மதன் கார்க்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதன் கார்க்கி வைரமுத்து
பிறப்பு மதன் கார்க்கி
மார்ச்சு 10, 1980 (1980-03-10) (அகவை 38)
இருப்பிடம் சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
குடியுரிமை இந்தியா மற்றும் ஆசுதிரேலியா
படித்த கல்வி நிறுவனங்கள்
பணி பாடலாசிரியர்,துணைப் பேராசிரியர்,மெல்லினம் நிறுவனர்.
பெற்றோர் வைரமுத்து
பொன்மணி
வாழ்க்கைத்
துணை
நந்தினி
பிள்ளைகள் ஹைக்கு கார்க்கி
வலைத்தளம்
http://karky.in

மதன் கார்க்கி (பிறப்பு: 1980) ஒரு தமிழ்ப் பாடலாசிரியர் மற்றும் மெல்லினம் எனும் கல்விக்கான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் கவிப்பேரரசு வைரமுத்துவின் புதல்வர்.

லயோலா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த மதன் கார்க்கி 2001-ஆம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்பு 2003-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார். இவர் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார்.

மெல்லினம் நிறுவனம்[தொகு]

மெல்லினம் என்பது மதன் கார்க்கி மற்றும் அவரது துணைவியார் நந்தினி கார்க்கி இருவரால் 2008-ஆம் ஆண்டு சேர்ந்து தொடங்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் ஐ-பாட்டி எனும் குழந்தைகளுக்கான பாடல்களை கொண்ட நூல் மற்றும் ஒலி குறுந்தகடுகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்[தொகு]

2013-ம் ஆண்டு கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்(Karky Research Foundation - KaReFo) என்கிற லாப-நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இது கணியியலில் மொழி குறித்தான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதையும், மாணவர்களிடையே இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது[1]. இவரும் இவரது மனைவி நந்தினி கார்க்கியும் இதன் அறங்காவலர்களாக இருக்கிறார்கள்[2].

இயற்றிய பாடல்கள்[தொகு]

ஆண்டு படம் பாடல்கள்
2009 கண்டேன் காதலை ஓடோடி போறேன்
இளமை இதோ இதோ அங்கதை அரம்பை,குலுக்கி குலுக்கி,வானம் புதிது & ஹோலோ அமிகோ
2010 எந்திரன் இரும்பிலே ஓர் இதயம் & பூம் பூம் ரோபோ டா
2011 பயணம் நீர்ச்சிறை
குருக்ஷேத்திரம் தீ தீராதே
180 அனைத்துப் பாடல்களும்
கோ என்னமோ ஏதோ & நெற்றிப் பொட்டில்
எங்கேயும் காதல் நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
வந்தான் வென்றான் அஞ்சோ ,முடிவில்லா மழையோடு & திறந்தேன் திறந்தேன்(பாதி)
ஏழாம் அறிவு தி ரைஸ் ஆஃப் டேமோ
மெளனகுரு அனாமிகா
2012 நண்பன் எந்தன் கண்முன்னே & அஸ்க் லஸ்கா
காதலில் சொதப்புவது எப்படி தவறுகளை உணர்கிறோம்,அழைப்பாயா அழைப்பாயா & பார்வதி பார்வதி
தடையறத் தாக்க கேளாமளே & காலங்கள்
நான் ஈ அனைத்துப் பாடல்களும்
முகமூடி மாயாவி மாயாவி & வாயமூடி சும்மா இருடா
சுந்தரபாண்டியன் றெக்கை முளைத்தேன்
சாருலதா அனைத்துப் பாடல்களும்
மாற்றான் கால் முளைத்த பூவே
துப்பாக்கி அண்டார்டிகா & கூகுள் கூகுள்
2013 புத்தகம் மனி இஸ் ஸோ ஃப்ன்னி
கடல் ஏலே கீச்சான் & அன்பின் வாசலே
ஒன்பதுல குரு விதவிதமாக‌
சேட்டை அகலாதே அகலாதே & போயும் போயும் இந்த‌
கெளரவம் அனைத்துப் பாடல்களும்
நான் ராஜாவாகப் போகிறேன் ராஜா ராஜா &யாரிவனோ
மாசாணி நான் பாட‌
சொன்னா புரியாது காலியான சாலையில் & கேளு மகனே கேளு
பொன்மாலைப் பொழுது மசாலா சிக்ஸ்,வார்க்கோதுமை & நீ இன்றி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஏன் என்றால் & நீ எங்கே போனாலும்
வணக்க‌ம் சென்னை ஒசக்க ஒசக்க‌ & ஐலேசா ஐலேசா
பாண்டிய நாடு ஃபை ஃபை கலாச்சிஃபை
நவீன சரஸ்வதி சபதம் சாட்டர்டே ஃபீவர்
என்றென்றும் புன்னகை வான் எங்கும் நீ & போதும் போதும்
பிரியாணி பாம் பாம் பேண்ணே
விழா செத்துப்போ
2014 புலிவால் கிச்சு கிச்சு &நேற்றும் பார்ட்டி
ஆஹா கல்யாணம் அனைத்துப் பாடல்களும்
நிமிர்ந்து நில் நெகிழியினில்
விரட்டு போதும் போதும்
கூட்டம் நிகற்புதப் பிணங்கள் & இத்தனை தூரம்
மான் கராத்தே மாஞ்சா போட்டுதான்

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_கார்க்கி&oldid=2211665" இருந்து மீள்விக்கப்பட்டது