ரௌத்திரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரௌத்திரம்
இயக்கம்கோகுல்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைகோகுல்
இசைபாடல்கள்:
பிரகாஷ் நிக்கி
பின்னணி இசை:
ராஜா
நடிப்புஜீவா (திரைப்பட நடிகர்)
சிரேயா சரன்
மோனிகா
ஜெயப்பிரகாசு
லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவுஎன். சண்முகசுந்தரம்
கலையகம்சுப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுஆகத்து 12, 2011 (2011-08-12)
ஓட்டம்161 நிமிடங்கள்[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்

ரௌத்திரம் (Rowthiram) என்பது 2011 ஆம் ஆண்டு வெளிவந்த கோர் இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். புதுமுக இயக்குநர் கோகுல் இதனை இயக்கினார். மேலும் ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில், இத்திரைப்படத்தில் ஜீவா மற்றும் சிரேயா சரன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் ஜெயப்பிரகாசு, கணேஷ் ஆச்சர்யா ஆகியோர் இணை வேடங்களிலும் நடித்தனர்.[2] 2011 ஆகஸ்ட் 12 ஆம் திகதியில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.[3]"ரௌத்ரம்" என தெலுங்கிலும் "நிஜாபி த பைய்ட்டர்" என ஹிந்தியிலும் இத்திரைப்படம் ஒலிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் கலப்பான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதற்கான காரணம் கதையம்சம் வலுவிழந்து காணப்பட்டமை ஆகும். எனினும் ஜீவா மற்றும் சிரேயாவின் நடிப்பு இங்கு பாராட்டப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]