உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
National Capital Territory of Delhi தேசிய தலைநகர் பகுதி முதலமைச்சர்
இந்தியாவின் கொடி
தற்போது
ஆதிசீ

17 செப்டம்பர் 2024 முதல்
நியமிப்பவர்தில்லி ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்
இணையதளம்Delhi Government
இந்திய வரைபடத்தில் உள்ள தில்லி ஒன்றியப் பகுதி

இந்தியக் குடியரசின் தேசிய தலைநகர் பகுதி ஒன்றியப் பகுதியின், அரசுத் தலைவர் முதலமைச்சர் என்றழைக்கப்படுகிறார். தில்லி மாநில அரசின் செயலாட்சியர் பிரிவின் தலைவராக விளங்குகிறார். தற்போதைய தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாளன்று பதவியேற்றார்.

ஓரவையான தில்லி சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் அரசியல் கட்சியின் சட்டமன்றத் தலைவரே பெரும்பாலும் இப்பதவியை ஏற்பவர்.

தகுதி

[தொகு]

ஒருவர் முதல்வராக என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 84வது பிரிவு தெரிவிக்கிறது. தில்லி முதலமைச்சர் ஆக:

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • தில்லி சட்டசபையில் உறுப்பினராக (எம். எல். ஏ) இருத்தல் வேண்டும்.
  • குறைந்தளவு 30 வயது உள்ளவராக இருத்தல் வேண்டும்.

இந்தப் பதவியில் இருக்க வேண்டும் எனில், அவர் வேறு இந்திய ஒன்றிய அரசு, மாநில அரசுகளில் பணியில் இருக்கக் கூடாது.


தில்லி மாநில முதலமைச்சர்களின் பட்டியல்

[தொகு]

தில்லி உருவாக்கப்பட்ட 1952 ஆம் ஆண்டில் இருந்து, தற்போது வரை தில்லி முதல்வராக இருந்தவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.[1]

கட்சிகளுக்கான வண்ணக் குறியீடு
எண் பெயர் படம் ஆட்சிக் காலம்[2]
(கால அளவு)
கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள் சட்டமன்றம்
(Election)
1 சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் 17 மார்ச் 1952 – 12 பிப்ரவரி 1955
(2 ஆண்டுகள், 332 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு 1062 நாட்கள் இடைக்கால சட்டமன்றம் (1952–56)
2 குருமுக் நிகால் சிங் 12 பிப்ரவரி 1955 – 1 நவம்பர் 1956
(1 ஆண்டு, 263 நாட்கள்)
628 நாட்கள்
முதல்வர் பதவி அகற்றப்பட்டது, (1956–93)
3 மதன் லால் குரானா 2 திசம்பர் 1993 – 26 பிப்ரவரி 1996
(2 ஆண்டுகள், 86 நாட்கள்)
பாரதிய ஜனதா கட்சி 816 நாட்கள் முதலாவது சட்டமன்றம் (1993–98)
4 சாகிப் சிங் வர்மா 26 பிப்ரவரி 1996 – 12 அக்டோபர் 1998
(2 ஆண்டுகள், 228 நாட்கள்)
959 நாட்கள்
5 சுஷ்மா சுவராஜ் 12 அக்டோபர் 1998 – 3 திசம்பர் 1998
(0 ஆண்டுகள், 52 நாட்கள்)
52 நாட்கள்
6 ஷீலா தீக்சித் 3 திசம்பர் 1998 – 1 திசம்பர் 2003
(4 ஆண்டுகள், 363 நாட்கள்)
இந்திய தேசிய காங்கிரசு 5504 நாட்கள் இரண்டாவது சட்டமன்றம் (1998–2003)
1 திசம்பர் 2003 – 29 அக்டோபர் 2008
(4 ஆண்டுகள், 333 நாட்கள்)
மூன்றாவது சட்டமன்றம் (2003-08)
29 அக்டோபர் 2008 – 28 திசம்பர் 2013
(5 ஆண்டுகள், 60 நாட்கள்)
நான்காவது சட்டமன்றம் (2008–13)
7 அரவிந்த் கெஜ்ரிவால் 28 திசம்பர் 2013 – 14 பிப்ரவரி 2014
(0 ஆண்டுகள், 48 நாட்கள்)
ஆம் ஆத்மி கட்சி 48 நாட்கள் ஐந்தாவது சட்டமன்ம் (2013-14)
குடியரசுத் தலைவர் ஆட்சி) 14 பிப்ரவரி 2014 – 14 பிப்ரவரி 2015
(1 ஆண்டு, 0 நாட்கள்)
இல்லை 365 நாட்கள் கலைக்கப்பட்டது
(7) அரவிந்த் கெஜ்ரிவால் 14 பிப்ரவரி 2015 – 15 பிப்ரவரி 2020
(5 ஆண்டுகள், 1 நாள்)
ஆம் ஆத்மி கட்சி 3571 நாட்கள்
(3619 நாட்கள்)
ஆறாவது சட்டமன்றம் (2015–2020)
16 பிப்ரவரி 2020 – தற்போது பதவியில்

(4 ஆண்டுகள், 282 நாட்கள்)

ஏழாவது சட்டமன்றம் (2020–2025)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "States of India since 1947". பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 9, 2011.
  2. "States of India since 1947". பார்க்கப்பட்ட நாள் 9 March 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]