புலிவால் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புலிவால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புலிவால்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜி. மாரிமுத்து
தயாரிப்புராதிகா சரத்குமார்
லிஸ்டின் ஸ்டெப்ஹன்
கதைசமீர் தாகிர்
இசைஎன். ஆர். இரகுநாதன்
நடிப்புபிரசன்னா
விமல்
ஓவியா
அனன்யா
இனியா
ஒளிப்பதிவுபோசன் கே. தினேசு
படத்தொகுப்புகிசோர் டி
வெளியீடுபெப்ரவரி 07, 2014 [1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புலிவால் தமிழ்த்திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மாரிமுத்து இயக்கியிருந்தார்[2]. இது நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படமாகும். இதில் பிரசன்னா, விமல், ஓவியா, அனன்யா, சூரி, இனியா,தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

கதைச்சுருக்கம்[தொகு]

விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பல்பொருள் அங்காடிக்கு மேலாளராக இருப்பவர் தம்பி ராமையா. விற்பனையாளர்களான விமலும், அனன்யாவும் ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். பெரிய தொழிலதிபரான பிரசன்னா, அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஓவியாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றித் திரியும் பிரசன்னாவின் குணாதிசயம் தெரியாமலேயே அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார் ஓவியா.

இந்நிலையில், பிரசன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி இனியாவைப் பேசி முடிக்கின்றனர். இந்த வேளையில் ஓவியாவைத் தன்னுடைய விருந்தினர் விடுதிக்கு வரவழைத்து அவளுடன் நெருக்கமாக இருக்கிறார் பிரசன்னா. இதைத் தன்னுடைய செல்போனில் படம் பிடித்தும் வைத்துக் கொள்கிறார்.

பின்னர், ஓவியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இனியாவைப் பார்க்கச் செல்கிறார் பிரசன்னா. அப்போது டிரைவர் மூலமாக பிரசன்னாவுக்கு இனியாவுடன் நிச்சயதார்த்தம் ஆன விஷயம் ஓவியாவுக்கு தெரியவர, பிரசன்னாவைப் போனில் அழைத்துத் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறித், தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இருவருக்குமுள்ள உறவை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறாள்.

பயந்துபோன பிரசன்னா ஓவியாவைச் சந்திக்க விரைந்து வருகிறான். இருவரும் காபி கடையில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இறுதியில் பிரசன்னா, ஓவியாவிடம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவைக் காண்பிக்க அதன்பிறகு அமைதியாகிறார் ஓவியா. பிரசன்னாவிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிடுகிறார்.

பிரசன்னாவும் கோபத்தில் எழுந்துபோக, அவருடைய செல்போன் அங்கேயே விழுந்துவிடுகிறது. இந்நிலையில், அங்கு வரும் விமல் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஓவியாவும், பிரசன்னாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந்த செல்போனில் இருப்பதால் அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாகத் தேடி வருகிறார் பிரசன்னா. இறுதியில், விமல்தான் அதை எடுத்தவர் என்று தெரியவர, விமலும் அதைக் கொடுக்க வருவதாகக் கூறிவிட்டு, கமலா தியேட்டருக்கு வருகிறார். ஆனால், பிரசன்னாவிடம் அதைக் கொடுக்காமலேயே திரும்பி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் செல்போனில் மின்சக்தி இறங்கிவிட, அதை ஏற்றுவதற்காக தன்னுடைய நண்பன் கடைக்கு செல்கிறார் விமல். அங்கு தனது நண்பனிடம் செல்போனை கொடுக்கிறார். அவர் செல்போனில் இருக்கும் வீடியோவை பார்த்து, அதை யூடியூப்பில் பதிவேற்றிவிடுகிறார். இதனால் அவமானம் தாங்க முடியாத ஓவியா தற்கொலைக்கு முயல்கிறார். பிரசன்னாவின் திருமணமும் தடைபட்டு விடுகிறது.

இறுதியில் ஓவியாவும், பிரசன்னாவும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதே மீதிக்கதை.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலிவால்_(திரைப்படம்)&oldid=3788413" இலிருந்து மீள்விக்கப்பட்டது