இராமாநந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமானந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராமானந்தர்
இராமானந்தர்
பிறப்புகிபி 1400[1][2]l
பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்புகிபி 1470 [2]
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
சமயம்இந்து சமயம்
Sect associatedவிசிட்டாத்துவைதம், வைணவம், இந்து சமயம்

பிரயாக்ராஜ் நகரத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த இராமாநந்தர், இளைஞனாக இருக்கையில் வீட்டை விட்டு வெளியேறி, துறவு வாழ்க்கை மேற்கொண்டு, வேத நூல்கள், இராமானுஜரின் விசிட்டாத்துவைதம் மற்றும் யோக நுட்பங்களைப் படிப்பதற்காக வாரணாசிக்குச் சென்றார். படிப்பை முடித்த இராமானந்தர் கற்பிக்கத் தொடங்கினார். அவர் தனது மாணவர்களுடன் சாதி வேறுபாடுகள் பொருட்படுத்தாமல் சேர்ந்து உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடித்தார். எனவே இவர் இராமானந்த சம்பிரதாயத்தை நிறுவினார். இச்சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களை இராமானந்திகள் என்று அழைப்பர்.[3]

இராமானந்தரின் போதனைகள் இராமானுஜரின் போதனைகளைப் போலவே இருந்தன. சாதாரண மக்களும் சாஸ்திர அறிவை பெற வேண்டும் எனும் நோக்கில் சமசுகிருத மொழியில் கூறாது, இந்தி மொழியில் கற்பித்தார். இவரது நேரடி 12 சீடர்களில் ஒரு பெண், செருப்பு தைக்கும் தொழிலாளியான ரவிதாசர் மற்றும் இசுலாமியரான கபீர் அடங்குவர்.

இராமானந்தரது முயற்சியால் வட இந்தியாவில் வைணவம் பரவியது. இவர் இராமர் சீதை வழிபாட்டை பரப்பினார். சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார். இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார். சமயக் கருத்துகளை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ronald McGregor (1984), Hindi literature from its beginnings to the nineteenth century, Otto Harrassowitz Verlag, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3447024136, pages 42-44
  2. 2.0 2.1 Schomer and McLeod (1987), The Sants: Studies in a Devotional Tradition of India, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120802773, pages 4-6
  3. Ramananda, Hindu philosopher
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமாநந்தர்&oldid=3789621" இலிருந்து மீள்விக்கப்பட்டது