உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சுதானந்த தாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சுதானந்த தாசர் ( Achyutananda Dasa ) இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த 16 ஆம் நூற்றாண்டின் கவிஞரும், வைணவத் துறவியுமாவார். இவர் கோபால குரு என்றும் அழைக்கப்பட்டார்.[1] கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்கும் ஆற்றல் உடையவராக கருதப்பட்ட இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவருமாவார். ஒடிசாவில் சமசுகிருத நூல்களை ஒடிய மொழியில் சாதாரண மக்களுக்காக மொழிபெயர்த்ததன் மூலம் ஆன்மீகத்தில் ஒரு புரட்சியை வழிநடத்தினார்.

ஒடிசா மக்களுக்காக பண்டைய இந்து வேதங்களை ஒடியாவில் மொழிபெயர்த்த ஆன்மீகம் மற்றும் இலக்கியமான பஞ்சசகாவின் பிரபலமான ஐந்து நண்பர்களில் இவரும் ஒருவர். அச்யுதானந்த தாசர் பஞ்சசகாவையும் [2] மேலும் ஏராளமான புத்தகங்களையும் எழுதினார். அவற்றில் பலவற்றை தீர்க்கதரிசனங்களின் புத்தகம் என்று சுருக்கமாக கூறலாம். ஆன்மீகம், யோகம், சடங்குகள், யந்திரம், தந்திரம், ஆயுர்வேதம் மற்றும் பிற பல்வேறு சாத்திரங்கள் போன்ற பல விஷயங்களில் இவரது பரந்த அறிவிற்காக இவர் மகாபுருஷன் (ஒரு சிறந்த நபர்) என்று அறியப்படுகிறார். இவரது முக்கிய படைப்புகளில் அரிவம்சம் (ஒடியாவில்), கைபர்த கீதை, கோபாலங்க-ஓகலா, குருபக்தி கீதை, அனகர்-சம்ஹிதா, சாஹயாலிசா-பாதாலா போன்றவை அடங்கும் [3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அச்சுதானந்தர் ஒரு பிரபலமான நபராக மாறியதும், இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி புராணமாக மாறத் தொடங்கியது. தனது காலத்தின் சமூக சூழ்நிலையைப் பற்றி எழுதிய சிலரில் ஒருவராக பிரபலமானவர்.[4] மேலும் இது இவரது எழுத்துக்களை பலர் படிக்கும் அறிவார்ந்த காரணமுமாகும். இவரது கவிதைகள் பெரும்பாலும் இவரைப் பற்றி ரகசியமாகவே இருந்தன. மேலும் குறியீடு அல்லது ஒப்புமைகளில் எழுதப்பட்டன. இவர் பிறப்பால் கோபால் சாதியைச் சேர்ந்தவர்.[5][6] ஆனால் பிற்காலத்தில் கரண் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.[7][6] இவரது குடும்பப்பெயரான "தாசன்" என்பதற்கு கடவுளின் வேலைக்காரன் எனப் பொருள்படும்.

பிறப்பு

[தொகு]

கஜபதி பேரரசன் புருசோத்த தேவன் ஆட்சிக் காலத்தின், ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில்,மகாநதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள திலகனா [8] என்ற கிராமத்தில் தீனபந்து குந்தியா மற்றும் பத்மாவதி ஆகியோருக்கு பிறந்தார். இது பல்வேறு அறிஞர்களால் கி.பி 1480 மற்றும் 1505 க்கு இடைப்பட்டதாக கருதப்படுகிறது.இவரது தாத்தா கோபிநாத மொஹந்தி, புரி ஜெகன்நாதர் கோயிலில் எழுத்தாளராக இருந்தார். ஜெகன்நாதர் கோயிலில் இவரது தாயார் செய்த பிரார்த்தனைக்குப் பிறகு இவர் பிறந்தார், மேலும் இவரது தந்தை அவரது கனவில் தெய்வீக பறவையான கருடன் ஒரு குழந்தையை கொண்டு வந்ததாக கனவு கண்டார். புராணத்தில் இவர் கருடனின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.

கல்வி

[தொகு]

அச்சுதானந்தர் புரியில் முறையான கல்வி கற்றார். பல சமகாலத்தவர்களைப் போலவே, இவர் தனது இளமை பருவத்தில் சைதன்யரைச் சந்தித்து அவரிடமிருந்து மந்திர தீட்சை பெற்றார் என்பது பெரும்பாலான நூல்களால் ஒப்புக் கொள்ளப்படுகிறது. இவர் ஒரு உட்கலிய வைணவர் (வைணவத்தின் பண்டைய ஒடிசா பள்ளி, ஜென்நாதர் கோயில் பாரம்பரியம்), கௌடியா வைணவர் (பெங்காலி வைணவம் என்று பொருள்) அல்ல என்பதை வேறுபடுத்துவது முக்கியம். இவர் பஞ்சசகாவின் இளையவராக ஆனார்.[9]

பஞ்சசகம்

[தொகு]

அச்சுனந்தர் கி.பி. 1450 மற்றும் 1550 க்கு இடையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவர் புகழ்பெற்ற வைணவ தத்துவமும், ஆன்மீகமும் மற்றும் ஒடிசாவின் இலக்கியமுமான பஞ்சசகாவை வடிவமைத்தவர்களில் ('ஐந்து நண்பர்கள்') ஒரு பகுதியாக இருந்தார். அச்சுதானந்த தாசருடன் சேர்ந்து, சிசு அனந்த தாசர், ஜசோபந்த தாசார், ஜெகன்நாத தாசர் மற்றும் பலராம தாசர் ஆகியோர் இதனை வடிவமைத்தனர்.

சான்றுகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. Deb, A.K. (1984). The Bhakti Movement in Orissa: A Comprehensive History. Orissa studies project. Kalyani Devi. பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.
  2. Chaini, p.7
  3. A Dictionary of Indian Literature: Beginnings-1850. p. 4.
  4. Chaini, p. 14
  5. Das, p.iii of preface
  6. 6.0 6.1 Mukherjee, P. (1981). The History of Medieval Vaishnavism in Orissa. Asian Educational Services. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0229-8. பார்க்கப்பட்ட நாள் 2022-01-27.
  7. Mukherjee, Sujit. A Dictionary of Indian Literature: Beginnings-1850. Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1453-9.Mukherjee, Sujit (1998). A Dictionary of Indian Literature: Beginnings-1850. Orient Blackswan. p. 4. ISBN 978-81-250-1453-9.
  8. Due to lPANDIT LATE KURAMANI PATHI SAHRAMA THE EXACT LOCATION OF BIRTH PLACE OF SRI ACHYUTANDA HAS BEEN IDENTIFIED.
  9. Sri Sri Mahapurusa Siddha Ashram, p.5
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சுதானந்த_தாசர்&oldid=3747761" இலிருந்து மீள்விக்கப்பட்டது