காண்டவ வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காண்டவக் காடு ( காண்டவ வனா, சமஸ்கிருதம் : खाण्डव, IAST ) அல்லது காண்டவபிரஸ்தா ( சமக்கிருதம்: खाण्डवप्रस्थ  ; IAST ) என்பது மகாபாரத காவியத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு பழங்கால காடு ஆகும். [1] இது நவீன கால தில்லி பிரதேசத்தில் யமுனை ஆற்றின் மேற்கே அமைந்துள்ளது. தங்கள் தலைநகரான இந்திரபிரஸ்தத்தைக் கட்ட பாண்டவர் இந்த காட்டை அழித்தனர். இந்த காட்டில் முன்பு நாக பழங்குடியினர் தட்சகன் என்ற மன்னின் தலைமையில் வசித்து வந்தனர். [2] அர்ஜுனனும் கிருஷ்ணனும் தீயினால் இந்த காட்டை அழித்தனர். இதனால் இந்த காட்டில் வசித்தவர்கள் இடம்பெயர்ந்தனர். இந்திரப்பிரஸ்தம் மற்றும் அத்தினாபுரத்திலிருந்து ஆட்சி செய்த குரு மன்னர்களிடம் நாக தட்சர்களின் பகைமைக்கு இதுவே மூல காரணமாக ஆனது.

அக்னி தேவன் தனது பசியைப் தீர்த்துக் கொள்ள காட்டை எரிக்க விரும்பினார் என்று கூறப்படுகிறது. அவரது பசியைப் போக்கும் வேறு எதுவும் இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும், அவர் அங்கு தீமூட்டும்போதும், இந்திரன் மழை பெய்வித்தார். இதனால் தீ அணைக்கப்பட்டது. எனவே மாறுவேடத்தில், அக்னி தேவன் கிருஷ்ணானனையும் அர்ஜுணனையும் அணுகி உதவி கேட்டார். காண்டவ வனத்தை பாதுகாக்கும் தெய்வம் ( தேவர் ) இந்திரன் என்று மகாபாரதம் கூறுகிறது, அதனால்தான் இப்பகுதி இந்திரப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது. [3] காட்டை எரிக்கும்போது, இந்திரன் அர்ஜுனனைத் தன் வச்ராயுதத்தால் தாக்கி காயப்படுத்தினார். [4] ஆனால் அர்ஜுனன் அந்த கடும் போரில் அனைத்து தேவர்களையும், கந்தர்வர்களையும், பேய்களையும் தோற்கடித்து முழு காட்டையும் எரித்தான். [5] அரியானாவின் கார்கோடாவில் உள்ள சபதேஸ்வர் மகாதேவர் கோயில் காண்டவ வனத்தின் ஒரு பகுதி ஆகும். [6] [7] [8]

அரியானா மாநிலத்தின் சோனிபத் மாவட்டத்தின் கார்கோடா வட்டத்தில் உள்ள காண்டா கிராமத்திற்கு காண்டவா வனம் என்று பெயரிடப்பட்டது. [9]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

  1. Sir William Wilson Hunter, The Indian empire: its history, people and products, Trubner, 1882, ... the five Pandava brethren of the Mahabharata burned out the snake-king Takshaka from his primeval Khandava forest ...
  2. The Mahabharata, Book 1 of 18: Adi Parva, Forgotten Books, ISBN 978-1-60506-611-0, ... I adore thee also, to obtain the ear-rings, O Takshaka, who formerly dwelt in Kurukshetra and the forest of Khandava! ... And Takshaka, surprised beyond measure and terrified by the heat of the fire, hastily came out ...
  3. Paryattan Kosh, Subodh Pocket Books, ISBN 978-81-7078-081-6, ... खाण्डव वन की रक्षा इन्द्र किया करते थे ...
  4. Mahavir Prasad Dwivedi, Bhārata Yāyāvara, Mahavirprasad Dvivedi Rachnavli, Volume 12, Kitāba Ghara, 1995, ISBN 978-81-7016-259-9, ... उस वन में इन्द्र का मित्र नाग-राज तक्षक रहता है ... खाण्डव वन जलाने के समय इन्द्र ने अपने वज्र की चोटों से अर्जुन के शरीर को ...
  5. "The Mahabharata, Book 1: Adi Parva: Khandava-daha Parva: Section CCXXX". sacred-texts.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-27.
  6. "ओम नम: शिवाय: छपड़ेश्वर मंदिर". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
  7. "ओम नम: शिवाय..शिवाला छपड़ेश्वर मंदिर". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
  8. "ओम नम: शिवाय.. शिवालय छप्पड़ेश्वर". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
  9. Automation, Bhaskar. "मुगलाें के खिलाफ खांडा में बनी थी सेना, अब 3 को सीएम करेंगे आर्म्ड प्रीपेटरी इंस्टीट्यूट का शिलान्यास" (in hi). Dainik Bhaskar. https://www.bhaskar.com/harayana/kharkhoda/news/army-made-in-khanda-against-mughlen-now-cm-will-make-3-cm39s-foundation-stone-for-the-armed-pre-pretatory-institute-024139-3043755.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டவ_வனம்&oldid=3756392" இலிருந்து மீள்விக்கப்பட்டது