தாத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாதா அல்லது தாத்ரி (Dhata or Dhatri), இந்து சமயத்தில் பன்னிரு ஆதித்தியர்களின் ஒருவரான சூரிய தேவனைக் குறிக்கும்.[1][2][3] உடல்நலம் மற்றும் மாந்திரீகத்தின் அதிபதி தாத்ரி தேவதை ஆவார். தாந்தீரிக இயந்திரங்கள் வரைவதன் மூலமும், வேத துதிகள் பாடுவதன் மூலமும் தாத்ரி தேவன் அழைக்கப்படுகிறார். அஸ்வமேத யாகம் போன்ற பெரிய வேள்விகளின் போது தாத்ரி தேவதை அடிக்கடி அழைக்கப்படுவர்.

மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற காவியங்களில் தாதா தேவதையை ஆதித்தர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]அருச்சுனன் மற்றும் கிருட்டிணன் சேர்ந்து காணடவ வனத்தை அழித்த விவரங்களை தாத்ரி தேவதை விளக்குகிறார். [2]காசியபர்-அதிதி தம்பதியரின் ஏழாவது மகனாக தாத்ரி என பாகவத புராணம் கூறுகிறது. தாத்ரிக்கு நான்கு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.[5]அக்னி புராணம் தாத்ரி தேவதையை கடக ராசிக்கும், மஞ்சள் நிறத்திற்கும் தொடர்பானவர் எனக்கூறுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. John Muir. Original Sanskrit Texts on the Origin and History of the People of India, Their Religion and Institutions, Volume 2. பக். 106. 
  2. 2.0 2.1 Mani p. 232
  3. Lochtefeld, James G. (2001l) (in en). The Illustrated Encyclopedia of Hinduism, Volume 1. The Rosen Publishing Group, Inc. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8239-3179-8. 
  4. Mani p. 265
  5. Bhagavata Purana, Book 6 - Sixth Skandha, Chapter 18
  6. Mani p. 265
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாத்ரி&oldid=3776690" இலிருந்து மீள்விக்கப்பட்டது