இஞ்சி இடுப்பழகி
இஞ்சி இடுப்பழகி / சைசு சீரோ | |
---|---|
![]() இஞ்சி இடுப்பழகி - சுவரொட்டி | |
இயக்கம் | பிரகாஷ் கோவேலமுடி |
தயாரிப்பு | பிரசாத் வீ பொட்லுரி |
கதை |
|
திரைக்கதை | கனிகா தில்லான் |
இசை | கீரவாணி (இசையமைப்பாளர்) |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | பிரவீன் புடி |
கலையகம் | பிவிபி சினிமா |
விநியோகம் | பிவிபி சினிமா |
வெளியீடு | 27 நவம்பர் 2015[1] |
ஓட்டம் | 125 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | |
மொத்த வருவாய் | மதிப்பீடு ₹8.5 கோடி[3] |
இஞ்சி இடுப்பழகி (Inji Iduppazhagi) 2015 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவானது. தெலுங்கில் "சைஸ் சீரோ" எனப் பெயரிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரசாத் வீ பொட்லுரி ஆவார். இத்திரைப்படத்தின் இயக்கம் பிரகாஷ் கோலேலமுடியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா செட்டி நடிக்க அவருடன் இணைந்து ஆர்யா, ஊர்வசி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
கதைச்சுருக்கம்
[தொகு]சௌந்தர்யா எனும் சுவீட்டி (அனுஷ்கா செட்டி) அதிக எடையுடைய, புத்திசாலியான, சுதந்திரமான பெண். அவளுக்கு அவளுடைய உடல் எடை பற்றி அதிக கவலை. இவ்வாறு இருக்க அவள் அபிஷேக் (ஆர்யா) மீது காதல் கொள்கின்றாள். முதலில் அபிஷேக் சுவீட்டியைப் பெண் பார்க்க வர அவனை அவள் நிராகரிக்கிறாள். பின்பு இருவரும் நட்பு கொள்கின்றனர். இதன்போதே அபிஷேக் சிம்ரன் எனும் பெண்ணை காதலிப்பது சுவீட்டிக்குத் தெரியவருகிறது. இவ்வாறு இருக்கையில் சைஸ் ஜீரோ எனும் நிறுவனத்தில் தனது எடையை குறைக்க இணைகிறாள் சுவிற்றி. இணைந்த பின் தனது தோழி உடல் எடை குறைப்பு மாத்திரைகளின் பயன்பாட்டால் சிறுநீரக செயலிழப்புக்குள்ளானது அவளுக்கு தெரியவருகிறது. அதன் பின்னர் சுவிற்றி சைஸ் ஜீரொ நிறுவனத்திற்கு எதிராக தனது போராட்டத்தைத் தொடர்கிறாள். அவளுடன் அபிஷேக் மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்து கொள்கின்றனர். இப்போராட்டத்தில் அவள் எவ்வாறு வெல்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.
நடிகர்கள்
[தொகு]அனுஷ்கா-சுவிற்றி"சௌந்தர்யா"
ஆர்யா-அபிஷேக்
பிரகாஷ் ராஜ்-சைஸ் ஷீரோ நிறுவனர்
சோனல் சவுகன்-சிம்ரன்
பவானி கங்கிரெட்டி-ஜோதி
ஊர்வசி-ராஜேஸ்வரி
அதிவி சேஷ்-சேகர்
பிரமானந்தம்-ஆன்ரொயிட் பாபா
அலி-வொவி
கோலப்புடி மாருதி ராவோ-மௌலி தாதா
ராவோ ரமேஷ்-சுவிற்றியின் தந்தை
தணிகெல்லா பரணி-மருத்துவர்
பூசனி கிருஷ்ணா முரளி-நிஜாம் நிரஞ்சன்
மாஸ்டர் பரத்-யாஹு
சிறப்புத் தோற்றம்
பொவி சிம்ஹா
ஹன்சிகா மோத்வானி
ஜீவா
காஜல் அகர்வால்
லக்ஷ்மி மஞ்சு
நாகர்ஜுனா
ராஜு சுந்தரம்
ராணா டகுபதி
ரேவதி
ஸ்ரீ திவ்யா
தமன்னா
சிஜு வில்சன்
சுதி கொப்பா
ஜஸ்டின் ஜோன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Inji Iduppazhagi Movie Database". Retrieved 26 November 2015.
- ↑ "INJI IDUPPAZHAGI (PG)". British Board of Film Classification. 24 November 2015. Retrieved 24 November 2015.
- ↑ "Three-day box office collection: Anushka's Size Zero fails to beat Kumari 21F record". International Business Times. 30 November 2015.