இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா? | |
---|---|
இயக்கம் | கோகுல் |
தயாரிப்பு | வி. எஸ். ராஜ்குமார் ஜெ. சத்திஷ் குமார் |
கதை | கோகுல் மதன் கார்க்கி (வசனம்) |
இசை | சித்தார்த் விபின் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | மகேஷ் முத்துசாமி |
படத்தொகுப்பு | லியோ ஜான் பால் |
கலையகம் | லியோ விஷன் ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் |
வெளியீடு | அக்டோபர் 2, 2013 |
ஓட்டம் | 1 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது 2012-இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதனை ரௌத்திரம் படத்தை இயக்கிய கோகுல் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாகவும். நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
கதை சுருக்கம்
[தொகு]சுமார் மூஞ்சி குமாராக விஜய்சேதுபதி, அவருக்கும் எதிர் வீட்டு நந்திதாவுக்கும் ஒரு தலைக் காதல், எதிர்ப்பு, அதனால் பிரச்சனைகள் ஒரு புறம், பாலாவாக மங்காத்தாவில் நடித்த அஸ்வின், அவருக்கும் சுவாதிக்கும் காதல், அவரது வேலையின் பிரச்சனைகள், குடித்து விட்டு வண்டியை ஓட்டி ஒரு பெண்மணிக்கு விபத்து ஏற்படுத்தி விடுகிறார், உயிருக்கு போராடும் இந்த பெண்மணியை காப்பாற்ற வேண்டும்
அஸ்வின் குடித்த ஒயின்சாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய்சேதுபதி செல்போனை திருடி தப்பித்து விடுகின்றனர், உயிருக்கு போராடும் பெண்மணிக்கு விஜய்சேதுபதியின் அரிய வகை ரத்தம் தேவை. கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவன்
இவை எல்லாம் சரியாகி விஜய்சேதுபதியின் ரத்தம் பெண்மணிக்கு கிடைத்ததா, அஸ்வினின் காதல் என்னவானது, கொலையாளிகள் சிக்கினரா, செல்போன் விஜய்சேதுபதிக்கு திரும்ப கிடைத்ததா, விபத்தில் சிக்கிய பெண்மணியின் கணவர் தப்பித்தாரா என்பது தான் கதை.
பாடல்கள்
[தொகு]# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "என் வீட்டுல" | லலிதானந்து | கானா பாலா | 04:10 | |
2. | "ஏன் என்றால்" | மதன் கார்க்கி | ஹரிஹரன் மாளவிகா | 04:32 | |
3. | "எங்கே போனாலும்" | மதன் கார்க்கி | நரேஷ் ஐயர், நாராயணன் | 04:41 | |
4. | "நாயே நாயே" (வேது சங்கர்) |