சண்டக்கோழி 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சண்டக்கோழி 2
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புவிஷால்
ஜெயந்திலால் கடா
கதைபிருந்தா சாரதி
எஸ். ராமகிருஷ்ணன் (உரையாடல்)
திரைக்கதைலிங்குசாமி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசக்தி
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்விசால் பிலிம் பேக்டரி
விநியோகம்பென் ஸ்டுடியோஸ்
வெளியீடுஅக்டோபர் 18, 2018 (2018-10-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சண்டக்கோழி 2 (Sandakozhi 2), லிங்குசாமியின் இயக்கத்தில், விஷால், ஜெயந்திலால் கடா , சுபாஸ்கரன் அல்லிராஜா ஆகியோரின் தயாரிப்பில் வெளியான ஓர் தமிழ்த்திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சக்தியின் ஒளிப்பதிவிலும், யுவன் சங்கர் ராஜா இசையிலும், பிரவீன் கே. எல்லின் படத்தொகுப்பிலும், 18 அக்டோபர், 2018 அன்று வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2017இல் தொடங்கப்பட்டது.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

ஆகத்து, 2014 ஆம் ஆண்டில் அஞ்சான் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் லிங்குசாமி இரண்டு கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.அதில் ஒன்று எண்னி ஏழு நாள், இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கை வைத்து இயக்குவதாக இருந்தார். மற்றொன்று 2005 ஆம் ஆண்டில் வெளிவந்து வியாபார மற்றும் விமர்சன ரீதியில் வெற்றி பெற்ற சண்டக்கோழி படத்தின் தொடர்ச்சி கதையாகும். இந்தத் திரைப்படத்தில் முந்தைய படத்தின் நாயகனான விஷாலையே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்தது.[1] பின் டிசம்பர் 2014 இல் இந்தத் திரைப்படத்தை விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் 2015 ஆம் ஆண்டின் துவக்கத்தில் படம் துவங்கப்பட இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.[2][3] ஆனால் அதன் பின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியதால் பணநெருக்கடி காரணமாக இந்தத் திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் இருந்து அந்த நிறுவனம் வெளியேறியது.[4] 2015 ஆம் ஆண்டின் மத்தியில் படத்தின் நடிகர்கள் தேர்வு துவங்கியது. ராஜ்கிரனை மீண்டும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் தேர்வுச் செய்தனர். இசையமைப்பாளராக டி. இமானையும், நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் சூரியையும் ஒப்பந்தம் செய்தனர். 2005 ஆம் ஆண்டில் கதாநாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின் இந்தத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருபதாகவும் முக்கிய பெண் கதாப்பத்திரத்திற்கு கீர்த்தி சுரேசை ஒப்பந்தம் செய்தனர்.[5][6][7][8]. இதற்கு முன்னதாக ஷாமிலி மற்றும் அக்சரா ஹாசன் ஆகியோரிடம் நடிக்க கேட்கப்பட்டது.[8][9] முக்கிய எதிராளிக் கதாப்பத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் கேட்கப்பட்டது.[10] முதலில் 2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் படவேலைகள் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஷால் தி இந்துவிற்கு அளித்த நேர்காணலில் பாத்தின் திரைக்கதை முதல் பாகத்தைவிட சிறப்பாக இருந்தால் மட்டுமே படப்பிடிப்பு துவங்கும் எனக் கூறினார்.[11]

சனவரி 2016 இல் விஷால் இந்தத் திரைப்படம் பெப்ரவரி மாதத்தில் துவங்க இருப்பதாகவும் இது மதுரை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சுற்றி நடக்கும் கதையாகும் எனக் கூறினார்.[12] பின் பெப்ரவரி மாதத்தில் லிங்குசாமி இந்தத் திரைப்படத்தில் போதிய கவனம் செலுத்த மறுப்பதால் நிறுத்த முடிவு செய்துள்ளதாக விஷால் கூறினார்.[13]. பின் அல்லு அர்ஜுனை வைத்து இரண்டு மொழிகளில் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தின் வேலைகள் முடிந்தவுடன் சண்டக்கோழி 2 படத்தின் வேலைகளைத் துவங்க உள்ளதாக தகவல்கள் வந்தன.[14][15][16] சூன், 2016 இல் இந்தத் திரைப்படம் மறுபடியும் துவங்க இருப்பதாகவும், ஒளிப்பதிவாளராக மதியும், இசையமைப்பாளராக இமானுக்குப் பதிலாக முதல் பாகத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் விஷால் கூறினார்.[17] பின் முக்கியப் பெண் கதாப்பத்திரத்தில் நடிக்க மஞ்சிமா மோகனிடம் கேட்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 2016 இல் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[5][6] சனவரி, 2017 இல் படப்பிடிப்பு துவங்க இருந்தது. ஆனால் விஷால் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிக்க முன்னுரிமை அளித்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.[18]. ஹரீஷ் பேரடி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய எதிராளிக் கதாப்பத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[19][20]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. Ramanujam, Srinivasa (7 December 2014). "Anjaan and after" – via www.thehindu.com.
  2. "Sandakozhi 2 - getting ready for another fight ..." www.behindwoods.com.
  3. Harikumar, Subramanian. "After Anjaan debacle, director Lingusamy to work with Karthi and Vishal!".
  4. Harikumar, Subramanian. "Producer Lingusamy: I'm ready to sell anything to get Sivakarthikeyan's Rajini Murugan out on time!".
  5. 5.0 5.1 "Keerthy Suresh bags Sandakozhi 2!". 16 December 2016.
  6. 6.0 6.1 "Manjima Clears The Air On Sandakozhi 2".
  7. "Shamlee to be roped in opposite Vishal?". 24 July 2015.
  8. 8.0 8.1 "Soori to play lead comedian in Sandakozhi 2". 18 June 2015.
  9. "Akshara Haasan approached for 'Sandakozhi 2'". 23 May 2015.
  10. "Sathyaraj in Sandakozhi sequel?". 26 July 2015.
  11. Naig, Udhav (30 August 2015). "Not getting into politics: Vishal" – via www.thehindu.com.
  12. "Vishal's 'Sandakozhi 2' to roll from February". 13 January 2016.
  13. "Status update on Sandakozhi 2 - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai" (in en-US). Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai. 2018-05-12 இம் மூலத்தில் இருந்து 2018-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180513011234/https://chennaivision.com/status-update-on-sandakozhi-2/. 
  14. Upadhyaya, Prakash. "Lingusamy opts out of 'Sandakozhi 2'; Vishal lodges complaint at producers' guild".
  15. "Vishal's Sandakozhi 2 dropped". 25 February 2016.
  16. "Sandakozhi 2: Vishals film with Lingusamy shelved".
  17. "Sandakozhi sequel revived!". 29 June 2016.
  18. "Sandakozhi 2 shooting updates". 24 November 2016.
  19. "Hareesh Peradi in Sandakozhi 2".
  20. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/varalaxmis-role-in-sandakozhi-2-will-have-negative-shades/articleshow/58896629.cms

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டக்கோழி_2&oldid=3848419" இலிருந்து மீள்விக்கப்பட்டது