சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ்
தில்லியின் முதலாவது முதலமைச்சர்
பதவியில்
17 மார்ச் 1952 – 12 பிப்ரவரி 1955
முன்னவர் புதுப் பதவி
பின்வந்தவர் குருமுக் நிகால் சிங்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் (Chaudhary Brahm Prakash Yadav) (1918–1993) இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார். மகாத்மா காந்தியைப் பின்பற்றி ஒத்துழையாமை இயக்கத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர்.[1][2] சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ் வடகிழக்கு தில்லி அருகே சகுர்பூர் எனும் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தில்லி மாநில முதலாவது முதலமைச்சராக 1952 முதல் 1955 முடிய பதவி வகித்தார்.[3][4] மேலும் இந்திய நடுவன் அரசில் உணவு, வேளான்மை மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் அமைச்சராகவும் பதவி வகித்தவர். சௌத்திரி பிரம்ம பிரகாஷ் யாதவ், இந்தியக் கிராமங்களில் பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சிகாக ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப் போராடியவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]