர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.