உள்ளடக்கத்துக்குச் செல்

யாதவப் பிரகாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாதவப் பிரகாசர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அருகில் உள்ள திருப்புட்குழி எனும் ஊரில் வாழ்ந்த அத்வைத வேதாந்தி ஆவார். இவரது முக்கியமான சீடர்களராக விளங்கியவர்களில் இராமானுசர் மற்றும் அவரது சிறிய தாயாரின் மகன் கோவிந்தன் எனும் எம்பார் ஆவார். யாதவப் பிரகாசர் வேத, உபநிடதங்களுக்கு வாக்கியங்களுக்கு அத்வைதக் கண்ணோட்டத்தில் பொருள் கூறும்போதெல்லாம், இராமானுசர் அதனை மறுத்து சரியான விளக்கம் கூறினார். இதனால் சினமுற்ற யாதவப் பிரகாசர், இராமானுசரை தன் குருகுலத்திலிருந்து நீக்கி வைத்தார்.

பின்னர் இராமானுசர் திருக்கச்சி நம்பிகள், ஆளவந்தார் திருக்கோட்டியூர் நம்பி போன்ற வைணவ குருமார்களிடம் வடமொழி வேதங்கள் மற்றும் தமிழ் மொழி வேதங்களைப் பயின்று உபய வேதாந்தியானார் (உ. வே).

பின்னர் ஆளவந்தாரின் திருவுள்ளப்படி, இராமானுசர் திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை வழிநடத்தி வந்தார்.

இந்நிலையில் யாதவப் பிரகாசர் தம் தாயாரின் அறிவுரையை ஏற்று, இராமானுசரை அணுகி வைணத்தில் இணைந்து, அவரது சீடர்களில் ஒருவரானார். இராமானுசர் யாதவப் பிரகாசருக்கு துறவுச் சடங்குகளைச் செய்து, முக்கோல், துவராடைகளைத் தந்து உபதேசித்து, கோவிந்த ஜீயர் எனத் திருப்பெயரும் அருளினார். அவரை யதிதர்ம சமுச்சயம் என்னும் நூலை சாத்திர விரோதமின்றிச் செய்யும்படி நியமிக்க, அவரும் அவ்வாறே செய்து அளித்தார். பின் குறுகிய கால அளவிலேயே யாதவப் பிரகாசர் பரமபதம் அடைந்தார். [1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. யாதவப் பிரகாசர்
  2. ராமானுஜர் வரலாறு: குருவை மிஞ்சிய சீடர்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாதவப்_பிரகாசர்&oldid=4057280" இலிருந்து மீள்விக்கப்பட்டது