உள்ளடக்கத்துக்குச் செல்

குருமுக் நிகால் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்தார்
குருமுக் நிகால் சிங்
அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸை வரவேற்கும் குருமுக் நிகால் சிங், ஜெய்ப்பூர், 18 மார்ச் 1962
இராஜஸ்தான் மாநில ஆளுநர்
பதவியில்
1 நவம்பர் 1956 – 16 எப்ரல் 1962
முன்னையவர்மான் சிங்
பின்னவர்சம்பூர்ணாநந்தம்
தில்லி மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர்
பதவியில்
1955–1956
முன்னையவர்சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1895-03-14)14 மார்ச்சு 1895
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம்
As of 2 பிப்ரவரி, 2015
மூலம்: Former Governor of Rajasthan

குருமுக் நிகால் சிங் (Gurmukh Nihal Singh) (இந்தி: गुरुमुख निहाल सिँह, பஞ்சாபி மொழி: ਗੁਰਮੁਖ ਨਿਹਾਲ ਸਿੰਘ) இந்திய மாநிலமான இராஜஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவி வகித்தவர்.[1] மேலும் கட்சியின் தில்லி மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக 1955 முதல் 1956 முடிய பதவி வகித்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராவர்.[2] சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவுக்கு அடுத்து தில்லி மாநில முதல்வரான குருமுக் நிகால் சிங் பதவி வகித்த ஒராண்டில், அரசியல் அமைப்பு சட்டத்தில் 69வது திருத்தத்தில், தில்லியானது தேசியத் தலைநகர் பகுதி என அறிவிக்கப்பட்டதால், தில்லி மாநிலத் தகுதியை இழந்தது. எனவே குருமுக் சிங் நிகாலுக்கு இராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக பதவி வழங்கப்பட்டது.[3] குருமுக் நிகால் சிங் பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ਰਾਜਸਥਾਨ ਦੇ ਪਹਿਲੇ ਸਿੱਖ ਰਾਜਪਾਲ ਸ: ਗੁਰਮੁਖ ਨਿਹਾਲ ਸਿੰਘ". Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
  2. "Gurmukh Nihal Singh was the second Chief Minister of Delhi, and also served as the first Governor of the state of Rajasthan.". http://www.tribuneindia.com/news/perspective/why-punjabis-are-central-to-delhi-election/36387.html. 
  3. "Sixty-ninth amendment". Delhi Assembly official website. http://indiacode.nic.in/coiweb/amend/amend69.htm. பார்த்த நாள்: Feb 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருமுக்_நிகால்_சிங்&oldid=3802133" இலிருந்து மீள்விக்கப்பட்டது